கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நிபந்தனை ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு அரசாணை விரைவில் வெளிவரலாம்...
‘‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது.
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை குழந்தைகளுக்கும் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும், அனைத்து குழந்தைகளுக்கும் எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறும் உரிமை வழங்கப்படுவதாக சட்டம் தெரிவிக்கிறது. இச்சட்டம் கல்வி நிறுவனங்கள் கட்டமைப்பு, பாடத்திட்டங்கள் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்கள் குறித்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் பிரிவு 23 (1) ன் படி, எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படக் கூடிய ஆசிரியர்களின் கல்வித் தகுதி தேசிய கல்வியியல் குழுமம் NCTE ன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில அரசுகள் வரையறுக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் 23.8.2010 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மத்திய அரசுப் பள்ளிகளில் 6.3.2012 க்கு பின்னர் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தகுதித் தேர்வு கட்டாயம் என கூறப்பட்டு அதற்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள அரசு 20.9.12 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண் 294ன் படி 31.3.2012 க்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது.
கர்நாடக அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அறிக்கை தேதியான 28 .7.2012க்குப் பிறகே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது.
TET நிபந்தனை ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு உறுதிசெய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பொதுச் செயலாளர்.
நீதிமன்றத்தில் பல்வேறு நீதியரசர்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையிலும், மெட்ரிக் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற நிலையிலும், மாநில அரசுகளை இதுகுறித்த சட்ட நடைமுறைகளில் உரிய முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கிற நிலையிலும் தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு தெளிவான முடிவை எடுக்காததால் ஏற்பட்ட சிக்கலான சூழலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தற்காலிக தீர்வாக இந்த வகை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு தமிழக அரசு முடிவு எடுக்கும் என கடந்த வருடம் ஒருசில பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளை செயல்படுத்தாத தமிழக அரசு, பாடத்திட்டங்கள் அதற்கான ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் நியமனம், வகுப்பறை கட்டமைப்பு போன்றவற்றை கண்டுகொள்ளாத அரசு ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வதும் தொடர்ந்து குழப்பமான பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பதும் அரசின் தெளிவற்ற நிலையை காண்பிக்கிறது.
மேலும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு விலக்களித்து அல்லது ஒரு புத்தாக்கப் பயிற்சியை நடத்தி அவர்களை தகுதி பெற்றவர்களாக அறிவிப்பதுதான் தமிழக அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பானதாக அமையும்’’ என்றார்.
2010 க்கும் 2014க்கும் இடையில் தெளிவான அரசாணைகள் இல்லாததால் ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லாமல் ஆனால் மாவட்ட கல்வி அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டு பணியில் உள்ள 1700 ஆசிரியர்கள் நிலை கவலைக்குரியது.16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகளை மையமாக கொண்டு, 16/11/2012 ஆம் தேதிக்கு முன்பு பணி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுமையாக விலக்கு என்ற நியாயமான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விரைவில் அரசாணை வெளிவிடும் என்று நம்பலாம் .
இன்றைய செய்திகள் தொகுப்பு...13.12.2020 (ஞாயிறு)...
🌹மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்
ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்
இல்லையென்றால் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்.!
🌹🌹கொஞ்சம் அனுசரித்து வாழ்வது நல்ல வாழ்க்கை.
எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்வது நரக வாழ்க்கை.!!
🌹🌹🌹கோபத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை
கோபம் தீர்ந்து விடும்
வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்
பிறர் மனதில் ஆறாத வலிகளாய்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘அண்ணாமலை பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி - தேர்வு முடிவுகள் வெளியீடு. 📕📘 2019-20 ஆம் கல்வியாண்டின் NTSE இரண்டாம் நிலை (Stage II ) தேர்வு 07-02-2021 அன்று நடைபெறும்.
📕📘பள்ளிக் கல்வித் துறை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (2019-20) - அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Card)வழங்குதல் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவுப் பெற்று 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் வெளியீடு.
📕📘TRB - கல்லூரிக் கல்வித் துறை - ஆசிரியர் தேர்வு வாரியம் - மந்தனப் பணி மேற்கொள்ள - 73 பாடப்பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து இனை இயக்குநர்கள், அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அனைத்து இணைப் பேராசிரியர்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் கோருதல் தொடர்பாக அறிவிப்பு வெளியீடு.
