கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டமன்றத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு பெரியகருப்பன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



 ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு பெரியகருப்பன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 


ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு.பெரியகருப்பன் வழக்கு


நாளை அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


 திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் சுமார் 83,374 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்குகள் கூடுதலாக, அதாவது 83,375 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், அந்த தொகுதியில் வென்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில் மறுசரிபார்ப்புச் செயல்முறை தொடர்பாக பதிவான காணொளி காட்சிகளை பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.


வழக்கின் போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பத்தூர் என்ற பெயரில் 185 மற்றும் 50 என்ற எண்களுடன் இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தபால் வாக்குச்சீட்டு தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மற்றொரு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த வாக்குச்சீட்டு அங்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.


அந்த வாக்கு சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த வாக்கு எண்ணப்பட்டிருந்தால் இறுதி முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று வாதிட்டார்.


 இதையடுத்து, திருப்பத்தூர் என்ற பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கு தொடர்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது பெரியகருப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகாரை ஏன் பரிசீலிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற அமைச்சர்

 

 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற அமைச்சர்


சிவகங்கை : திருப்பத்தூரில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.


சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்றார்.


திருப்பத்தூரில் தவெக - திமுக இடையே நீண்ட இழுபறி நிலவி வந்த நிலையில், பெரிய கருப்பன் அவர்கள் தோல்வி.



TNLA Election 2026 - Leading Status



 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம் 


TNLA Election 2026 - Leading Status


இதே இணைப்பில் Update செய்யப்படும். தொடர்ந்து முன்னிலை நிலவரம் அறிந்து கொள்ளலாம்


இரவு 09.50 மணி நிலவரம்


234 / 234


தவெக - 107

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 53

நாதக - 0




இரவு 08.30 மணி நிலவரம்


234 / 234


தவெக - 108

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 52

நாதக - 0



இரவு 07.15 மணி நிலவரம்


234 / 234


தவெக - 107

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 53

நாதக - 0





மதியம் 05.15 மணி நிலவரம்


234 / 234


தவெக - 103

திமுக கூட்டணி - 74

அதிமுக கூட்டணி - 57

நாதக - 0




மதியம் 04.00 மணி நிலவரம்


234 / 234


தவெக - 103

திமுக கூட்டணி - 73

அதிமுக கூட்டணி - 58

நாதக - 0





மதியம் 03.20 மணி நிலவரம்





மதியம் 02.40 மணி நிலவரம்




மதியம் 02.15 மணி நிலவரம்





மதியம் 12.50 மணி நிலவரம்


234 / 234


தவெக - 113

அதிமுக கூட்டணி - 61

திமுக கூட்டணி - 60

நாதக - 0



காலை 10.00 மணி நிலவரம்


214 / 234


தவெக - 92

அதிமுக கூட்டணி - 68

திமுக கூட்டணி - 54

நாதக - 0




காலை 9.30 மணி நிலவரம்




காலை 9.25 மணி நிலவரம்


189 / 234


தவெக - 78

அதிமுக கூட்டணி - 59

திமுக கூட்டணி - 52

நாதக - 0



காலை 9.15 மணி நிலவரம்


159 / 234


தவெக - 66

திமுக கூட்டணி - 48

அதிமுக கூட்டணி - 45

நாதக - 0




முதல் சுற்று முடிவில் எடப்பாடி தொகுதி சேலம் மாவட்டம் - எடப்பாடி பழனிசாமி அவர்கள் 6000 வாக்குகள் முன்னிலை 


காலை 9.00 மணி நிலவரம்


120 / 234


திமுக கூட்டணி - 54

அதிமுக கூட்டணி - 33

தவெக - 33

நாதக - 0



West Bengal Assembly Elections 2026:


➤ TMC+: 82

➤ BJP: 101

➤ CPI(M)+: 0

➤ Cong: 0

➤ Others: 1


Assam Assembly Elections 2026:


➤ BJP+: 61

➤ Cong+: 10

➤ AIUDF: 0

➤ Others: 0




காலை 8.45 மணி நிலவரம்


86 / 234


திமுக கூட்டணி - 52

அதிமுக கூட்டணி - 22

தவெக - 12

நாதக - 0





காலை 8.40 மணி நிலவரம்


45 / 234


திமுக கூட்டணி - 32

அதிமுக கூட்டணி - 8

தவெக - 5

நாதக - 0



காலை 8.30 மணி நிலவரம்


29 / 234


திமுக கூட்டணி - 21

அதிமுக கூட்டணி - 4

தவெக - 3

நாதக - 0



தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை



தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 04-05-2026 காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதலில் காலை 8 மணி முதல் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். 


கடந்த காலங்களில் நண்பகலிலேயே யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், இந்த முறை நான்குமுனை போட்டிகள் நிலவுவதால் முடிவுகளை கணிக்க மாலை வரை ஆகலாம் எனத் தெரிகிறது.


தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்துகொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


வாக்கு எண்ணிக்கை வழிமுறைகள்:


காலை 8.00 மணிக்கு துவங்கும் தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து... 


8.30 மணி அளவில் வாக்குப் பதிவு எந்திரங்கள் குறிப்பிட்ட மேசைக்கு கொண்டு வரப்படும்.


ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 14 மேசைகள் போடப்படும்.


பெரிய தொகுதியான  சோழிங்கநல்லூர் மையத்தில் 28 மேசைகளும் 


மதுரவாயல் மையத்தில் 20 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு சுற்று என்பது 14 மேசைகளிலும் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்த பிறகே நிறைவடையும்.


அதற்கு பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும்.


அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் முழுமையாக எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் தேர்தல் நடத்தும் அதிகாரியால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


எனவே  காலை சுமார் 10.00 மணி அளவில்தான் முன்னணி  நிலவரம் தெரியவரும் என தகவல்.


Notification for TNLA Elections published in the Gazette

 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு


Notification for Tamil Nadu Legislative Assembly elections published in the Gazette


* 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிப்பு



GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

No.211]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

CHENNAI, MONDAY, MARCH 30, 2026

Panguni 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu-2057

Part V-Section 4

Notification by the Election Commission of India

NOTIFICATION BY THE ELECTION COMMISSION OF INDIA

APPOINTMENT OF DATES FOR VARIOUS STAGES OF ELECTIONS AND FIXATION OF HOURS OF POLL

No. SRO G-14/2026.

FOR ALL THE ASSEMBLY CONSTITUENCIES IN THE STATE OF TAMIL NADU.

The following Notification of the Election Commission of India, Nirvachan New Delhi-110 001, dated: 30th March, 2026 [9 Chaitra, 1948 (Saka)] is published:-

Sadan, Ashoka Road, No. 464/SS-I/TN-LA/2026:- WHEREAS, the Governor of the State of Tamil Nadu has, by a notification issued under Sub-section (2) of Section 15 of the Representation of the People Act, 1951 (43 of 1951) and published in the official Gazette of the State on the 30th March, 2026, been pleased to call upon all Assembly Constituencies in the State of Tamil Nadu, to elect members to the Legislative Assembly of the State, in accordance with the provisions of the said Act and of the rules and orders made thereunder;

NOW, THEREFORE, in pursuance of Sections 30 and 56 of the said Act, the Election Commission of India hereby-

(A) appoints, with respect to the said election in each of the Assembly Constituencies:-

(a) the 06 April, 2026 (Monday) as the last date for making nominations;

(b) the 07 April, 2026 (Tuesday) as the date for the scrutiny of nominations;

(c) the 09 April, 2026 (Thursday) as the last date for the withdrawal of candidatures;

(d) the 23 April, 2026 (Thursday) as the date on which a poll shall, if necessary, be taken; 

(e) the 06 May, 2026 (Wednesday) and as the date before which the election shall be completed; and


(B) fixes the hours, from 7.00 AM to 6.00 PM, as the hours during which the poll shall, if necessary, be taken on the date specified above, for the election.

(By Order)

LATA TRIPATHI,

Secretary,

Election Commission of India.

ARCHANA PATNAIK,

Chief Electoral Officer and

Principal Secretary to Government,

Public (Elections) Department.


Secretariat,

Chennai-600 009,

30th March, 2026.




