கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு...

 


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நிரப்பிட சென்னை பழங்குடியினர் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலணை, பாபநாசம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - 1 மற்றும் இடைநிலை பணியிடம் - 1 காலியாக உள்ளது. இந்த பணியிடங்களில் பழங்குடியினர் இன பட்டதாரி ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.9,000- ஊதியத்திலும், பழங்குடியினர் இன இடைநிலை ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8,000 ஊதியத்திலும் 10 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் வரும் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பழங்குடியினர் நல அலுவலகத்தை உரிய அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் தொடர்பு கொள்ளலாம். பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சென்னை பழங்குடியினர் நல இயக்குநரால் தேர்வு, நேர்காணல் மற்றும் மாதிரி வகுப்பு நடத்தப்படும். இத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இயக்குனர் செயல்முறைகள்....


ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

 


ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐ.ஐ.டி./ஜே.இ.இ. போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் நெக்ஸ்ட்ஜென் வித்யா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரவ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும் உடன் இருந்தனர்.

இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப கல்வியை சேர்ந்த ஐ.ஐ.டி./ ஜே.இ.இ. உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தனியாக லாக்-இன் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். இதற்கான பதிவு வருகிற 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், பயிற்சி வகுப்புகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கும். 

http://play.google.com/store/apps/details?id=com.vidhyaeducation.android

என்ற முகவரியில் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரையாண்டு தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்...

 



TNTP - SAFETY AND SECURITY TRAINING - 7 MODULES - PDF FILE...







CLICK HERE TO DOWNLOAD >>> 2_1_Health and Hygine.pdf


CLICK HERE TO DOWNLOAD >>> 3_1_Psychology and Social Objectives.pdf


CLICK HERE TO DOWNLOAD >>>-3_2_POCSO Act and Child Protection.pdf


CLICK HERE TO DOWNLOAD >>>- 3_4_Child Marriage Prevention.pdf


CLICK HERE TO DOWNLOAD >>>- 4_1_Role of HM, Teachers and Others.pdf


CLICK HERE TO DOWNLOAD >>>-5_1_Supervision of School Safety.pdf


CLICK HERE TO DOWNLOAD >>>-DEE School Safety and Security.pdf


மேற்கண்ட pdf files ஐ பயிற்சிக்குள் செல்வதற்குமுன்பே படித்துக்கொண்டால் சந்திக்கப்போகும் 5 Quiz களிலும் 100% மதிப்பெண்கள் பெறலாம்...

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயிற்சி...



♦️♦️தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முதற்கட்ட பணிகளை பள்ளி கல்வித் துறை துவங்கியுள்ளது.


♦️♦️இதற்காக இன்று முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.


நோய் தடுப்பு முறை


♦️♦️தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் கல்லுாரிகள் திறக்கப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.


♦️♦️தனியார் பயிற்சி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன.


♦️♦️இதைத் தொடர்ந்து ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க முதல்வரிடம் பள்ளி கல்வித் துறை அனுமதி கோரியுள்ளது. அதற்கேற்ப முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


♦️♦️அதாவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்தால் அவர்களை தொற்றில் இருந்து பாதுகாப்பது, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது தொடர்பான வழிமுறைகள் வழங்க பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


♦️♦️இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்றும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


♦️♦️மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18 மற்றும் 19-ம் தேதிகளிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு  21 மற்றும் 22-ம் தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


♦️♦️ ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக, இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.


♦️♦️பள்ளி வளாகத்திற்குள் கொரோனா தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் ஆரோக்கியம், உளவியல் ரீதியான பயிற்சி, தொற்று குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு...

 பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020 வெளியீடு...



>>> அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020...

தாராபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முறையே திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு...

 தாராபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டக்  கல்வி அலுவலர்களுக்கு முறையே திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை எண்: 122 , நாள்: 15-12-2020 வெளியீடு...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...