கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அமைச்சரவை மாற்றம் - 3 அமைச்சர்கள் ராஜினாமா - இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு (Union Cabinet Reshuffle - 3 Ministers Resign - Additional Charge to Union Ministers)...



மத்திய அமைச்சரவை மாற்றம் - 3 அமைச்சர்கள் ராஜினாமா - இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு (Union Cabinet Reshuffle - 3 Ministers Resign - Additional Charge to Union Ministers)...

 

3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

 

நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் ராஜினாமா


 மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் போட்டியிட்டிருந்தனர். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கு ஐந்து மாநில தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். அதில் பலர் வெற்றி பெற்றிருந்தனர்.

பிரகலாத் படேல்


இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.


நரேந்திர தோமர்

இந்நிலையில் அமைச்சர் நரேந்திர தோமர் ராஜினாமாவை அடுத்து, அர்ஜூன் முண்டாவுக்கு வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்திய போது நரேந்திர சிங் தோமர் தலைமையிலான விவசாயத்துறை அமைச்சகம்தான் அதைக் கையாண்டது. இத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷோபா கரந்த்லாஜே உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜீவ் சந்திரசேகர் ஜல் சக்தி துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரகலாத் படேல் ஜல்சக்தித் துறை அமைச்சராக இருந்தார்.


ரேணுகா சிங்


ரேணுகா சிங் பழங்குடியின விவகார அமைச்சகத்தின் இணையமைச்சராக இருந்த நிலையில் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பாரதி பவார் இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ரேணுகா சிங் சத்தீஷ்கர் மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் உள்ளது.


 மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண் துறையை கவனிப்பார்

 

 தொழில்துறையை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கவனிப்பார்

 

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜல் சக்தி துறை இணை  பொறுப்பை கவனிப்பார்

 

மத்திய இணை அமைச்சர் பார்தி பிரவின் பவார் பழங்குடியினர்   நலத்துறையை கவனிப்பார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...