கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு... (3 குழுக்களில் தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் உறுப்பினர்கள்)...

 நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு...

>>> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரின் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 ஓபிசி இட ஒதுக்கீடு - கை விரித்தது உச்ச நீதிமன்றம்...

 மருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.

நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு-உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு.

அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

🍁🍁🍁 MINORITY SCHOLARSHIP / NMMS தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? தெரிந்து கொள்வது எப்படி?

 MINORITY SCHOLARSHIP / NMMS தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய PFMS என்ற இணையதளத்தில் சென்று Bank Details மற்றும் வங்கி கணக்கு எண் இரண்டையும் டைப் செய்து தெரிந்துகொள்ளலாம்.

>>> Click here to go PFMS Website...


🍁🍁🍁 பள்ளிகள் இப்போதைக்கு திறப்பு இல்லை - நேரடியாக முழு ஆண்டு தேர்வு தான்..(நாளிதழ் செய்தி)...

 



🍁🍁🍁 நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு: குழப்பமான நிலையில் தேர்வுத்துறை...

 பொதுத்தேர்வு நடத்த 6 மாதங்களுக்கு முன்பே பணிகளை துவக்க வேண்டிய நிலையில் தேர்வுத்துறைக்கு முறையான  ஆலோசனைகளோ வழிகாட்டுதல்களோ அரசிடமிருந்து இதுவரை  வராத நிலையில் தேர்வுத்துறை குழப்பமான நிலையில் உள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு  சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் கொரோனா பரவல் இருந்தாலும்  10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பது பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

அந்த வகையில் டிசம்பர் மாதம் ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமோ தேர்வினையும் அல்லது அதற்கு  பிறகு திறக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுதேர்தலுக்கு பிறகு  ஜூன், ஜூலை மாதத்தில் தேர்வினை நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் பொதுத்தேர்வினை நடத்துவதற்குரிய  பணிகளை அரசு தேர்வுத்துறை 6 மாதங்களுக்கு முன்னதாக துவங்கும். அவ்வாறு துவங்கினால் மட்டுமே 10, 11, 12ஆகிய 3 வகுப்புகளுக்கும் சிக்கல் இல்லாமல் பொதுத் தேர்வினை நடத்த முடியும். ஆனால் தற்போது வரை அரசிடமிருந்து பொதுத்தேர்வுகள் சம்பந்தமான ஆரம்பகட்ட ஆலோசனைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் பொதுத்தேர்வினை சிக்கல் இல்லாமல் நடத்த வேண்டும் என்ற நிலையில் தேர்வுத்துறை குழப்பத்தில் உள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த விவகாரத்தில் முறையான முடிவெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

🍁🍁🍁 SBI ATM-ல் பணம் எடுக்கும் விதியில் மாற்றம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

 


எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திரும்பப் பெறும் விதிகள் மாறிவிட்டன - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விதிகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

 இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏற்கனவே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகளில் ஓடிபி (OTP) அம்சத்தை கொண்டுவந்துள்ளது. செப்டம்பர் 18 முதல், எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணம் பெறுவதற்கான நேரத்தை நீட்டிப்பதாக வங்கி அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் எடுக்கலாம், எந்தவித சிரமம் இல்லை. 

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஓடிபி (SBI OTP) விதிகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் திரும்பப் பெறலாம். அதாவது இனிமேல் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.

எஸ்பிஐ (State Bank of India Rules) தனது விதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், "வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யவும்" என வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

"எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலத்தை எஸ்.டி.பி வங்கி 24x7 ஆக நீட்டித்துள்ளது. எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யுங்கள்!" என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கி இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்திருந்தது.

OTP எதற்கு?

முறைக்கேடான பரிவர்த்தனைகளை தடுக்கும் நோக்கில் பரிவர்த்தனையின் போது OTP அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனைகளை SBI அறிமுகப்படுத்தியது. பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க OTP  அடிப்படையிலான இந்த முறையை அறிமுகப்படுத்திய ஸ்டேட் வங்கி பணம் எடுக்கும் முறையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. 

மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து, SBI அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது.

🍁🍁🍁 பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பாடங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு...

பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பாடங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்களின் இலவச, 'லேப்டாப்'பில், 'நீட்' தேர்வுக்கான பாடங்களை வழங்க, பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. 

தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 

அவற்றில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் ஒன்று.இந்த திட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1 படிக்கும்போதே, லேப்டாப் வழங்கப்படுகிறது.

 இவ்வாறு வழங்கப்பட்ட லேப்டாப்பை, பிளஸ் 2 பொது தேர்வுக்கான பயிற்சிக்கு பயன்படுத்துமாறு, ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டு, இலவச லேப்டாப்பில், பிளஸ் 2 தொடர்பான வீடியோ பாடங்கள், பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு லேப்டாப்பிலேயே, நீட் தொடர்பான வீடியோ பாடங்களை பதிவேற்றம் செய்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் வகையில், அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், ஆசிரியர்கள், தங்களுக்கு கிடைக்கும் நீட் தொடர்பான பாடக் குறிப்புகளை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் வழியே வழங்கி வருகிறோம்.மேலும், நீட் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களை வீடியோ முறையில் தயாரித்து, இலவச லேப்டாப்பில், பதிவேற்றம் செய்து தருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office

ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை  - பாம்பனில்  மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்  ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை   கா...