கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Read 'Vaasippu Iyakkam' books during library periods – DEE Proceedings



நூலக பாட வேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்கள் மாணவர்கள் வாசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Implementation of measures to read 'Reading Movement' books during library periods – Proceedings of the Director of Elementary Education.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க. எண்.9111/எப்1/2025, நாள் : 18.06.2026.


பொருள்:


தொடக்கக் கல்வி - வாசிப்பு இயக்கம் - நூலக பாட வேளைகளில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக


பார்வை:


சென்னை 6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், ந.க.எண்.0145/சி7/நூலக மானியம்/ ஒபக/2025, நாள் : 03.06.2026


பார்வையில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும் இயல்பாக உரையாடவும், வாசிப்பு தான் வாசலாக அமையும். வாசிப்பின் வாயிலாக சமூக சிந்தனையை தூண்டவும், உளப்பாடுகளை வெளிக் கொண்டு வரவும் "மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்வு செயல்பட்டு வருகிறது.


இதன் அடிப்படையில் வாசிப்பு இயக்கத்திற்கான கதைப்புத்தகங்கள் நுழை, நட. ஓடு,பற என்ற வகையில் முதற்கட்டமாக 53 புத்தகங்கள் இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள், மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் மற்றும் நான்காம் கட்டமாக 57 ஆக மொத்தம் 261 புத்தகங்கள் (174 தமிழ் வழி புத்தகங்கள் மற்றும் 87 ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள்) அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன.


எனவே. மேற்கண்ட வாசிப்பு இயக்கப் புத்தகங்களை 2026-27 கல்வியாண்டிலும் பள்ளி நூலக பாடவேளைகளில் மாணவர்கள் முறையாக வாசித்து பயன்பெறும் வகையிலும், மாணவர்களை கதை சொல்லிகளாகவும் எழுத்தாளர்களாகவும் உருவாக்கும் வகையில் நடைமுறைப்படுத்த தங்கள் ஆளுகைக்குட்பட்ட தலைமையாசிரியர்களுக்கும் சார்ந்த வட்டாரக் கல்வி அனைத்து பள்ளி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தவும், இப்பொருள் சார்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தொடக்கக் கல்வி இயக்குநர்

18.06.26


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...