சட்டமன்றத் தேர்தல் 2026 : 30ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 : 30-03-2026 அன்று வேட்பு மனுத் தாக்கல் துவங்குகிறது


👉 வேட்புமனு தாக்கல்: 30 மார்ச் 2026 - 6 ஏப்ரல் 2026


👉 வாக்குப்பதிவு: 23 ஏப்ரல் 2026


👉 வாக்கு எண்ணிக்கை: 4 மே 2026




தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்

 


 தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்


                  *PRO duty*


1-Pro dairy

2-form17c.

3- 16 points abserver report  sheet.

4- visit sheet.

5- pledge commencement of poll and after close the poll.

6- Mock poll certificate.  

மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக PRO பூர்த்தி செய்யவும்*   


                       PO 1 duty

 

 *1- elector identify is very important.*

*2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* *3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்*              


            PO 2 duty


*1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்*

*3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்*

*4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.*       


                  PO 3 duty


 *வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.*


      *General instructions* .   


    *49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும்   refused the Vote என்று எழுத வேண்டும்.              *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.*


 *49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும்* *இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்*


*1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்*

*2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்*

*3.Test votes*

*4.proxy votes*

* மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை. இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து  வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.


       * குறிப்பு


தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்


 குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்

🙏


TNLA 2026, சிறப்புப் பார்வையாளர் நியமனம்


தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, சிறப்புப் பார்வையாளர் நியமனம்


 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, தொடர்பான பணிகளுக்காக, திரு. பிரதாப் சிங் அவர்களைச் சிறப்புப் பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.



Checklist for the RO 2026

 


2026ஆம் ஆண்டு தேர்தல் நடத்தும் அலுவலருக்கான சரிபார்ப்பு பட்டியல்


Election : Checklist for the Returning Officer 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TN Assembly Elections 2026 : Training Schedule for Polling Personnel


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 : வாக்குப்பதிவுப் பணியாளர்களுக்கான பயிற்சி கால அட்டவணை குறித்த அறிவுறுத்தல்கள் - அனுப்பப்பட்டது - சார்பாக


General Elections to Tamil Nadu Legislative Assembly 2026 Training for Polling Personnel Instructions-Communicated- Reg


TN Assembly 2026 : Training Schedule for Polling Personnel Instructions-Communicated- Reg.


Proposed schedule for Training of polling personnel


1st Training

(separately for each category Pro, PO1, PO2,PO3)

On or before 02.04.2026 (Thursday)


2nd Training

for Team together PrO+PO1+PO2 +PO3

11.04.2026 (Saturday)


2nd Repeat training (same as 2nd training)

20.04.2026 (Monday)


3rd Training

P-1 Day (Pre Poll Day)

22.04.2026 (Wednesday)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தேர்தல் பயிற்சி வகுப்புகள் பற்றிய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் 


முதன்மை தேர்தல் அலுவலர், சென்னை அவரின் கடித எண். 5055/Ele.VII/2026-1, நாள் 19.03.2026-ன் படி, 


2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான பயிற்சி குறித்த அறிவுறுத்தல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன👇


பயிற்சி அட்டவணை

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதற்கான பயிற்சி அட்டவணை பின்வருமாறு:


| முதலாம் பயிற்சி | 02.04.2026 (வியாழன்) அல்லது அதற்கு முன் | PrO, PO1, PO2, PO3 ஆகிய ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தப்படும். |


| இரண்டாம் பயிற்சி | 11.04.2026 (சனி) | முழு குழுவினருக்கும் (PrO+PO1+PO2+PO3) இணைந்து வழங்கப்படும். |


| இரண்டாம் கட்டத் திரும்பும் பயிற்சி | 20.04.2026 (திங்கள்) | இரண்டாம் பயிற்சியைப் போன்றதே; அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். 


| மூன்றாம் பயிற்சி | 22.04.2026 (புதன்) | வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் (P-1 Day) நடைபெறும். 

முக்கிய அறிவுறுத்தல்கள்

 * பணியாளர்கள் எண்ணிக்கை: தேவையான பணியாளர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 120% பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.


 *மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) வழங்கப்படும் வசதிகள் குறித்து பணியாளர்களுக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டும்.


