தமிழ்நாடுஅரசு - அம்மா சிமெண்ட் மூட்டை விலை ரூ.190லிருந்து ரு.216 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு...
அரசாணை எண்.261, நாள்.11-12-2020
தமிழ்நாடுஅரசு - அம்மா சிமெண்ட் மூட்டை விலை ரூ.190லிருந்து ரு.216 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு...
அரசாணை எண்.261, நாள்.11-12-2020
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சென்ற மாதம் நவம்பர்16அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை இந்த மாதம்
டிசம்பர் 12.12.2020, சனிக்கிழமை 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:00 வரை நடைபெற உள்ளது.
இதுவே இறுதி வாய்ப்பு
இதில் 18 வயது பூர்த்தியடைந்த ஆண்,பெண் (31.12.2002 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்). புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்திசெய்து தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள முடியும்.
பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம்,
வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம்,
முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் ,
குறிப்பு
ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள இன்றைய தினம் நடைபெறும் 12.12.2020 சனிக்கிழமை
13.12.2020 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.
🌹அனுபவங்கள் கற்று தந்தது வாழ வழியை மட்டுமல்ல,
வாழ்வில் வந்து போகும் மாற்றங்களையும் மாறிச்செல்லும் மனித குணங்களையும் தான்.!
🌹🌹பிறருக்கு தேவைப்படும் போது நல்லவனாக தெரியும் நாம்
அவர்கள் தேவைகள் முடிந்தவுடன் கெட்டவனாகி விடுகின்றோம்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑இன்று 12/12/2020 (சனிக்கிழமை) மற்றும் நாளை 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை)
ஆகிய இரு தினங்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் நீக்கம் ஆகியவை செய்ய சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி உள்ள பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கடைசி சிறப்பு முகாம் இதுவாகும்.எனவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
⛑⛑ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை இனி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் தகவல்
⛑⛑G.O 184 உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 27 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் - அரசாணை வெளியீடு
⛑⛑சென்னை எஸ்ஐஇடி மகளிர் கல்லூரிக்கு மத்திய அரசின் நட்சத்திரக் கல்லூரி தகுதி: ரூ.1.59 கோடி ஒதுக்கீடு
⛑⛑ஆன்லைனில் தவறாக ‘கிளிக்’ செய்ததால் ஐஐடி.யில் சீட் இழந்த மாணவனுக்கு மீண்டும் இடம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
⛑⛑NMMS தோ்வில் தோ்ச்சி: மாணவா்களின் விவரங்களை தாமதமின்றி பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
⛑⛑பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நிறைவு: பிடிஎஸ் படிப்புக்கு ஆர்வமில்லை; காத்திருப்போர் 296
⛑⛑2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பு சார்ந்து - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக நிதி விடுவிக்கப்பட்டது - செலவினங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு அறிவிப்பு வெளியீடு
⛑⛑10 ஆண்டுகளாக நிரந்தர தீர்வுக்கான அரசாணையை எதிர்பார்த்துக் காத்துள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்- தமிழக அரசின் கருணைக்கண் படுமா..? என எதிர்பார்ப்பு
⛑⛑மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு
⛑⛑NEET, JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20% வரை குறைக்க வாய்ப்பு: மத்திய அமைச்சர்
⛑⛑மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 17ஆம் நாளாக விவசாயிகள் போராட்டம்
⛑⛑ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என இந்தியாவை மாற்ற முயற்சிப்பது போல் மருத்துவத்தையும் மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது - இந்திய மருத்துவ சங்கம்.
⛑⛑டெல்லி மற்றும் மும்பையில் முதல்சுற்றில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய 3 லட்சத்து 25 ஆயிரம், சுகாதாரப் பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
⛑⛑திட்டமிட்டப்படி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார்.
⛑⛑2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள, வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.
⛑⛑இந்தியா-நேபாளம் இடையேயான விமான சேவையை தொடங்க இருதரப்பும் ஒப்புதல் என தகவல்.
⛑⛑ஆசிய பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் சோனு சூட் முதலிடம்- லண்டனைச் சேர்ந்த நாளிதழில் தகவல்.
⛑⛑பிரிட்டனின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதையடுத்து, ஒவ்வாமை நோய் உடையவா்கள் அந்தத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
⛑⛑இஸ்ரேலில் வரும் 27 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.
⛑⛑கொரோனா தடுப்பு: பில் கேட்ஸ் ரூ.1,842 கோடி நன்கொடை.
⛑⛑இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி உட்பட நிலவுக்கு செல்லும் 18 வீரர்கள் பெயர்களை அறிவித்தது நாசா
⛑⛑இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.
நான்கு டெஸ்ட், 5 ட்வெண்டி ட்வெண்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரு அணிகளும் பங்கேற்கின்றன.
இதில் சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
⛑⛑மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணி குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
⛑⛑அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்திய நிகழ்ச்சியின் போது முககவசம்,தனி மனிதவிலகலை பின்பற்றாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு - தமிழக அரசு,சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்
⛑⛑Engineering மாணவர்களுக்கு 2021 ஏப்ரல் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.
