கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் - தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியீடு

 

 

தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் - தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியிடுதல் - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்


Tamil Nadu Ministerial Services - Promotion to the post of Assistant - Eligible candidates as on 15.03.2025 - Publication of the list of selected candidates (Drawl of Panel to the post of Assistant) - Regarding - Tamil Nadu Joint Director of School Education (Staff Group) Proceedings 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,

ந.க.எண். 012828/ அ4/ இ3/ 2025-5, நாள். 02.05.2025

பொருள்: தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / - சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்- தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியிடுதல் - தொடர்பாக.


பார்வை:

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.012828/94/3/2025-1, நாள். 05.03.2025


2. பள்ளிக்கல்வி துறை இயக்ககம்/ வாரியம் அலுவலக தலைவர்களிடமிருந்தும், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துருக்கள்.


3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண். 012828/14/3/2025-4, நாள். 22.04.2025


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதிகள், விதி 5(b) ன் படி உதவியாளர் பதவி உயர்வு மற்றும் விதி 9 ன் படி சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-III லிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்குதல் சார்ந்து 15.03.2025 நிலவரப்படி தகுதிவாய்ந்த நபர்கள் விவரங்களை அனைத்து அலுவலர்களிடமிருந்து பார்வை 2ல் காணும் கருத்துருக்கள் மூலம் வரப்பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) சட்டம் 2016-ன் கீழ் பிரிவு 40(2)-ன்படி பார்வை 3ல் காணும் செயல்முறையின்படி முன்னுரிமைப் பட்டியல் (SENIORITY LIST) வெளியிடப்பட்டது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை

 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ச...