கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

'வெற்றிப் பயணம்' – திட்டத்தின் முக்கிய அம்சங்கள்



மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை - முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு 


🔴 அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் முதல் மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை


🔴 மாநகர, நகர எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை


🔴 புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா சேவை


🔴 மாவட்டங்களுக்கு இடையே புறநகர்(Mofussil) பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை


🔴 மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை - ஆண்டுக்கு ரூ.6000 கோடி செலவு


'வெற்றிப் பயணம்' – திட்டத்தின் முக்கிய அம்சங்கள்


இதுவரை நகரப் பகுதிகளில் 40 கி.மீ வரை மட்டுமே இயங்கும் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டு வந்தது. இனி மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS), மற்றும் டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.


மாவட்டங்களுக்கு இடையே இலவசப் பயணம்

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் வகையில் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயங்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் கட்டணமில்லாப் பயணம் விரிவாக்கப்பட்டு உள்ளது.


கட்டுப்பாடுகள் இல்லை

இத்திட்டத்தில் பயனடைவதற்குக் எந்தவித வருமான உச்சவரம்போ அல்லது பயண எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளோ கிடையாது.


இந்த விரிவாக்கத்தின் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கும், பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களது இடங்களுக்கும், மருத்துவச் தேவைகளுக்காகவும் எவ்விதப் பயணக் கட்டணமும் இன்றிச் செல்ல முடியும்.


"வெற்றிப் பயணம் என்பது வெறுமனே கட்டணமில்லாப் பேருந்து பயணம் மட்டுமல்ல; அது ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு மற்றும் ஒரு தொழில்முனைவோரின் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடு" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்டுக்கு ₹6,000 கோடி கூடுதல் செலவினம்

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ₹6,000 கோடி நிதிச் செலவினம் ஏற்படும் என்றும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.



Body Weight Machine | Bluetooth BMI Weight Scale with 3 Years Warranty | Weighing Machine & Body Fat Analyzer for Health Monitoring (Black)


https://link.amazon/B005lYjRs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reconstitution of SMCs for 2026-2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – SPD Proceedings

 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை)...