கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்ட கருத்துகள்

 

மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு


தேர்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்டத்தில் தேர்தல் ஆணைய மேலிட பார்வையாளர்கள் கூறிய கருத்துகள் 


1. இன்னும் பெரும்பாலான பள்ளிகளில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை.குறிப்பாக அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்படவில்லை மேலும் கல்வெட்டுகளில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் இன்னும் மூடப்படவில்லை அதிலும் குறிப்பாக எல்லா பள்ளிகளிலும் அரசியல் தலைவர்களின் படங்கள் கொண்ட காலண்டர்கள் தொங்கவிடப்பட்டுள்ளன இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.


2. எல்லா பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் அறையில் எழுதப்பட்டுள்ள பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் ஆகிய பெயர்கள் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும். 


3. பள்ளி வளாகத்திலும் வகுப்பறை சுவர்களிலும் எந்த காரணத்தைக் கொண்டும் அரசியல் சார்ந்த சின்னங்களோ படங்களோ இடம்பெறக்கூடாது. 


4. வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கட்டிட மராமத்து பணிகள் மேற்கொண்டு இருந்தால் அதை உடனடியாக முடிக்க வேண்டும். 


5. வெயில் காலம் என்பதால் தேர்தல் நாளன்று பள்ளிகளில்  வாக்குச்சாவடியாக செயல்படும் வகுப்பறைகளைத் தவிர மற்ற வகுப்பறைகளும் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களிப்பதற்கு ஏதுவாக திறக்கப்பட வேண்டும்.


மேற்காணும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக அறிவுரைகளை வழங்கி மேற்கண்ட கருத்துகளை முழுமையாக பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. 


நாளை காலை 11 மணிக்குள் மேலே கூறப்பட்டுள்ளவாறு  பள்ளிகளில் உள்ள அரசியல் சார்ந்த சின்னங்கள், கல்வெட்டுகள் மூடப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள், முதலமைச்சர் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும். அரசியல் தலைவர்களின் படங்கள் உள்ள காலண்டர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். என்று வலியுறுத்தப்படுகிறது. இவை அகற்றப்பட்டதற்கான அறிக்கையை நாளை மதியம் 2:00 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று  தெரிவிக்கப்படுகிறது. நன்றி.


திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செய்தி 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...