👉Engineering Final Semester-ல் உள்ள மாணவர்களுக்கு மட்டும் 2021 ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள்.
- அண்ணா பல்கலைக்கழகம்
⛑⛑தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது.
⛑⛑திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்களும் தரிசனம் செய்யலாம்
- கோயில் நிர்வாகம்
⛑⛑அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் 2020 ஆம் ஆண்டுக்கான, டைம் பத்திரிகையின் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
⛑⛑மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது
பாதுகாப்பு படை வீரர்களை தாண்டி ஜே.பி.நட்டா மீது எப்படி தாக்குதல் நடத்தியிருக்க முடியும்?
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
⛑⛑புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சோழர் கால தேர்தல் நடைமுறைகளைப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும், "புதிய நாடாளுமன்ற கட்டடம், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான உதாரணமாகத் திகழ்கிறது" என்றார்.
⛑⛑மலிவு விலையில் உணவகம், மருந்தகம், மருத்துவனை நடத்திய வந்த கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
👉குறைந்த விலையில் உணவகம் நடத்தி பலரது பசியை தீர்த்த கோவை சாந்தி கேண்டீன் மற்றும் சாந்தி சோசியல் சர்வீஸ் சேர்மன் சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். 10 ரூபாய்க்கு சாப்பாடும், 5 ரூபாய்க்கு டிபனும் கொடுத்து பல ஆண்டுகள் சேவை செய்தவர் சுப்ரமணியம். இவர் லாப நோக்கம் இன்றி உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை சேவையாக செய்தார். தினமும் இவரது கேண்டீனில் 15 ஆயிரம் பேர் பசியாறி வருகிறார்கள். மலிவு விலை மருந்தகம், மருத்துவமனையில் பலன் அடைந்தவர்கள் எண்ணில் அடங்காதவை
சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்ரமணியம் மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தொழில்முனைவோராக உச்சம் தொட்ட பின் மலிவு விலை உணவகம் - மருத்துவமனை - கல்வி உதவிகள் - ஸ்டாக் விலைக்கே பெட்ரோல்- டீசல் விற்பனை என சமூகத்துக்கும் திருப்பி தந்த கோவை பெரியவர் சாந்தி கியர்ஸ் திரு.சுப்பிரமணியம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.'
⛑⛑தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் - இணைய வழியில் நடக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 ( India International Science Festival 2020 )...
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது, அறிவியலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நிகழ்வாகும். இதை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து நடத்தி வருகிறது.
அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகள் பற்றி அறிந்துகொள்ளப் பள்ளி மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கின்ற மிகப்பெரும் அறிவியல் திருவிழாவாக இது விளங்கி வருகிறது. இந்தப் பேரிடர் காலகட்டத்தில் அறிவியல் திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை நான்கு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது.
இந்த வருடம் 35க்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த அறிவியல் திருவிழாவில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கிராமம், கட்டுரை எழுதும் போட்டி, செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போட்டி போன்ற நிகழ்வுகளும், பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் கட்டுரைகள் எழுதுதல், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளும், கல்லூரி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிக் கருத்தரங்கு உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகளும் சர்வதேச அறிவியல் திருவிழாவில் நடைபெற உள்ளன.
குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கான ’அறிவியல் கிராமம்’ என்ற நிகழ்வில் 5 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பங்கேற்க முடியும். அதைத் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் போட்டியானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது.
கட்டுரைப் போட்டியின் தலைப்பு: அறிவியல் எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்?
நான்கு பிரிவுகள்
* 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
(முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000)
* 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள்
(முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)
* இளநிலை/ முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்
(முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)
* ஆய்வுகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள்
(முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)
கட்டுரை 600 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
போட்டியில் பங்கேற்க:
1.www.scienceindiafest.org இணையதளத்திற்குச் சென்று IISFஇல் (இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா) உங்கள் பெயரைப் பதிவு செய்யவும்.
2. நிகழ்வுகள் பதிவுப் பக்கத்தில் உங்கள் ஆதாரச் சான்றுகளோடு உள்நுழையவும்.
3. டேஷ்போர்டில், 41 நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் இந்தியாவில் அறிவியல் கல்வியைத் தேர்ந்தெடுத்து உங்கள் கட்டுரையைச் சமர்ப்பிக்கவும்.
கடைசித் தேதி: 15 டிசம்பர் 2020.
அறிவியல் திருவிழாவில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் www.scienceindiafest.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து இணையவழியில் இந்த சர்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்கலாம். முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், மின் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு: கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர்- கலிலியோ அறிவியல் கழகம்
தொடர்புக்கு: 87782 01926.
1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (School Profile)
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்திர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச்சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் (கால அட்டவணையுடன்)
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
53.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
54.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
55.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
56.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
57.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
58.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
59.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
60.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
61.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
62.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
63.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்விஉதவித்தொகை பதிவேடு
தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்...
Chief Secretary Letter No. 29530/S1/2020-1, Dated: 03-12-2020...
அரசாணை எண்:184, நாள்: 11-12-2020 - உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 27 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் - அரசாணை வெளியீடு...
>>> அரசாணை எண்:184, நாள்: 11-12-2020 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...