கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குறிப்பாணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறிப்பாணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோரிக்கைகளுக்காக அலுவலகத் தலைவர் / துறைத் தலைவர் முன் அனுமதியின்றி முதலமைச்சர் (CM Cell), அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது - வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் சுற்றுக் குறிப்பாணை (Circular Memorandum) வெளியீடு



தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக அலுவலகத் தலைவர் / துறைத் தலைவர் முன் அனுமதியின்றி முதலமைச்சர் (CM Cell), அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது - வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் சுற்றுக் குறிப்பாணை (Circular Memorandum) வெளியீடு




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ந.க.எண்:DET-HO

efile56633/2026


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம், கிண்டி, சென்னை-32

நாள் : 22-10-2026


சுற்றுக் குறிப்பாணை


பொருள்:


பணியமைப்பு - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - பயிற்சிப்பிரிவு - இத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் - சேவை மற்றும் தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக அலுவலகத் தலைவர் / துறைத் தலைவரின் முன்அனுமதியின்றி மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மற்றும் முதலமைச்சரின் முகவரி (CM Cell) மனுக்கள் பயன்படுத்துதல் - அறிவுறுத்துதல் - தொடர்பாக,


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியைப் (Proper Official Channel) பின்பற்றாமல் மாண்புமிகு அமைச்சர்களின் அலுவலகங்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் முதலமைச்சரின் முகவரிப் பிரிவு (CM Cell) ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பித்து வருகின்றனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள், 1973(Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973) விதி 18ன் படி (Rule 18 Canvassing of non-official or other outside influence):


18. Canvassing of non-official or other outside influence No Government servant shall bring or attempt to bring any political or other outside influence to bear upon any superior authority to further his interests in respect of matters pertaining to his service under the Government.


"எந்தவொரு அரசுப் பணியாளரும், தங்களின் சேவை தொடர்பான விஷயங்களில் (Service matters) தங்களுக்குச் சாதகமான ஆணைகளைப் பெறுவதற்காகவோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ, எவ்வித வெளிச் செல்வாக்கையோ (outside influence) அரசியல் செல்வாக்கையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளையோ கொண்டுவரவோ அல்லது கொண்டுவர முயற்சிக்கவோ கூடாது."


மேலும், தமிழ்நாடு அரசுபணியாளர் நடத்தை விதிகள் 1973இன் விதி 20ன் படி, "அரசு பணியாளர்கள் தங்கள் குறைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, உரிய அதிகார்ப்பூர்வ வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் . மேலும், அரசின் நற்பெயர், கண்ணியம் அல்லது நலனுக்கு பாதகமாக இருக்கும் எந்த அறிக்கையையும் அல்லது தொடர்பையும் வழங்கக் கூடாது."


மேற்கண்ட விதிகளை மீறிச் செயல்படுவது நடத்தை விதிமீறலாகக் (Breach of Conduct Rules) கருதப்பட்டு அப்பணியாளர், அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


எனவே, இதன் மூலம் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பின்வருமாறு அறிவுறுத்தப்படுகிறது


1. இனிவரும் காலங்களில், அலுவலர்கள்/பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான எந்தவொரு கோரிக்கை அல்லது குறைகளுக்கும் தங்களது அலுவலகத் தலைவர் /துறைத் தலைமை வழியாக உரிய நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே (Through Proper Official Channel) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


2. துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி அல்லது உரிய வழியைப் பின்பற்றாமல் நேரடியாக மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முதலமைச்சரின் முகவரி போன்ற உயர் அமைப்புகளுக்கு மனு அனுப்புவதோ அல்லது வெளிச் செல்வாக்குகளைப் பயன்படுத்த முயற்சிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.


3. இந்த அறிவுறுத்தலையும் தாண்டி, எவரேனும் இவ்வாறு அலுவலகத் தலைவர் /துறைத்தலைவர் வழியாக அல்லாமல் நேரடியாக மனுக்கள் சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்/பணியாளர் நடத்தை விதி 18-ஐ மீறியதாகக் கருதப்பட்டு அவர் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் (TNCS (D&A) Rules) உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


அனைத்து அலுவலகத் தலைவர்களும் இச்சுற்றறிக்கையினைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி அதற்கான ஒப்புதலினைப் பெற்றுப் பராமரிக்குமாறு மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


RAJASHEKAR

ADDITIONAL DIRECTOR

22-10-2026



பெறுநர்

1. தலைமை அலுவலகம் , அனைத்து பிரிவுகள்.