 * முதலாம் பயிற்சி:

  வகுப்பறை சூழலில் சுமார் 40 பேர் கொண்ட குழுக்களாக நடத்தப்பட வேண்டும்.


   * மாதிரி வாக்குச்சாவடி அமைத்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும்.


   * தபால் வாக்குக்கான படிவம் 12/12A இந்தப் பயிற்சியின் போது சேகரிக்கப்பட வேண்டும்.


 * இரண்டாம் பயிற்சி:


   * மண்டல அலுவலர்களால் முழு குழுவிற்கும் சேர்த்து பயிற்சி அளிக்கப்படும்.


   * 'PRO Mobile App' மூலம் வாக்குப்பதிவு சதவீதத்தை அனுப்பும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும்.


 * மூன்றாம் பயிற்சி:


   * பணி நியமன ஆணைகளை விரைவாக வழங்கத் தேர்வுக்கூட நடைமுறை பின்பற்றப்படும்.


   * வாக்குச்சாவடி எண் ஒட்டப்பட்ட பெஞ்சுகளில் அந்தந்தக் குழுவினர் அமர வைக்கப்படுவர்.


  *நான்காம் கட்டப் புத்தாக்கப் பயிற்சி:* 


   * வாக்குப்பதிவு மையத்தில் மண்டல அலுவலரால் வழங்கப்படும்.


   * மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் பிற பொருட்களைச் சரிபார்த்து, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.


மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



PUBLIC (ELECTIONS.VII) DEPARTMENT, SECRETARIAT, CHENNAI-600 009.


Letter No.5055/Ele.VII/2026-1, Dated: 19.03.2026


தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா".


From

Tmt. Archana Patnaik, I.A.S., 

Chief Electoral Officer and Principal Secretary to Government.


To 

All District Election Officers.


Sir/Madam,


Sub: Training General Elections to Tamil Nadu Legislative Assembly 2026 Training for Polling Personnel Instructions-Communicated-Reg.


Ref: Letter received from Election Commission of India letter No ECI/PN/029/2026, dated 15th March, 2026.


I am directed to state that the Election Commission of India, in its letters cited has communicated the schedule for the General Elections to Tamil Nadu Legislative Assembly 2026 and the date of poll will be on 23.04.2026.


2. In connection with General Elections to Tamil Nadu Legislative Assembly 2026, the training has to be imparted to all elections related officials especially Polling Personnel. I am to furnish below a tentative schedule for the training of polling personnel to be imparted for the above said elections.


Proposed schedule for Training of polling personnel


S.No.   Training Guidelines of ECI     Probable date that can be fixed by the DEO 


1 Training (separately for each category Pro, PO1, PO2, PO3)


First 3 days after First randomization ( First randomization 3-4 days after date of notification)


+P3) 2nd Training (for the Team togetherPrO+Pol+Po2


2


2 days after second 11.04.2026 randomization (Second (Saturday)


randomization 9 to 12 days before date of poll and after postal


2nd Repeat training


ballots are finalized) 3 days before poll date


3


20.04.2026 (Monday) 22.04.2026 (Wednesday)


(same as 2nd training) 3rd Training


P-1 Day


3. In addition to the above, I am to request you to take into notice the following points of action, for effective conduct of the training Programme:-


Important action points:


Total number of polling personnel to be trained should be at least


120% of the required Personnel. Accessible Elections: The facilitation provided to the PwDs should be clearly explained to the polling personnel.


 Service of orders to be made within 2 days of first randomization.


First Training


Should be done in Batch of around 40 persons in class room environment.


Separately for PrO, PO1, PO2, РОЗ. To be imparted by Zonal Officers/AROS/RO.


Practical Sessions with dummy polling station may be set up. Full set of polling material to be supplied.


Role play to be done.


Practice of filling up Statutory and other Forms. At the end of training, it should be indicated to them where


they should come for getting orders after second randomization.


Form 12/12A for Postal Ballots to be collected during the training.


Second Training


To be given for the entire polling team group-together.


To be given by zonal officers of the constituency.


Actual polling booth scenarios to be enacted.


