கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (09-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 09, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களை மாற்றம் செய்தல் பற்றி யோசிப்பீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மனதில் எண்ணிய காரியங்களை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




அஸ்வினி : தெளிவு பிறக்கும். 


பரணி : துரிதம் ஏற்படும். 


கிருத்திகை : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 09, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் மூலம் மாற்றம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கணித துறைகளில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவீர்கள். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பாடங்களில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : குழப்பம் குறையும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 09, 2022



கடந்த கால நினைவுகள் மனதில் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : சேமிப்பு குறையும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 09, 2022



வியாபார பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் ஒருவிதமான குழப்பம் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களில் இழுபறிகள் ஏற்படும். பிறருக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூசம் : இழுபறிகள் ஏற்படும். 


ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 09, 2022



உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பொது காரியங்களில் மேன்மை உண்டாகும். தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். வெளியூர் பயணங்களால் லாபகரமான சூழல் அமையும். நினைத்த காரியம் கைகூடும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : மதிப்பு அதிகரிக்கும்.


பூரம் : சேமிப்பு மேம்படும். 


உத்திரம் : ஆதரவான நாள்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 09, 2022



அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 




உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும். 


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 09, 2022



உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




சித்திரை : வாய்ப்புகள் கைகூடும். 


சுவாதி : மாற்றமான நாள்.


விசாகம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 09, 2022



உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். முக்கியமான பொருட்களை கவனத்துடன் கையாளவும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : பதற்றமின்றி செயல்படவும். 


அனுஷம் : புரிதல் உண்டாகும்.


கேட்டை : சோர்வு ஏற்படும். 

---------------------------------------



தனுசு

டிசம்பர் 09, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிறமொழி தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : மேன்மை ஏற்படும்.


பூராடம் : ஈடுபாடு உண்டாகும்.


உத்திராடம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 09, 2022



மனை சார்ந்த கடன் உதவி கிடைக்கும். வாசனை திரவியங்களின் மீது ஒருவிதமான ஆர்வம் ஏற்படும். புதிய ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




உத்திராடம் : உதவி கிடைக்கும்.


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 09, 2022



உடன்பிறந்தவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். வியாபார பணிகளில் புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.


சதயம் : திறமைகள் வெளிப்படும். 


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 09, 2022



குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரங்களில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்




பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திரட்டாதி : காலதாமதமான நாள்.


ரேவதி : விவேகத்துடன் செயல்படவும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...