📕📘அடுத்த கல்வி ஆண்டில் புதிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்" மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல்
📕📘தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி
📕📘இந்த ஆண்டு நீட் ( NEET ) பயிற்சியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
📕📘அண்ணா பல்கலைக்கழக பணிநிரவல் ஆசிரியர்கள் 25 பேர் துணைவேந்தரிடம் மனு
📕📘அதிக வாக்காளர்களை சேர்த்து ,ஷெல்பி எடுத்து அனுப்பும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ( BLO - Booth Level Officer ) சிறப்பு பரிசு வழங்கப்படும் -ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவல்(நாளிதழ் செய்தி)
📕📘சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
📕📘அடல் சுரங்கப் பாதையை பொறியியல் மாணவா்கள் பாா்வையிட ஊக்குவிக்க வேண்டும்: யுஜிசி
📕📘பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
📕📘10,906 காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு இன்று நடக்கிறது.
📕📘அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்
📕📘உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கிவரும் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்டமாக 1995-96 - ஆம் ஆண்டு முதல் 2010-11 - ஆம் ஆண்டு வரை துவங்கப்பட்ட 14 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டது - மீதமுள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
📕📘IGNOU மூலம் B.ED பயின்றவர்களுக்கு , EVALUATION CERTIFICATE தேவையில்லை என்பதற்கான -அரசாணை மற்றும் செயல்முறைகள் வெளியீடு
📕📘மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் உபரி ஆசிரியர்களை மாற்றி நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு.
📕📘தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
📕📘இணைய வழியில் நடக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 : விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் www.scienceindiafest.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்.
📕📘தமிழ்நாடு அடிப்படைப் பணி - அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
📕📘7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கூடுதலாக 161 MBBS இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பின என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
📕📘தமிழகத்தில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், --ஜனவரியில் திறக்கப்பட உள்ளன.கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. தமிழகத்தில், பள்ளிகளை தவிர, கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன - நாளிதழ் செய்தி
📕📘'அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர் புதிய ஆசிரியர் பணியிடம் அவசியம்' - அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ள பள்ளிகளில் விகிதாசார அடிப்படையில் ஆசிரியர் பணிநியமனம் செய்ய கோரிக்கை
📕📘விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக, ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியின் துணை முதலமைச்சராக உள்ள துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.
📕📘100 கோடி தடுப்பூசி டோஸ்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ்.
📕📘போட்டியில் பங்கேற்க உடல் தகுதி பெற்றாா் ரோஹித் சா்மா:நாளை ஆஸ்திரேலியா செல்கிறாா்.
📕📘கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது.உயர் நீதிமன்றம் உத்தரவு
📕📘மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு
📕📘தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்;அமைச்சர் செங்கோட்டையன்
📕📘வரும் 16ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு !!?
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
📕📘ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலை.
ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் சிறுநீரக செயல்பாடு எந்த நேரத்திலும் மோசமடையக்கூடும் என தகவல்.
📕📘ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர்
மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார் - ஸ்டாலின்
👉ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள்
ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக
- ஸ்டாலின்
📕📘தமிழகத்தில் அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்பு கூட்டத்தில் காணொலி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். தமிழகம் மீட்போம் தேர்தல் சிறப்பு கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் நேற்று உரையாற்றிய போது தண்ணியில்லாத காடு ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரை மாற்றியது திமுக ஆட்சிதான் என அவர் குறிப்பிட்டார்.
📕📘மூழ்கிய பயிரை பிடுங்கி முகர்ந்து பார்த்தால், நிவாரணம் வந்து சேர்ந்துவிட்டதாக நிம்மதி கொள்வார்களா?
மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
📕📘வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதார குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
📕📘தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு
📕📘நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். 📕📘பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பாலத்தில் நேற்று நிகழ்ந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தருமபுரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பாலத்தை கடந்த போது பாரம் தாங்காமல் லாரி கட்டுப்பாட்டை இழந்தது. பிரேக் முறிந்த லாரி வேகமாக ஓடி முன்னே சென்ற வாகனத்தை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது. அந்த நேரத்தில் சாலையின் வலது பக்கத்தில் வந்து கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், கார்களை லாரியின் கண்டெய்னர் பகுதி மோதி நசுக்கியது. இந்த பயங்கர விபத்தில் வாகனங்கள் உருக்குலைந்தன. கார்களில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு- ஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம்...
தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடந்த மாத ஊதியப் பட்டியலிலிருந்து, இந்த மாத ஊதியப் பட்டியலில் எந்தெந்த இனங்களில், மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்ற விவரத்தை, ஊதியப் பட்டியலுடன் இணைத்துத் தரும் போது, இணைய தளத்தில் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்யும், அலுவலகப் பணியாளர்களுக்கும், ஊதியப் பட்டியலை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கும் அலுவலர்களுக்கும் எளிதாக இருக்கும்.
இதன் மூலம் ஊதியப் பட்டியலில் கோரப்படும் ஊதியம், எவ்வித வித்தியாசமும் இன்றி உரிய தலைப்புகளில் சரியாக வரவு வைக்கப் படுவதுடன், (உதாரணமாக PF சந்தா, வருமான வரி பிடித்தம் மற்றும் பிற...) ஆசிரியர்களின் வங்கிக் கணக்கிலும், ஊதியப் பட்டியலில் கோரப்பட்ட சரியான நிகரத் தொகை வரவு வைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
கணினி மூலம், தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள், இந்த மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்யப் பட்டுள்ள ஊதியம் மற்றும் பிடித்தம் இனங்களின் விவரங்களை மட்டும் Bold செய்து காண்பிக்கலாம். கடந்த மாத ஊதியம் / பிடித்தம் விவரங்களை Bold செய்ய வேண்டாம்.
கையினால் எழுதப்படும் ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள், கடந்த மாத ஊதியத்தில் பெறப்பட்ட இனங்களின் விவரங்களை ஊதா மையினாலும், இந்த மாத ஊதியப் பட்டியலில், செய்யப் பட்டுள்ள மாற்ற விவரங்களை மட்டும், சிவப்பு வண்ண மை கொண்டு எழுதலாம்.
மாற்றம் செய்யப்பட்ட இனங்களில் கடந்த மாதம் பெற்ற / பிடித்தம் செய்யப் பட்ட தொகையை ஊதா மையினாலும், இந்த மாதம் பெற வேண்டிய ஊதியம் (ஆண்டு ஊதிய உயர்வு, தேர்வு நிலை ஊதியம், சிறப்பு நிலை ஊதியம், ஊக்க ஊதியம், ஊதியமில்லா விடுப்பு நாட்கள், அரைச் சம்பள விடுப்பு ஊதியம் போன்ற மாற்றம் செய்யப் பட்ட விவரங்கள் மட்டும்) பிடித்தம் செய்யப் பட வேண்டிய தொகையையும் (PF சந்தாத் தொகை உயர்த்துதல், வருமான வரி பிடித்தம் உயர்த்துதல் மற்றும் சொசைட்டி பிடித்த மாற்றம் போன்றவை) சிவப்பு நிற மையினாலும் எழுதி, ஊதியப் பட்டியலுடன் இணைத்து ஒப்படைத்தால், சம்பளப் பட்டியல் பதிவேற்றம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
கொரோனா பாதித்த பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு சிகிச்சை தேவை - ஆய்வு முடிவு...
கொரோனா பாதித்த பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு தீவிர சிகிச்சை (Men infected with Covid-19 are three times more likely to require Intensive Care than Women) தேவைப்படுவதோடு வைரஸால் இறக்கும் அபாயமும் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஓட்டத்தில் முன்னிலையில் இருக்கும் ஃபைசர் மற்றும் மாடர்னா (Pfizer and Moderna) மருந்து நிறுவனத்தின் MRNA தடுப்பூசிகளில் 95% பாசிட்டிவ் முடிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும், 1.30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த கொரோனா எனும் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் இந்த செய்தி புது நம்பிக்கையை விதைத்தது. இது ஒருபுறம் இருந்தாலும், இப்பொழுது இந்த Covid-19 வைரசால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 1, 2020 என்ற இடைப்பட்ட காலத்தில் 46 நாடுகளிலிருந்தும் அமெரிக்காவின் 44 மாநிலங்களிலிருந்தும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இருக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
சார்ஸ்-கோவ் -2 நோய்த்தொற்றின் (Sars-Cov-2 infection) ஆபத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரே மாதிரியாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர், ஏனெனில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் "சரியாக பாதி" ("exactly half") ஆண் நோயாளிகள் இருந்தனர். ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பெண்களை விட, ஆண்கள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம், மேலும் அவர்கள் வைரஸால் இறப்பதற்கு 39 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் இணை ஆசிரியர் கேட் வெப் (co-author Kate Webb), "நோயாளிகளை நிர்வகிக்கும்போது பாலினம் என்பது, கடுமையான நோய்க்கான ஆபத்து காரணி என்பதை மருத்துவர்கள் அடையாளம் காண இந்த தகவல்கள் உதவக்கூடும்" என்று AFP இடம் கூறினார். பல ஆய்வுகளில் பெண்கள் குறைவான பாதிப்பை கொண்டுள்ளனர் என்று அறிக்கை செய்யப்பட்டுள்ளது, இது ஆராய்ச்சியில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணி என்பதற்கான நினைவூட்டல்" என்று கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் (Cape Town University researcher) கூறினார்.