2. அனைத்து சார்நிலை அலுவலர்கள், மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்கள்

3. இருப்புக்கோப்பு,

4. அறிவிப்பு பலகை 



அலுவலரிடம் வாக்குவாதம் - விளக்கம் அளிக்குமாறு ஆசிரியருக்கு குறிப்பாணை - CEO Proceedings

 

முதன்மைக் கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் - விளக்கம் அளிக்குமாறு ஆசிரியருக்கு  குறிப்பாணை - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



காஞ்சிபுரம் மாவட்டம் - தென்னேரி, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) திருமதி.P.சசிகலா என்பார் அலுவலரிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்தமைக்கு விளக்கம் கோருதல் - குறிப்பாணை வழங்குதல் சார்ந்து - காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி.P.சசிகலா என்பார், 08.08.2025 அன்று மாலை சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட சென்றார். அப்போது மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் பாடப்புத்தகம் அல்லாமல், தனியார் மூலம் தயாரிக்கப்பட்ட பாடக்குறிப்பு கையேடுகளை வைத்திருந்ததும், மாணவர்களிடம் முதன்மைக் கல்வி அலுவலர் இது குறித்து விசாரித்த போது தாங்கள் இதை மட்டுமே பின்பற்றி படித்து வருவதாக தெரிவித்தனர்.


மேலும், பள்ளி பாடவேளை நேரத்திலும், வகுப்பில் தனியர் மூலம் தயாரித்த கையேடு தான் பயன்படுத்த வேண்டுமென கூறி, இந்த கையேடு மட்டுமே ஆங்கில ஆசிரியரால் விற்கப்பட்டது, எனவே. நாங்கள் அனைவரும் இந்த கையேடு மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.


இது குறித்து ஆங்கிலப் பாட ஆசிரியரிடம் விசாரித்த போது, ஆசிரியர் உயர் அலுவலரிடம் முறையற்ற வார்த்தைகளையும், குரலை உயர்த்தி பேசியும் அவமதித்தார். மேலும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நான்கு பாடவேளையில் அரசால் வழங்கப்படும் பாடப்புத்தகத்தை முழுமையாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க இயலாது. 


எனவே தான். நான் தனியார் மூலம் தயாரித்த பாடக்குறிப்பு கையேடுகளை வைத்து கொண்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன் என்று கூறினார். இச்செயல், அரசின் பாடத்திட்டத்தையும், பள்ளியில் ஒதுக்கப்படும் பாடப்பிரிவு நேரத்தையும் அவமதிப்பதாக உள்ளது. இது முற்றிலும் அரசுக்கு எதிராக செயல்படும் நோக்கமாக கருதப்படுகிறது.


எனவே இதற்குண்டான விளக்கத்தினை 3 நாட்களுக்குள் அளிக்குமாறு தெரிவிக்கலாகிறது.


அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால் விளக்கம் அளிக்க ஏதும் இல்லை என கருதி தங்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின்படி துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


Upload CPS missing credit in online portal - Treasury Officer's Memorandum


CPS missing credit - online portalல் பதிவேற்றம் செய்ய கருவூல அலுவலர் குறிப்பாணை


Treasury Officer's Memorandum to upload CPS missing credit in online portal


CPS missing credit - online portalல் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது -  கருவூலம் மற்றும் கணக்குத் துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


எவ்வித கைப்பற்றுகையும் இல்லாமல் இருக்கும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அணித் தலைவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை...


 எவ்வித கைப்பற்றுகையும் இல்லாமல் இருக்கும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அணித் தலைவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை...


Election Flying Squad and Permanent Monitoring Committee, which remain without any seizure, have issued a memorandum to the Team Leader asking for an explanation...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - நிதித்துறை அலுவலகக் குறிப்பாணை...


 மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - நிதித்துறை அலுவலகக் குறிப்பாணை வெளியீடு...


4% Increase in Dearness Allowance for Central Government Employees - Increase from 46% to 50% w.e.f. 01-01-2024 - Finance Department Office Memorandum Issued...



>>> Click Here to Download Finance Department Office Memorandum...


குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக் கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...

 


குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...


அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் அதற்கான காரணத்தினை தலைமையாசிரியர் வழியாக அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.



>>> தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணியில் இருக்கும் காவலர்கள் அலைபேசி பயன்படுத்தக் கூடாது - காவல் துறை இயக்குநர் குறிப்பாணை (Police Personnel on duty should not use cell phones - Director General of Police / HoPF Memorandum)...


>>> பணியில் இருக்கும் காவலர்கள்  அலைபேசி பயன்படுத்தக் கூடாது - காவல் துறை இயக்குநர் குறிப்பாணை (Police Personnel on duty should not use cell phones - Director General of Police / HoPF Memorandum)...


பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்.


இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RAC டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே : ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

 ஆர்ஏசி டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே: ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு ஆர்ஏசி 44 நிலையில் இருந்த டிக்கெ...