கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மிக இளம் வயதில் அமைச்சராக பதவி ஏற்றவர் யார்?



 மிக இளம் வயதில் அமைச்சராக பதவி ஏற்றவர் யார்?


 முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க., அரசில், இளம் வயது அமைச்சர்கள் ஏராளமானோர் உள்ளதால், 'இந்தியாவில் இளம் வயதில் அமைச்சரானது, த.வெ.க.,வை சேர்ந்தவர் தான்', என கூறப்படும் நிலையில், அது தொடர்பான தகவல்கள் தொகுப்பு


த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், மே 10ஆம் தேதி  தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். இரண்டு முறை விரிவாக்கம் செய்யப்பட்ட அவரது அமைச்சரவையில், மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். 


அவர்களில், மிகவும் இளையவர், கால்நடைத் துறை அமைச்சர் கமலி ஆவார். அவருக்கு வயது 28; 


தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் வயது 29 வயது. 


அமைச்சர்களில், 10 பேர், 31 -40 வயதுக்கு உட்பட்டவர்கள்; 

13 பேர், 41 - 50 வயதுக்கு உட்பட்டவர்கள். 


1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த விஜயசாரதி அவர்கள் பதவியேற்ற பொழுது  அவருக்கு வயது 26.


சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தித்தாளின் புகைப்படம்



இதுபோல, இந்தியாவிலேயே இளம் வயதில், மாநில அமைச்சரானவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர்,  ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சராக கடந்த 1977ல் பதவியேற்ற  பொழுது, அவருக்கு 25 வயது. 


பின்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர், டில்லி முதல்வர் என, இந்திய அரசியலில்  பல்வேறு பதவிகளை வகித்தவர். 


 2009ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அமைச்சரவையில், 29 வயதான அகதா சங்மா இடம் பெற்றார். மத்திய அமைச்சர்களில், மிகவும் இளையவர் இவர்தான். 


 முதலமைச்சர்களை பொறுத்தவரை, 1985ல் அஸாம் முதல்வராக, 33 வயதில், பிரபுல்லா குமார் மொகந்தா பதவியேற்றார். 


 1967ல், 29 வயதான எம்.ஓ.எச்.பாரூக், புதுச்சேரி முதலமைச்சரானார். 


தமிழ்நாட்டில் இளம் வயதில்  முதலமைச்சர் பதவியேற்றவர் ஜெயலலிதா அவர்கள்.  1991ல்  முதலமைச்சராக பதவி ஏற்ற பொழுது அவரது வயது 43. 


இந்தியாவின் மிக இளம் வயது பிரதமர்  ராஜீவ் காந்தி ஆவார்.  1984ல் பிரதமரான  பொழுது அவரது வயது 40. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shriram Finance Student Scholarship Program 2026–2027

  Dear All, We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027. Kindly share this scholarship information ...