கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Annual Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Annual Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2025-2026 Term 3 / Annual Exam Question Papers - DEE Proceedings

 

2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


2025-2026 Term 3 / Annual Exam Question  Papers - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06.

ந.க. எண் : 003636/ஜெ2/2025, நாள் : 25.03.2026


பொருள் : தொடக்கக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் வழிகாட்டுதல்கள் - சார்ந்து


பார்வை : சென்னை 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 048688 / எம்1 / இ1/2025. नं. 20.03.2026.


பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு / மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டது.


இத்தேர்விற்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டினை நடத்திடவும் நடுநிலைப் பள்ளிகளில் வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வகுப்பு 1 முதல் 5


மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத் தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட வேண்டும்.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் EMIS உள்நுழைவின் வழியாக 25.03.2026 முதல் 30.03.2026 வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு-1 இல் இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள்  எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும்.


நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்புவாரியாக, பாடவாரியாக மற்றும் பயிற்றுவழி வாரியாகப் பிரித்து, தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும்.


வகுப்பு:


பாடத்தின் பெயர்


பயிலும் வழி:


தேர்வு நாள்:


ஒரு பள்ளிக்குத் தேவைப்படும் உறைகளின் எண்ணிக்கை 19 ஆகும். (1ஆம் வகுப்புக்கு 3, 2ஆம் வகுப்புக்கு 3, 3ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் வகுப்புக்கு 5, 5ஆம் வகுப்புக்கு 5, மொத்தம் 19)


அனைத்துப் பள்ளிகளுக்கும் 3ஆம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு 2


நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.


+ அவ்வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணையின்படி அன்று நடைபெறவிருக்கும் பாடத்திற்கு உரிய வினாத்தாளை மட்டும் பயன்படுத்தி அன்றைய மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.


வகுப்பு 6 முதல் 8


வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.


+இணைப்பு -2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.


வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.


தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, துறையின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நன்கு அறிந்திருப்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.


தொடக்கக்கல்வி இயக்குநருக்காக


இணைப்பு:


1. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 1-5 

2. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 6-8


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) நகள்


1. அரசு கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை. தலைமைச் செயலகம், சென்னை 09


பணிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை - 06


3. இயக்குநர்.பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை 06.


தசுவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது


5. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டம்


தகவலுக்காக


இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06


THIRAN - முழுஆண்டுத்தேர்வு (Endline Exam) தொடர்பான தகவல்கள்

  

 

திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு)  சார்ந்த தகவல்கள் :


 திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல்  1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 


- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக  பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்:


- 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60. 

- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.

- EMIS-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள்   எடுத்த மதிப்பெண்களை நிரப்ப  வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம். 


 குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். 


 - மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை  01.04.2026  முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம். 


 நன்றி.


2025-26 - 1 to 9th Standard - Term 3 Summative Assessment / Annual Examination Timetables

 

 

2025-26 - 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


2025-26 - Third Term Summative Assessment / Annual Examination Timetables for Students of Classes 1 to 9 - Joint Proceedings of DSE, DEE & DPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-06


ந.க.எண்.048688/எம்1/இ1/2025, நாள்.20p3.2026.


பொருள் :


பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள் அனுப்புதல் சார்ந்து,


அரசு / அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை தொடக்க/ நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு - முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


இயக்குநர் 

தனியார் பள்ளிகள் இயக்ககம்


இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்


இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்


பெறுநர்


1. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்.


2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்( தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்) அனைத்து மாவட்டங்கள்


நகல்


1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை.

தலைமைச் செயலகம், சென்னை-09,


2. இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம், தகவலுக்காக அனுப்பப்படுகிறது.



வகுப்பு 1-5 மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை 2025-26

1 முதல் 5 ஆம் வகுப்புகள் - தேர்வு கால அட்டவணை


வகுப்பு 1,2,3


* ஏப்ரல் 8 - தமிழ்


* ஏப்ரல் 13 - ஆங்கிலம்


* ஏப்ரல் 16 - கணிதம்


 4 & 5 ஆம் வகுப்பு


* ஏப்ரல் 6 - தமிழ்


* ஏப்ரல் 8 - ஆங்கிலம்


* ஏப்ரல் 9 - கணிதம்


* ஏப்ரல் 13 - அறிவியல்


* ஏப்ரல் 16 - சமூக அறிவியல்





வகுப்பு 6-9 மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை 2025-26

6 முதல் 9 ஆம் வகுப்புகள் - தேர்வு கால அட்டவணை




1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை முன்னதாக முடிக்க முடிவு



1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை முன்னதாக முடிக்க முடிவு - நாளிதழ் செய்தி 


தமிழ்நாட்டில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்கப்பட்டன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதற்கிடையே தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17-க்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


💥 இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




புதுச்சேரி : அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & விடுமுறை நாட்கள் அறிவிப்பு


புதுச்சேரி : அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & கோடை விடுமுறை நாட்கள் அறிவிப்பு


புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் 1 - 9 ஆம் வகுப்பு வரையும் 11 ஆம் வகுப்பிற்கும் மார்ச் 12 தொடங்கி 17ஆம் தேதி ஆண்டு தேர்வு.


மார்ச் 18 - 31 வரை விடுமுறை; ஏப்ரல் ஒன்றாம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவக்கம்.


மே 1 - 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை; மீண்டும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் தொடங்கும் - புதுச்சேரி பள்ளி கல்வித்துறை.


முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்

 

முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்


Annual Exam 2025 - QP & Answer Key Download Schedule


Annual Examination 2025 - Dates to download question papers and answer keys


6 - 8ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு - 2025 வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை - DEE செயல்முறைகள்

 

1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Revised Term 3 Exam / Annual Examination Timetable for Classes 1 - 5 - DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



1 முதல் 5ஆம் வகுப்பு திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு

 

1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு  - திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை -  தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு


1 - 5th Std Revised Annual Exam Time Table - DEE Press Release 


திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பத்திரிக்கை செய்தி 

நாள் : 30-03-2025 


தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09-04-2025 முதல் 21-04-2025 வரை மூன்றாம் பருவத்தேர்வு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07-04-2025 முதல் 17-04-2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


 

1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்



 1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்


1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?


"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"


மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

- பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்



1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்

1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?


"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"


மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்



Term 3 - SA Timetable & Issue of Exam Question Papers - Guidelines - DEE Proceedings

 

 தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவம் - தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு வினாத்தாள்கள் வழங்குதல் -  வழிகாட்டுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 12-03-2025



Primary Education - Term 3 - Summative Assessment Timetable and Issue of Third Term Examination Question Papers - Guidelines - Proceedings of the Director of Elementary Education, Dated: 12-03-2025





2024-2025 - Annual Exam Timetable - 1 to 9th Std - DSE, DPS & DEE Joint Proceedings

 

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - DSE, DPS & DEE இணைச் செயல்முறைகள்


2024-2025 Annual Exam Timetable Class 1 to Class 9


2024-2025 Academic Year - Annual Examination Timetable Released for Students of Classes 1 to 9 - DSE, DPS & DEE Joint Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Revised Annual Exam Time Table with Year Correction 👇🏻👇🏻👇🏻



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...