Postal ballots to be issued and necessary arrangements


made to receive the polled PBs. o Trial sending of poll turnout through PRO Mobile App to be done.


Second Repeat training


Same as second training


Ensure that there are no absentees


Third training


Basically for service of orders preferably in locations which have sufficient with number of rooms.


To ensure fast service of orders, the examination hall approach should be adopted. The polling station number should be pasted on the benches


in the class room in order, and the staff should sit together on the allocated bench (one polling station personnel together).


Zonal officer would then serve the order to the polling personnel of their zone.


Pre familiarization of the actual team members and concerned zonal officers.


Clarify last minute doubts if any.


Fourth refresher training


To be given at the polling station by the zonal officer. Confirming the presence of polling personnel at polling station and pre familiarity of the actual situation with EVM's and other polling materials.


Final doubts clarification.


4. The above instructions should be followed scrupulously.


Yours faithfully,

for Chief Electoral Officer & Principal Secretary to Government.




தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - தபால்வாக்கு மூலம் வாக்களிக்க புதிதாக 12 பிரிவினருக்கு அனுமதி - தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழ்நாடு அரசின் 5 துறைகள் உட்பட 12 பிரிவினரை தபால் வாக்கு பட்டியலில் புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - தபால்வாக்கு மூலம் வாக்களிக்க புதிதாக 12 பிரிவினருக்கு அனுமதி - தேர்தல் ஆணையம் உத்தரவு


போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை , தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பணியாளர்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் தபால் வாக்கு பதிவு செய்யலாம். - அரசிதழ் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ISSUE OF POSTAL BALLOT TO ABSENTEE VOTERS IN THE CATEGORY OF PERSONS

No. SRO G-10/2026.

EMPLOYED IN ESSENTIAL SERVICES.


No. 52/2026/SDR/Vol-I. -- The following Notifications of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110 001, dated 15th March, 2026 is published:

In pursuance of the provisions of clause (c) of section 60 of the Representation of the People Act, 1951, and on due consideration of the matter in consultation with the Government of Tamil Nadu, the Election Commission hereby notifies the persons employed in the essential services as mentioned in Annexure-I (copy enclosed) as a class of persons to give vote by postal ballot on account of being on duty on the day of poll in the current General Election to the Legislative Assembly of Tamil Nadu, 2026 as per the relevant provisions of the Conduct of Elections Rules, 1961, and the Commission's directions and guidelines. The programme of the said election is scheduled to be notified on 30th March, 2026.

(By Order)

S.B.JOSHI,

Principal Secretary,

Election Commission of India.

ARCHANA PATNAIK,

Chief Electoral Officer and

Principal Secretary to Government,

Public (Elections) Department.


Secretariat,

Chennai-600 009,

17th March, 2026.


Annexure

1. Southern Railway under jurisdiction of Tamil Nadu

2. All India Radio

3. Marine Department

4. Airport Authority of India

5. Ministry of Information of Broadcasting

6. Media Persons

7. Chennai Metro Rail

8. Tamil Nadu State Transport Undertaking

9. Tamil Nadu Power Distribution Corporation Limited

10. Fire and Rescue Services

11. Prison and Correctional Services

12. Traffic Police

(By Order)

S.B.JOSHI,

Principal Secretary,

Election Commission of India.

ARCHANA PATNAIK,

Chief Electoral Officer and

Principal Secretary to Government,

Public (Elections) Department.


Secretariat,

Chennai-600 009,

17th March, 2026.


Assembly Election 2026 - Polling Personnel Training Schedule



ASSEMBLY ELECTION 2026 - POLLING PERSONNEL TRAINING SCHEDULE - WhatsApp Information 


All Polling Personnel are requested to attend the training without fail.


First Training : 05.04.2026


Second Training : 15.04.2026


Final Training & Issue of Appointment Orders : 22.04.2026


Attendance is compulsory for all Polling Personnel.


Please attend the training at the designated training centre on time.


