கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தற்காப்பு கலை பயிற்சி புகைப்படம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான தகவல்கள்


தற்காப்பு கலை பயிற்சி புகைப்படம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான தகவல்கள் 


தற்காப்பு கலை பயிற்சி நடைபெறும் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம். 


பயிற்சி நடைபெறும்போது ஒவ்வொரு பயிற்சி வகுப்பையும்  *Time stamp உடன் கூடிய புகைப்படம் எடுத்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்* எனவும் ஒவ்வொரு பயிற்சி வகுப்பின் புகைப்படத்தினை வட்டாரவளமயத்தில் உறுதி செய்து அதன் பின்னரே தற்காப்பு கலை பயிற்றுனருக்கு ஊதியம் விடுவிக்கப்படும் எனவும் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிறைய பள்ளிகளில் அனைவரையும் கும்பலாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு செய்யக்கூடாது.


பயிற்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது  (Live photos) புகைப்படம் எடுத்து இருக்க வேண்டும். 


Image file ஆக புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும்.  PDF file ஆக பதிவேற்றம் செய்ய வேண்டாம்.


தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தங்கள் பள்ளிகளில் எட்டு வகுப்புகள் முடிந்திருந்தால் உடனடியாக பயிற்றுனரின் ஊதியம்  கோருவதற்கு வட்டார வளமயத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள ஊதிய கேட்புப்பட்டியலில் பூர்த்தி செய்து வட்டார வள மையத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


ஊதியக்கேட்புப் பட்டியலுடன் தற்காப்பு கலை பயிற்றுநர் மற்றும்  மாணவிகளின் Attendance copy இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


நன்றி.


- வட்டார வளமைய மேற்பார்வையாளர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026 - SRC Feedback ...