700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம் பெறும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணிக்க வேண்டும் - தேர்தல் தேதி அறிவித்த போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டு பேசினார்.
5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி!
வருசநாடு மலைப்பகுதியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்
.
ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.
அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.
தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். பில் ஓக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
3 மணி நேரம் பயணம் செய்து வருசநாடு வாக்குச்சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் செல்கிறார்கள். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு செல்ல 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.