அரசு அலுவலகங்களில் / பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் /புகைப்படங்கள் குறித்து தேர்தல் அலுவலர் செய்தி வெளியீடு



மறைந்த தலைவர்களின் சிலைகள் புகைப்படங்களை மறைக்கப்பட வேண்டியதில்லை, தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் / பொது இடங்களில்  மறைக்கப்பட வேண்டும் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TNLA Elections 2026 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு


TN Elections 2026 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



CEO TN PR No : 002 , Date: 16.03.2026 

 

GENERAL ELECTIONS - TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, 2026

Election Commission of India has announced the Schedule for General Elections to the Tamil Nadu Legislative Assembly, 2026 on 15.03.2026. 


The Poll schedule is as follows:-

Sl. No. Poll Event Date

1. Issue of Gazette Notification 30.03.2026 (Monday)

2. Last date for making Nominations 06.04.2026 (Monday)

3. Date for the scrutiny of Nominations 07.04.2026 (Tuesday)

4. Last date for the withdrawal of candidatures 09.04.2026 (Thursday)

5. Date of Poll 23.04.2026 (Thursday)

6. Date of Counting 04.05.2026 (Monday)

7. Date before which election shall be completed 06.05.2026  (Wednesday)

The Model Code of Conduct comes into force with immediate effect from the date of announcement i.e. 15.03.2026 and shall remain in force till the completion of election process. The Model Code of Conduct is applicable to all the Political Parties, all the Contesting Candidates, and the Government machinery. We request all the Political Parties and the contesting candidates to strictly abide by the Model Code and extend their fullest co-operation for conduct of free, fair, peaceful and inclusive election. All Secretaries to Government and Heads of Departments/ Boards/Corporations were also sensitized on MCC. As all Officers / officials, including Police engaged in the conduct of elections are deemed to be on deputation to the Election Commission of India as per section 13CC of Representation of People Act, 1950 and they were all instructed to discharge their duties in an impartial manner without fear or favor. 

The final Electoral rolls with reference to 01.01.2026 as qualifying date were published on 23.02.2026. As on 15.03.2026, the total number of electors is 5,69,17,979 (Male:2,78,32,032; Female: 2,90,78,291 and Third Gender: 7,656) This includes 2446 Overseas Electors. There are 67,168 Service Electors in the final Electoral roll. Currently, the process of continuous revision is ongoing and all Eligible applications for addition can submit their Form 6 and form 8 (only for shifting) till 10 days before the last date for nominations.

All electors are requested to ensure the availability of their name in the elector roll and find their Part no and Sl no well in advance, so that they are able to identify their polling station locations before the elections. In order to facilitate the electors to find their names in the Electoral roll , they can use the online voter search facility or contact the concerned DEO facilitation center for assistance.

The Election Commission of India has been implementing all possible additional facilities to ensure all the voters enrolled in the electoral roll to exercise their franchise in the forthcoming elections to the Tamil Nadu Legislative Assembly. Action has been taken to facilitate voting through postal ballot to senior citizens aged above 85 years, and persons with above 40% benchmark disabilities including persons with intellectual disability and persons affected with Covid and taking treatment from home. (Absentee voters) The above persons have the option to apply for postal ballot to the Returning officer of the Legislative Assembly constituency within 5 days of the announcement of the elections. 

Returning officers on receipt of the applications, verifying the eligibility will deliver the postal ballots at their home and take back the filled up postal ballots. Therefore, senior citizens aged above 85 years, persons with above 40% benchmark disabilities including persons with intellectual disability and persons who are taking treatment for Covid from home should fill up form 12D and handover to the returning officer within 5 days of notification.

It has been ensured that all the polling stations are provided with Assured Minimum Facilities such as adequate furniture, help desk, electricity and proper lighting, provision for ramp, proper signage, toilet, provision for drinking water ramps, shades, approach roads etc. Additional facilities for PwDs including Facilitation measures such as Wheel chairs, Wheel chair assistants / volunteers and adjustable tables are being arranged. For visually impaired, hearing impaired and speech impaired, Trained volunteers will be engaged at select booths. PwD voters can seek assistance through Saksham App developed by ECI.

The Election Expenditure Monitoring teams i.e., Flying Squads, Static Surveillance Teams, Video Surveillance Teams, have started functioning round the clock in shifts from 15.03.2026. The supporting teams of Expenditure Monitoring Cell, Video Viewing Team, Accounting Team have also started functioning. The State Level / District Level Media Certification and Monitoring Committee have been constituted and started functioning for pre-certification of Political advertisements and to keep watch over the instances of Paid News. No advertisement in electronic media shall be published or telecasted without the prior certification obtained from the district level or State level MCMC.

