கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு


சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு


கரூர் மாவட்டம் : தேர்தல் 2026 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 - 4 சட்டமன்ற தொகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தல் - உடல்நல பாதிப்புகளால் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க கோரியது - தனியர்களுக்கு மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்த பரிந்துரையினை அனுப்பி வைக்க கோருதல் தொடர்பாக - கரூர் மாவட்ட ஆட்சியரின் குறிப்பாணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் குறிப்பாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ந.க.அ4/18466/2025 நாள் : 26.03.2026


மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,

கரூர்.


குறிப்பாணை


பொருள்:


தேர்தல் 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026-கரூர் மாவட்டம் 4 சட்டமன்ற தொகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தல் உடல்நல பாதிப்புகளால் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க கோரியது தனியர்களுக்கு மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்த பரிந்துரையினை அனுப்பி வைக்க கோருதல் தொடர்பாக.


பார்வை:

1. தனியரது விண்ணப்பம்.

2 தொடர்புடைய ஆவணங்கள்.


தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்கக் கோரியது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விண்ணப்பத்தின்பேரில் பணியாளர் மருத்துவ தகுதி பெறும் பொருட்டு மருத்துவ குழுமத்திற்கு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழு தலைவர் (Dean) முன்பாக 27.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு விண்ணப்பம் அளித்த அலுவலர்கள் நேரில் ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்து பரிந்துரையினைப் பெற்றுவர அறிவுறுத்துமாறு கீழ்க்கண்ட துறைத்தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு: மருத்துவ தகுதி கோரிய

அலுவலர்களின் பட்டியல்.


ஒம்/-கு.ரவிகுமார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர்.


/உண்மை நகல்/உத்தரவுப்படி/


மாவட்ட ஆட்சித்தலைவருக்காக,

26/3/26


பெறுநர்:


1. முதன்மைக் கல்வி அலுவலர்,கரூர். (35 விண்ணப்பங்கள்)


2. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), கரூர். (1விண்ணப்பம்)


3. மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கரூர். (1 விண்ணப்பம்)


4. வட்டார போக்குவரத்து அலுவலர்,கரூர். (1விண்ணப்பம்)


5. மாவட்ட நூலக அலுவலர், கரூர். (1 விண்ணப்பம்)


6. சார்பதிவாளர், வெள்ளியணை. (1விண்ணப்பம்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitn...