கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்...
🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 01.11.2020 (ஞாயிறு)...
🌹இழந்ததை எண்ணாதே என்று சொல்பவருக்கு அது வெறும் வார்த்தை.
ஆனால் இழந்து துடிப்பவருக்கு தான் தெரியும் அது அவருடைய வாழ்க்கை என்று.!
🌹🌹அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை.எனவே முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளுவோம்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⚫⚫கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
👉2006,2011,2016 ஆகிய 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பாபநாசம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக 3 முறை வெற்றி பெற்றவர் தஞ்சாவூர் மாவட்டம் வன்னியடி என்ற அவரது சொந்த கிராமத்தில் கிராமத்தில் இறுதி ஊர்வலத்துடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
📕📘தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
👉9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி
👉பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
👉நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி
👉அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
👉காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம் - தமிழக அரசு
👉வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி
👉பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நவ. 10. முதல் செயல்பட அரசு அனுமதி
👉திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி
👉வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி தவிர) தமிழகம் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் இ-பாஸ் தொடர்ந்து அமலில் இருக்கும் - தமிழக அரசு
📕📘ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
📕📘நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
📕📘தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணத்தில் 30% ரத்து: ஆந்திர அரசு
📕📘மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல் வெளியீடு ( மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விபரம்)
📕📘RTE சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு
📕📘‘கேட்’ நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில் நவ.13 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்.
📕📘அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்முறைகள்: கருத்துத் தெரிவிக்க ஏஐசிடிஇ அழைப்பு
📕📘அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதா அரசியலமைப்புக்கு உட்பட்டதுதான்: இந்திய தலைமை வக்கீல் துஷார் மேத்தா கருத்து
📕📘சி.ஏ. தேர்வு நவம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் - ஐசிஏஐ விளக்கம்
📕📘நாட்டிலேயே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மாநிலங்களில் கேரளாவுக்கு முதலிடம்; கடைசி இடத்தில் உத்தரப் பிரதேசம்: பிஏசி அமைப்பு அறிக்கை
📕📘50 ஆயிரத்திற்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம்: ஜனவரி முதல் அமல்
📕📘அறிவியல், பொறியியல் ஆராய்ச்சிகளில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் செர்ப்-பவர் என்னும் திட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்
📕📘தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் - சுகாதாரத்துறை தகவல்.
📕📘சைனிக் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் OBC இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
📕📘தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
📕📘இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடுவதை முன்னிட்டு தலைமை செயலகம் வண்ண விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 📕📘திருமணத்திற்காக மதம் மாற்றுவது செல்லுபடியாகாது: உயர் நீதிமன்றம்.
📕📘பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுக்குப் பின்னர் "புல்வாமா பயங்கரவாத தாக்குதல்" குறித்த உண்மை வெளிப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி பேச்சு
📕📘குஜராத் மாநில கெவடியாவில் இந்தியாவின் முதல் நீர் வழி விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
📕📘தமிழ்நாடு புதுச்சேரி இடையே ePass இல்லாமல் பயணிக்கலாம், தமிழ்நாடு புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.
📕📘மதவாத சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க மதவாத சக்திகள் முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அண்ணாவும், கலைஞரும் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் மொழி, இன உணவு, மாநில உரிமைகளை கட்டிக்காத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
📕📘இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மாவின் உடற்தகுதியை பிசிசிஐ இன்று பரிசோதிக்கிறது.
👉ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான அணியில் ரோகித் ஷர்மா புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
📕📘ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
📕📘இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.
👉நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்படுத்தப்படுகின்றன.
👉வீடுகளில் கேஸ் சிலிண்டர் பெற விரும்புவோருக்கு ஓடிபி எண் அளிக்கப்படும்.
👉முதலில் இத்திட்டம் நூறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
👉வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைத் தெரிவித்தால்தான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
👉சர்வதேச விலையைப் பொருத்து மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
👉இந்தியா முழுவதும் 77189 55555 என்ற ஒரே தொலைபேசி எண் மூலம் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
🍁🍁🍁 பழைய பென்ஷன், புதிய பென்ஷன்! பணப்பலனில் என்ன வித்தியாசம்?
மத்திய - மாநில அரசு ஊழியர் களுக்கான பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ‘மீண்டும் பழைய பென்ஷன்’ என்பதே ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. காரணம், பணப்பலன்! இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதெனில் மாதாந்திர பென்ஷன்!
பழைய பென்ஷன் என்ன கிடைக்கும்?
தமிழக அரசில் 31.3.2003-க்குமுன்பும், மத்திய அரசில் 31.12.2003-க்குமுன்பும் அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெறுவோர்க்குத் தரப்படுவது பழைய பென்ஷன் திட்டம். மாதாந்திர பென்ஷன், குடும்ப பென்ஷன், கிராஜுட்டி, பென்ஷன் கம்யூடேசன் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த நான்கு வகைப் பணப்பலனும் அரசே வழங்குபவை. இதற்காக ஊழியர்கள் தமது சம்பளத்திலிருந்து சந்தா தொகையாக எதுவும் செலுத்தத் தேவையில்லை.
புதிய பென்ஷன் திட்டம்
பழைய பென்ஷன் திட்டத்துக்கு மாற்றாக வந்திருக்கும் புதிய பென்ஷன் திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் வைத்திருக்கும் பெயர் தேசிய பென்ஷன் திட்டம் (National Pension System). சுருக்கமாக, என்.பி.எஸ். இந்தத் திட்டத்தின் படி, ஊழியரின் சம்பளத்திலிருந்து 10% தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ‘பென்ஷன் நிதி’யில் சேர்க்கப்படும். மத்திய அரசும் தனது பங்களிப்பாக ஊழியரின் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப் படியில் 10% தொகையை ஊழியரின் பென்ஷன் கணக்கில் வரவு வைக்கும். இதனை பென்ஷன் நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory And Development Authority of India) நிர்வகிக்கும்.
என்.பி.எஸ். திட்டம் சார்ந்த மத்திய அரசு ஊழியர் ஓய்வுபெறும் போது குறைந்தபட்சம் 40% முதிர்வுத்தொகையை மாதாந்திர பென்ஷன் பெற முதலீடு செய்துவிட்டு, 60% தொகையை ஒட்டு மொத்தமாகப் பெற்றுச் செல்லலாம். முதலீடு செய்த தொகைக்கு, சந்தை நிலவரப்படி கிடைக்கும் தொகை மாதாந்திர பென்ஷனாகக் கிடைக்கும். இதுவே என்.பி.எஸ்.-ன் அடிப்படை.
ரத்து செய்யப்பட்ட சலுகைகள்
புதிய பென்ஷன் திட்டம் வந்தபின் பழைய பென்ஷன் திட்டத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட சலுகைகள்...
* அரசே மாதாந்திர பென்ஷன் தருவதற்குப் பதிலாக ஊழியரின் முதலீட்டிலிருந்து மாதாந்திர பென்ஷன் பெறவேண்டி உள்ளது.
* குடும்ப பென்ஷன் இல்லை.
* கிராஜுட்டி கிடைக்காது.
* பென்ஷன் கம்யூடேசனுக்கு வாய்ப்பில்லை.
திரும்பக் கிடைத்த சலுகைகள்
ஆனால், பழைய பென்ஷன் திட்டத்தில் இருந்த சில சலுகைகள் பின்னர் என்.பி.எஸ் திட்டத்துக்கும் கிடைத்துள்ளன. அவை...
* பணியில் இருக்கும்போது இறந்துபோகும் என்.பி.எஸ். உறுப்பினரின் குடும்பத்துக்கும் (2009 முதல்) குடும்ப பென்ஷன் கிடைக்கும்.
* பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளது போலவே, என்.பி.எஸ்.-க்கும் (2016-ல்) கிராஜுட்டி வந்து சேர்ந்துவிட்டது.
* பத்து சதவிகிதமாக இருந்துவந்த அரசுத்தரப்பு பென்ஷன் பங்களிப்புத் தொகை 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அரசின் பங்களிப்பு உயர்வதனால், 10+10= 20% என இருந்த என்.பி.எஸ். பென்ஷன் சந்தா, 10+14= 24 சதவிகிதமாக உயரும். இதனால் ஓய்வுபெறும்போது கிடைக்கும் என்.பி.எஸ். முதிர்வுத்தொகை அதிகரிக்கும்.
இந்த முதிர்வுத் தொகை முழுவதையும் பென்ஷனுக்கான முதலீடாக விட்டு வைத்தால் கிடைக்கக்கூடிய என்.பி.எஸ். பென்ஷன் தொகை, பழைய பென்ஷன் தொகையைவிட அதிகமாக இருக்கும் என்பது கணக்கீடு.
அடிப்படைக் கேள்வி
என்.பி.எஸ். திட்டத்தின்மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை முழுவதையும் பென்ஷனுக்கான முதலீடாக விட்டு வைத்தால், பழைய பென்ஷனை விட, என்.பி.எஸ். பென்ஷன் அதிகமாக இருக்கும் என்றால், பழைய பென்ஷனையே வழங்கலாமே என்று கேட்கலாம், காரணம் என்னவெனில், என்.பி.எஸ். திட்டத்தின்கீழ் மத்திய அரசு தனது பங்களிப்பாக, ஊழியர்களின் இப்போதைய சம்பளத்தில் 14% மட்டும் செலுத்தினாலே போதுமானது. இதுவே பழைய பென்ஷன் என்றால் ஊழியரின் அப்போதைய சம்பளத்தில் அதாவது, ஓய்வு பெறும்போது பெறப்போகும் சம்பளத்தில் 50% + அகவிலைப்படி தரவேண்டி இருக்கும்.
என்.பி.எஸ். சந்தாவை 30 ஆண்டுக் காலம் முதலீடு செய்வதால், 10% - 12% வரை கூட்டு வளர்ச்சி அடைய வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாம். இதனால்தான் என்.பி.எஸ். பென்ஷன் தொகை பழைய பென்ஷனைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் அரசின் நிதிச்சுமை குறையவும் வழி வகுக்கிறது.
மத்திய அரசில் தற்போது, பழைய பென்ஷன் மற்றும் என்.பி.எஸ். எனும் தேசிய பென்ஷன் திட்டம் ஆகிய இரண்டும் நடைமுறையில் உள்ளன.
தமிழக அரசு ஊழியர்களுக்கான சி.பி.எஸ்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டம் 31.03.2003 வரை அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கே பொருந்தும். 01.04.2003 அன்றும், அதன்பிறகும் தமிழக அரசுப் பணியில் சேர்ந்த ஏ, பி, சி, டி உள்ளிட்ட நான்கு பிரிவினருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே (Contributory Pension Scheme) அதாவது, சி.பி.எஸ். திட்டமே நடைமுறையில் உள்ளது இந்தத் திட்டத்தின்கீழ் 5,06,000-க்கும் அதிகமான ஊழியர்கள் இதன் சந்தாரர்களாக உள்ளனர். சி.பி.எஸ் திட்டத்தைத் தமிழக அரசு, தனது கருவூலக் கணக்குத் துறை மூலம் நிர்வகிக்கிறது.
சி.பி.எஸ். திட்டத்தின்படி, ஒரு ஊழியரின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசுத் தரப்புப் பங்களிப்பாக 10% சேர்க்கப்பட்டு, மாதந்தோறும் 20% பென்ஷன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஓய்வுபெறும் ஊழியருக்கு அவரது சந்தா, அதற்கான வட்டி, அரசின் பங்களிப்பு சந்தா மற்றும் அதற்கான வட்டி ஆகிய நான்கு இனங்களும் தனித்தனியே பட்டியலிடப்பட்டு ஊழியரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இந்த முதிர்வுத் தொகையை முதலீடு செய்து மாத வருமானத்துக்கு வழிசெய்துகொள்வது ஊழியரின் விருப்பம் சார்ந்தது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை மாற்றம் ஏதுமின்றி தொடர்கிறது. இதற்கான வட்டி விகிதம் ஜி.பி.எஃப்-க்கு உள்ள வட்டி விகிதம்தான்.
தமிழக அரசில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எஃப்ஸ் போன்ற அகில இந்திய அதிகாரிகளும் (All India Service Officers) பணிபுரிகின்றனர். 01.01.2004-க்குப்பிறகு பணிக்கு வந்த இவர்களுக்கு மத்திய அரசின் என்.பி.எஸ். திட்டமே பொருந்தும். எனவே, இவர்களுக்கான சந்தா தொகையை, பென்ஷன் நிதிய ஆணையத்துக்கு (PFRDAI) செலுத்தி வருகிறது தமிழக அரசு. ஆக மொத்தம், பழைய பென்ஷன், என்.பி.எஸ்., மற்றும் சி.பி.எஸ். ஆகிய மூன்று பென்ஷன் திட்டங்கள் தமிழக அரசில் உள்ளன.
வேறுபடும் பணப்பலன்...
பழைய பென்ஷன், என்.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். திட்டங்களின்கீழ் ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணப்பலன் வேறுபடுகிறது. அவ்வாறு வேறுபடும் பணப்பலன் எவ்வளவு என்பதை ஒப்பீட்டு அட்டவணையில் தரப்பட்டு உள்ளது. 01.01.2006 அன்று, தமிழக அரசுப் பணியில் சேர்ந்து 31.03.2036 அன்று ஓய்வு பெற உள்ள ஓர் அலுவலர் இந்த அட்டவணைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தக் கணக்கீடு எவற்றின் அடிப்படையில் செய்யப் பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் இனி...
* 31.03.2025 வரை ஏழாவது சம்பள கமிஷன்படி அடிப்படைச் சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது.
* 01.01.2026 முதல் 1.84 என்ற காரணியின் அடிப்படையில் சம்பள நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நான்கு பதவி உயர்வுகள் தரப்பட்டு உள்ளன.
* என்.பி.எஸ்-ல் அரசின் பங்களிப்பு 31.03.2019 வரை 10% எனவும், 01.04.2019 முதல் 14% எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
* என்.பி.எஸ். வளர்ச்சி 10% என்ற அளவிலும், முதிர்வுத் தொகை மூலமான பென்ஷனுக்கு 8% வட்டியும் கணக்கிடப் பட்டுள்ளது.
* சி.பி.எஸ்-க்கு 8% வட்டி கணக்கிடப்பட்டுள்ளது.
* தற்போதைய நிலவரத்துக்கு ஏற்றபடி அகவிலைப்படி கணக்கிடப்பட்டுள்ளது.
சில சலுகைகள் இல்லாமல் போனாலும், தற்போதைய நிலையில் என்.பி.எஸ். திட்டமே பெஸ்ட் என்பதில் சந்தேகமில்லை!
- ப.முகைதீன் சேக்தாவூது (நன்றி: விகடன்.com)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET
TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...