கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல - சுகாதாரத்துறை செயலாளர்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல எனவும், தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து 5.56 லட்சம் டோஸ்கள் கொண்ட சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு வரவுள்ளது. வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்கட்டமாக சீரம் நிறுவனத்தின் 5,56,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும், பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் தமிழகம் வரவுள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.

கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்கு எந்த தடுப்பூசிகளை போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வருகிறது. புனேயில் இருந்து  கொரோனா தடுப்பு மருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளது. அங்கிருந்து 10 மையங்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Whatsapp உங்கள் தகவல்களை Facebook ல் பகிராது - Whatsapp நிறுவனம் உறுதி...

 


வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்:

வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் முகநூல் நிறுவனத்திற்கு பகிர படமாட்டாது.

 தனிநபர் தகவல்கள் முகநூல் நிறுவனத்திற்கு தரப்படமாட்டாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்.

தனிநபரின் தொலைபேசி எண் இருப்பிட முகவரி மற்றும் தகவல்கள் எதுவும் முகநூல் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது.

வாட்ஸ்அப் குழுக்கள் எப்பொழுதும் போல தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் என விளக்கம்.

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு எதிராக தகவல்கள் பெரிய அளவில் பகிரப்பட்டு வந்ததால் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கி வாட்ஸ்அப் நிறுவனம் இது போன்ற ஒரு விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Protects and Secures Your Private Messages 

WhatsApp cannot see your private messages or hear your calls and neither can Facebook . 

WhatsApp does not keep logs of who everyone is messaging or calling . 

WhatsApp cannot see your shared location and neither can Facebook . 

WhatsApp does not share your contacts with Facebook WhatsApp groups remain private . 

You can set your messages to disappear . You can download your data .

ஆதிதிராவிடர் நலம் - 2020-21க்கான Pre Matric / Post Matric உதவித்தொகை - பள்ளி / கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம்...


 ஆதிதிராவிடர் நலம் - 2020-21க்கான Pre Matric / Post Matric உதவித்தொகை - பள்ளி / கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம்...

>>> ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை – வருமான வரித்துறை அறிவிப்பு...

 


ரூ.2 கோடி வரையிலான மதிப்பில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு சலுகை தொகுப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் உள்ளன. இத்தகைய வீடுகளை விற்பனை செய்ய ஏதுவாக மத்திய அரசு ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சலுகை தொகுப்பு திட்டங்கள் அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறையினரும், வீடு வாங்குவோரும் பயன்பெறும் வகையில் வருமான வரிச்சட்டம் பிரிவு 43 சிஏ மற்றும் வருமான வரிச்சட்டம் 56(2)(எக்ஸ்) ஆகியவற்றின் படி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ.2 கோடி வரையிலான மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனையை வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கு 20 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதித்து ரியல் எஸ்டேட் துறையினர், வீடு வாங்குவோர் வரிச்சலுகை பெறும்வகையில் வருமான வரி சட்ட விதிகள் தளர்த்தப்படுகின்றன.

அரசின் வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே ஏற்கனவே இருந்து வந்த 5 சதவீத வித்தியாசம் 10 சதவீத வித்தியாசமாக உயர்த்தப்பட்டு வரிச்சலுகை அனுமதிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ.2 கோடி வரை மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனைக்கு இந்த வித்தியாசம் 20 சதவீத அளவுக்கு தளர்த்தப்படுகிறது. இது  ஜூன் மாதம் 30-ம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

இதன்மூலம் வீடு வாங்குவோர் குறைவான வரி செலுத்தினால் போதும். இந்த சலுகை வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்துக்கு உதவும். இதற்காக வருமான வரி சட்டத்தில் உரிய நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும்' - விஜயகாந்த் அறிக்கை...


 பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ மற்றும் ஜியோ கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5,068 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்புகளை பிறப்பித்திருக்கிறது.

 இந்த குறிப்பாணைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 42 க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் – அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்

பணிக் காலம் முடிந்து விட்டது என்றாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் பணி ஓய்வு பெற முடியவில்லை. இதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

எனவே அவர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கரூருடன் செல்பி (Selfie with Karur) போட்டி - அரசு அருங்காட்சியங்கள் துறை அறிவிப்பு...

 கரூருடன் செல்பி (Selfie with Karur) போட்டி - அரசு அருங்காட்சியங்கள் துறை அறிவிப்பு...




தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும்...

💉💉💉💉💉💉💉💉💉

*தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் தற்போது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது*



*புனேவில் இருந்து விமானத்தில் 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சென்னை வந்தன. சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஜன.16 முதல் முன்களப்பணியாளர்களுக்கு போடப்படுகிறது. தமிழகம் வந்த கொரோனா தடுப்பூசிகள் மொத்த எண்ணிக்கை 5,36,500-ஆக உள்ளது.*

_தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் குறித்த விவரம்:_
1️⃣
*சென்னை* (63,700) ,
*காஞ்சிபுரம்*(10, 900),
*செங்கல்பட்டு*(23,800)  *திருவள்ளூர்*(19,600) *மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள் வழங்கப்படும்*

2️⃣
*கடலூர்* (7,800), *விழுப்புரம்*(11,500), *கள்ளக்குறிச்சி*(6,200) *மாவட்டங்களுக்கு 25,500 தடுப்பூசிகள் வழங்கப்படும்*

3️⃣
*திருச்சி*(17,100), *அரியலூர்*(3,300), *பெரம்பலூர்*(5,100), *புதுக்கோட்டை* (6,900), *கரூர்*(7,800) *ஆகிய மாவட்டங்களுக்கு 40,200 தடுப்பூசிகள் வழங்கப்படும்*

4️⃣
*தஞ்சாவூர்*(15,500), *நாகப்பட்டினம்*(6,400), *திருவாரூர்*(6,700) *மாவட்டங்களுக்கு 28,600 தடுப்பூசிகள் வழங்கப்படும்*

5️⃣
*மதுரை*(23,100), *திண்டுக்கல்* (13,100), *விருதுநகர்*(9,700), *தேனி* (8,200) *மாவட்டங்களுக்கு 54,100  தடுப்பூசிகள் வழங்கப்படும்*

6️⃣ *சிவகங்கை*(10,700), *ராமநாதபுரம்*(8,300) *மாவட்டங்களுக்கு 19,000தடுப்பூசிகள் வழங்கப்படும்*

6️⃣
*நெல்லை* (10,900), *கன்னியாகுமரி*(22,600), *தென்காசி*(5,100), *தூத்துக்குடி*(13,100) *மாவட்டங்களுக்கு 51,700 தடுப்பூசிகள் வழங்கப்படும்*
7️⃣
*வேலூர்*(18,600), *ராணிப்பேட்டை* (4,400), *திருப்பத்தூர்* (4,700) *மற்றும்* *திருவண்ணாமலை*(14,400) *மாவட்டங்களுக்கு 42,100 தடுப்பூசிகள் வழங்கப்படும்*

8️⃣
*சேலம்*(27,800), *கிருஷ்ணகிரி*(11,500), *நாமக்கல்*(8,700), *தர்மபுரி*(11,800) *மாவட்டங்களுக்கு 59,800 தடுப்பூசிகள் வழங்கப்படும்*

9️⃣
*கோவை* (40,600), *ஈரோடு* (13,800), *திருப்பூர்* (13,500), *நீலகிரி* (5,300) *மாவட்டங்களுக்கு 73,200 தடுப்பூசிகள் வழங்கப்படும் !...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...