கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Has DMK dared to lose its strong vote bank?



பலமான வாக்கு வங்கியை இழக்க துணிந்துவிட்டதா தி.மு.க.?


பொறுப்பாளர் ஒருவரது வாட்ஸ்அப் பதிவு கீழே... பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது


கடந்த இரு வாரங்களாக சிபிஎஸ் ஒழிப்பு பிரச்சாரத்துக்காக உறுப்பினர் சந்திப்புக்காக பல்வேறு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க நேர்ந்தது. 


 திமுக, அதிமுக, விசிக, பாமக, பாஜக, நாதக ஆகிய பல கட்சி அபிமானிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் இருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடிய போது கிடைத்த தகவல்கள்.


# கலைஞர் தனது ஆட்சி காலத்தில் நிறைய அரசு பணிகளை உருவாக்கினார் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.


# ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்தாலும் நிறைய உரிமைகளை ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு கலைஞர் ஆட்சி காலத்தில் தந்திருக்கிறார்.


# கலைஞர் தலைமையிலான திமுக அவ்வப்பொழுது தோற்ற போதும், மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி கணிசமாக அவருக்கு உதவி இருக்கிறது. 


இதை கலைஞர் அவர்களும் பதிவு செய்திருக்கிறார். செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்திலேயே பதிவு செய்து இருக்கிறார்.


 தற்போதைய தேர்தல் வரை உதவி இருக்கிறது என்பதை ஜாக்டோ ஜியோ வாழ்வாதார மாநாட்டில் இன்றைய முதல்வர் அவர்களே தெரிவித்துள்ளார்.


 # கலைஞர் செய்த செயல்களுக்காக அவருக்கென்று அரசு ஊழியர் ஆசிரியர் வாக்கு வங்கி இருந்தது. தற்போதைய முதல்வர் பொறுப்புக்கு வந்த பிறகு எவ்வித கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக இழப்புகளே அதிகமாக உள்ளன.


# பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தும் வாக்குறுதி குறித்து நிதியமைச்சர்கள் திரு. பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும், திரு. தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த கருத்துகள் சுமார் ஆறு லட்சம் ஊழியர்கள் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. 





# மத்திய அரசை காரணம் காட்டுவதையோ, குழு அமைப்பதையோ ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நம்பவில்லை.  தாங்கள் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றனர். அரசாணை பிறப்பித்தால் மட்டுமே நம்பப் போவதாக தெரிவிக்கின்றனர். 


# தந்தைக்கு வாக்களித்ததால் மகனுக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் இல்லை இல்லை. 


#  இந்த வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்றால் அவருடைய ஆட்சிக் காலத்தில் ஏதாவது செய்தாக வேண்டும். 


பழைய கதைகளை சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாது.


# 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட கர்நாடக மாநிலத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் கிடைக்கவில்லை. 


# மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்களால் புதிய வாக்கு வங்கி வேண்டுமானால் உருவாகலாம். ஆனால் ஆசிரியர் அரசு ஊழியர் வாக்கு வங்கி சிதறி பல கட்சிகளுக்கு செல்லும்.


# ஒன்பதரை லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்களில் ஆறரை லட்சம் பேர் சி.பி.எஸ் ஊழியர்கள். அவர்கள் நம்பிக்கை துரோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக உணர்கிறார்கள். 


மீதம் உள்ள மூன்று லட்சம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களும் திருப்தியாக இல்லை சரண்டர், ஊக்க ஊதிய உயர்வு போன்றவை நிறுத்தப்பட்ட பாதிப்புகளால் மனம் வெறுத்து உள்ளனர்.


# பட்டயக்கல்வி முடித்து பணியில் சேர்ந்த செவிலியர்கள், பொறியியல் துறை பணியாளர்கள் அனைவருக்கும் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1.6.2009 முதல் ஆறாவது ஊதியக் குழுவில் ரூ.4200 தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ரூ.2800 தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது.


# கண்டிப்பாக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வார் என ஆளுங்கட்சிக்கு ஆதரவான சங்க பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அமைச்சர்களின் பேச்சு வேறு விதமாக உள்ளது.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் புலம்பல்கள் அவர்கள் குடும்ப வாக்குகளையும் நிச்சயம் திசை திருப்பும்.


பழைய ஓய்வூதியம் குறித்த சாதகமான அரசாணைகள் வெளியானால் மட்டுமே ஆதரவு தொடரும் என்பது தான் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் தற்போதைய  மனநிலையாக உள்ளது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Model QP regarding - State SLAS team information

 மாநில அடைவு தேர்வு மாதிரி வினாத்தாள் தொடர்பாக மாநில SLAS குழுவின் தகவல்  SLAS  Model  Question Paper regarding - State SLAS team informatio...