கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிக்கல்வியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பெற்றோர்கள், அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் இணைந்த 'திங்க் டேங்க்' (Think Tank) - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்...

 அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மே 08) சென்னை, அண்ணா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


"அண்ணா நூலகத்துக்குள் நுழையும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால், வாசலில் போடப்பட்டிருக்கும் கால்மிதி கூட சரியாக இல்லை. அந்தளவுக்கு, அண்ணா நூலகம் பராமரிக்கப்படாத நிலை நிலவுகிறது. இது சங்கடமாக இருக்கிறது. துறை அதிகாரிகள், இயக்குநர்கள் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.


இங்கு நிறைய பேர் படித்து குடிமைப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் எங்களிடத்தில் எந்தளவுக்கு அண்ணா நூலகம் உதவிகரமாக அமைந்தது என்பதை கூறுவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையை நினைத்தால் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.


அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் அறிக்கையை தயார் செய்ய சொல்லியிருக்கிறேன்.


கடந்த 10 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, முதலில் இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதியும் இதனை பார்வையிட்டு சென்றிருக்கிறார்.


அதிமுக பலவற்றில் அரசியல் செய்திருக்கிறது. நூலகத்திலும் அரசியல் செய்திருப்பது வேதனையாக இருக்கிறது. கருணாநிதி, அண்ணா புகைப்படங்களை எடுப்பதையே வேலையாக செய்திருக்கின்றனர். ஆக்கப்பூர்வமான எதனையும் செய்யவில்லை.


தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சொல்வதை நிறுத்திவிட்டு, நூலகத்துக்குத் தேவையானவற்றை செய்வதுதான் எங்கள் அரசாங்கம்.


பள்ளிக்கல்வியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பெற்றோர்கள், அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் இணைந்த 'திங்க் டேங்க்' (Think Tank) உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம்.


ஆன்லைன் வகுப்புகள், கல்விக் கட்டணம், 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை எப்படி மதிப்பிடுவது, 12-ம் வகுப்பு தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்துவோம்.


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கல்வி தொலைக்காட்சி அழகாக இருக்கிறது. அதனை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்".


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


>>> பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி (காணொளி)...


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குறித்த தகவல்கள்...பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குறித்த தகவல்கள்...



 அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஒரு இளம் அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி.தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகனும் ஆவார். திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.


16வது சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தனிப்பட்ட வாழ்க்கை



 முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி 


பிறந்த தேதி : 02-12-1977 


பிறந்த இடம் : திருச்சி


கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam 


கல்வி : MCA 


தொழில் : அரசியல்வாதி 


தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி 


தாயார் பெயர் : மாலதி 


துணைவர் பெயர் : ஜனனி 


துணைவர் தொழில் : குடும்ப தலைவி 


தொடர்பு : 


நிரந்தர முகவரி : 

பழைய எண் : 159 , புதிய எண் : 129, அன்பு நகர்  9 வது குறுக்கு, கீரப்பட்டி , திருச்சி -620 012 .

பள்ளிகள் திறப்பு, ஆன்லைன் நீட் தேர்வு பற்றிய வினாக்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்...

 பள்ளிகள் திறப்பு, ஜேஇஇ தேர்வு, ஆன்லைனில் நீட் தேர்வு உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, 2019- 20ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பள்ளிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதனால் 2020- 21ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ள சூழ்நிலையை மதிப்பீடு செய்து, ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது மாணவர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் இவை குறித்த சந்தேகங்களைப் போக்க, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடம் இன்று கலந்துரையாடினார்.


அதில் அவர் கூறியதாவது:

''ஆண்டுதோறும் இரண்டு முறை பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெறும். இந்த முறை 3 அல்லது 4 முறைகள் நடத்துவது குறித்துத் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஜேஇஇ பாடத்திட்டத்தைப் பல்வேறு வாரியங்கள் குறைத்திருக்கின்றன. சில மாநில வாரியங்கள் பாடத்திட்டக் குறைப்பு அவசியமில்லை என்று முடிவெடுத்துள்ளன. மத்திய அரசும் இதுகுறித்தும் ஆலோசித்து வருகிறது. 

இதுவரை நீட் தேர்வுகள் ஆஃப்லைன் முறையிலேயே நடந்து முடிந்திருக்கின்றன. மாணவர்கள் கோரிக்கையைப் பொறுத்து ஆன்லைனில் 2021 நீட் தேர்வை நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

பொதுத் தேர்வுகளுக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராக மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கொடுக்கப்படும்.

இதுவரை 17 மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. கோவிட்-19 சூழல் மேம்பட்டவுடன் விரைவில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பலாம்''.

இவ்வாறு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...