கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Increase in Journalist Family Assistance Fund to Rs.10 Lakhs - Tamil Nadu Govt



பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி ரூ.10 லட்சமாக அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு 


Increase in Journalist Family Assistance Fund to Rs.10 Lakhs - Tamil Nadu Govt


பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.


20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்.


15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.7.5 லட்சம் குடும்ப நிதி உதவி.


 5 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் - அரசாணை வெளியீடு.


இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சருக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.


அரசின் கவனமான பரிசீலனைக்கு பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது. பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும். 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5.00.000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும். 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2.50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பநாபிரம் மட்டும்) என்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...