இந்தப் போக்கு உலகளாவியது, ஒரு சில விதிவிலக்குகளை குறிப்பாக உயிரியல் வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஆசிரியர்கள் "உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பு இரண்டிலும் பாலின வேறுபாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டன, மேலும் கோவிட் -19ல் பெண்களின் நன்மைக்கு இது காரணமாக இருக்கலாம் " என்று தெரிவித்தனர். பெண்கள் இயற்கையாகவே அதிக வகை I இன்டர்ஃபெரான் புரதங்களை (Type I interferon proteins) உற்பத்தி செய்கிறார்கள். இது சைட்டோகைன் புயல் (Cytokine Storm) எனப்படும் அசாதாரண நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
இது கோவிட் -19 இன் கடுமையான விளைவுகளைத் தூண்டுவதில் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. ஒரு "பெண்களின்" ஓஸ்ட்ராடியோல் ஹார்மோன் ("Female" oestradiol hormone) வைரஸின் மோசமான தாக்கத்தை தடுக்க பெண்களுக்கு உதவக்கூடும். ஏனெனில் இது டி உயிரணுக்களின் (T cells) பதிலை அதிகரிக்கிறது. இது பாதிக்கப்பட்ட உயிரணுக்களைக் கொல்லும் - மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. "இதற்கு மாறாக, ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகிறது (Male sex hormone testosterone suppresses the immune system)" என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
கடுமையான கோவிட் -19 உடன் தொடர்புடைய நோய்களில் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள் ஆண்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் (Nature Communications) வெளியிட்ட ஆய்வில் எழுதினர். கூடுதலாக, உலகளவில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதாச்சாரத்தில் உள்ள ஒற்றுமையை ஆசிரியர்கள், "மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் மிகவும் பொதுவானதாகக் கொமொர்பிடிட்டிகள் (comorbidities in hospitalised Covid-19 patients) காணப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் கிட்டத்தட்ட 105 நாட்கள் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தனர், என்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்கால தடுப்பூசிகளுக்கு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். பிற நோய்த்தொற்றுகளுக்கான முந்தைய தடுப்பூசிகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான பதிலில் வேறுபாடுகளை காட்டியுள்ளன என்று வெப் குறிப்பிட்டார்.
"சார்ஸ்-கோவி -2 தடுப்பூசிகளுக்கும் (Sars-CoV-2 vaccines) இது பொருந்துமா என்பது இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது" என்று மேலும் அவர் கூறினார். ஆனால், தடுப்பூசி ஆராய்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது பாலினத்தை ஒரு மாறியாக (sex as a variable) சேர்க்க வேண்டியதன் அவசியத்தை எங்கள் ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் தொற்றுநோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ள அரசு அளித்து வரும் முறைகளை பின்பற்றுவதும் வெளியில் செல்லும்போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேவையானவற்றை செய்வதுமே நம்மை இந்த நோய் தொற்றிலிருந்து சில காலங்களுக்கு தள்ளி வைக்கும்.
அரசு அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டால் அதற்கு மனு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை...
அரசு அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டால் அதற்கு மனு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை அரசாணை எண்.73, நாள்.11-06-2018...
>>> அரசாணை எண்.73, நாள்.11-06-2018 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings
EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...