Complaint redressal mechanism – Call center - The State / District Call Centre at Tamil Nadu is operational with toll free number 1800-4252-1950, District Contact Centre at all the District headquarters have been established with Toll Free Number 1950.SCC & DCC is working on 24 × 7 mode. Citizens can make use of the services in https://voters.eci.gov.in to find their sl.no. part no., location of the Polling Station and the contact details of their BLO.Web based online complaints can also be registered through NGS portal.


The Voters shall present his/her EPIC or any of the following 12 original Photo identification documents (Identity Cards) for identification as approved by the Commission which shall be used as alternate are as listed below.

(i) Aadhaar Card.

(ii) MGNREGA Job Card.

(iii) Passbooks with photograph issued by Bank/Post Office.

(iv) Health Insurance Smart Card issued under the scheme of Ministry of Labour/Ayushman Bharat Health Card.

(v) Driving License.

(vi) PAN Card.

(vii) Smart Card issued by RGI under NPR.

(viii) Indian Passport.

(ix) Pension document with photograph.

(x) Service Identity Cards with photograph issued to employees by Central/State Govt./PSUs/Public Limited Companies.

(xi) Official identity cards issued to MPs/MLAs/MLCs and

(xii) Unique Disability ID (UDID) Card, M/o Social Justice & Empowerment, Government of India. 

In order to ensure fair, free, transparent, and inclusive election some of the new initiatives include.

1. Mobile deposit facility at the Polling stations.

2. Going for a Clearer Voter Information Slip.

3. Use of Colour photo of Candidates and Large font size on EVM Ballot paper.

4. Limiting to a Maximum of 1200 Electors per polling station.

5. Permitting Candidates’ booth just outside 100 meters of PS.

6. Integrated ECINET – One-stop Digital platform for all key voter services 

for all stakeholders.

7. 100% Webcasting at all PSs, ensures round the clock monitoring (inside 

& outside).

8. Standard ID cards for the BLOs.

With the support of all the media personnel who have assembled here and all other stake holders, we as a team will make this election a memorable one with increased voters participation.

“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா”.

ARCHANA PATNAIK,

CHIEF ELECTORAL OFFICER &

PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

Issued By: - DIPR, Secretariat, Chennai – 9


Election Code of Conduct


தேர்தல் நடத்தை விதிமுறைகள் - அரசு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்கள் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026


Election Code of Conduct - Guidelines for Government Officials - Tamil Nadu Legislative Assembly Election 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்: முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்?


தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்.


ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி.


பெண் வாக்காளர்கள் 2.89 கோடி.


மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.


முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.


20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடி.


100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530.


85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்.


மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்.


சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி

 


700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம் பெறும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணிக்க வேண்டும் - தேர்தல் தேதி அறிவித்த போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டு பேசினார்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! 


வருசநாடு மலைப்பகுதியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்

.

ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.


அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.


தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.


ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.


8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.


சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.


வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். பில் ஓக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.


3 மணி நேரம் பயணம் செய்து வருசநாடு வாக்குச்சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் செல்கிறார்கள். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு செல்ல 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் என்றார்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் : 23-04-2026, வாக்கு எண்ணிக்கை நாள் : 04-05-2026 - இந்திய தேர்தல் ஆணையம்



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்23 தேதி நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி - இந்திய தேர்தல் ஆணையம்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் : 23-04-2026, வாக்கு எண்ணிக்கை நாள் : 04-05-2026 - இந்திய தேர்தல் ஆணையம்


Tamil Nadu Assembly elections to be held on April 23, counting of votes on May 4 - Election Commission of India.



Election Poll Date Tamilnadu: 23.04.2026

Counting Date: 04.05.2026


Training for Polling Officers - Tamil Nadu Legislative Assembly Elections 2026



 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026


Training Manual for Polling Officers - Tamil Nadu Legislative Assembly Elections 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...