தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு - செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பொதுத்துறை நிறுவன C மற்றும் D பிரிவு தொழிலாளரகள், பணியாளர்களுக்கு உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வழங்கப்படும்
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய தகுதியுடைய C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வழங்கப்படும்
உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவன C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% வழங்கப்படும்
வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தகுதியுடைய C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்
குடிநீர் வடிகால் வாரிய தகுதியுடைய C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும்
நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைக் தொகையாக வழங்கப்படும்
• தொகை வரம்பு:
நிரந்தரப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ. 8,400 முதல் அதிகபட்சம் ரூ. 16,800 வரை போனஸ் கிடைக்கும்.
• பயனாளிகள் & செலவு:
இதன் மூலம் சுமார் 2.69 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு ரூ. 376.01 கோடி செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• கூட்டுறவு அமைப்புகள்:
கூட்டுறவு அமைப்புகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான தனித்தனி ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.