கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (11-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (11-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 11, 2023




மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.


கிருத்திகை : பயணங்கள் ஈடேறும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 11, 2023




உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

 

ரோகிணி : திருப்பங்கள் உண்டாகும்.

 

மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 11, 2023




உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எழுத்து தொடர்பான துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான செயல்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். 


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------

 



கடகம்

ஜனவரி 11, 2023




வியாபார பணிகளில் தனலாபம் மேம்படும். எந்தவொரு காரியத்திலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




புனர்பூசம் : தனலாபம் மேம்படும். 


பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 11, 2023




திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். முயற்சியில் அலைச்சலும், அனுபவமும் அதிகரிக்கும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகனம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மகம் : அனுபவம் அதிகரிக்கும். 


பூரம் : உதவி கிடைக்கும். 


உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 11, 2023




சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். தனவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் பொறுமை அவசியம். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். தனம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : குழப்பங்கள் குறையும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 11, 2023




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


சுவாதி : இழுபறிகள் குறையும்.


விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 11, 2023




அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களுடைய தொடர்புகளின் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றம் ஏற்படும். கடுமையான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். முயற்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : மாற்றமான நாள்.


கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 11, 2023




உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். தனிப்பட்ட கருத்துக்களை கூறும்போது நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : உயர்வான நாள்.


பூராடம் : அலைச்சல்கள் மேம்படும்.


உத்திராடம் : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------




மகரம்

ஜனவரி 11, 2023




சிந்தனைகளில் குழப்பம் ஏற்படும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வித்தியாசமான பொருட்கள் மீதான ஆர்வத்தினால் விரயங்கள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். கவலைகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




உத்திராடம் : குழப்பமான நாள்.


திருவோணம் : புரிதல் உண்டாகும்.


அவிட்டம் : விரயங்கள் ஏற்படும்.

---------------------------------------

 



கும்பம்

ஜனவரி 11, 2023




உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உலக நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றங்கள் பிறக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பும், முன்னேற்றமும் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.

 

பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 11, 2023




உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் மீதான அவப்பெயர் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஒப்பந்த பணிகளில் இழுபறிகள் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : ஆதரவான நாள்.


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...