கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைவெளியுடன் இருமுறை தடுப்பூசி - மத்திய அரசு...

 கொரோனா தடுப்பூசி, 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை போடப்படும். தடுப்பு மருந்து செலுத்தி, 14 நாட்களுக்கு பின், பலன் தெரியும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 கொரோனா தடுப்பூசி பற்றி, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும், 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்கு பின், அதன் பலன் தெரியும். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும், பாதுகாப்பு மிக்கவை என, மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இயக்கம், 16ல் துவங்க உள்ளது. இதற்காக, நாட்டின், 13 முக்கிய நகரங்களுக்கு, நேற்று மட்டும், 56 லட்சம், 'டோஸ்' புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தின் ஆலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள், இதன் வாயிலாக வேகம் எடுத்துள்ளன.

NMMS – 2021 தேர்வுக்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (STEP BY STEP)...

 


2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது


பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள்

எட்டாம் வகுப்பு பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தற்போது 20-01-2021 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


1. மேற்குறிப்பிட்ட தேர்விற்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுரைகள் :

கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS- ன் அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD ஐ பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினை பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும் விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு (Register) செய்த பின் புதிய USER ID, PASSWORD – ஐ பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்


2. பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:

தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்


3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


4. பள்ளி முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் (Pin Code) பதிவு செய்யப்படவேண்டும்.


5. வீட்டு முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.


6. பெற்றோரின் தொலைபேசி/கைப்பேசி என்ற கலத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற கலத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினை பதிந்தால் போதுமானது


பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.


8. 05.01.2021 பிற்பகல் முதல் 20.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 20.01.2021-க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன் பின் எந்த பதிவுகளும் கண்டிப்பாக மாற்ற இயலாது,


பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 20.012021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாக சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதி செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது - அன்புமணி இராமதாஸ்...


கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது -  பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை .. 


தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் கூட, நோய்த்தடுப்பு கோணத்தில் இம்முடிவு சரியானதல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.


இந்தியாவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக  இருந்தது. கடந்த 9 மாதங்களாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,  காவல்துறையினர், பிற முன்களப்பணியாளர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பின் பயனாக தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது  தான் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது பாராட்டத்தக்கது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் கூட கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் இது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட  50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 13 நாட்களாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் இரண்டரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.


அண்டை மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், அங்கெல்லாம்   கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். கர்நாடகத்தில் கடந்த வாரம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குள்ளாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கு முன் ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது உண்மை. சென்னை உதாரணத்தை எடுத்துக் கொண்டால் ஐ.ஐ.டி விடுதியில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கு தப்பவில்லை.


இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது மருத்துவ ரீதியில் சரியான முடிவாகத் தோன்றவில்லை. ஒர் வகுப்பில் ஒரு நேரத்தில் 25 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் வரை நெருக்கமாக அமர்ந்து இருக்கும் போது கொரோனா தொற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கழிப்பறைகள் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு முதன்மைக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவற்றைப் பயன்படுத்தும் போது கொரோனா பரவலுக்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன. இந்த ஆபத்துகளையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருக்கக் கூடாது.


பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது அவர்கள் மூலமாக  வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவக்கூடும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில்  தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுவதாலும் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை. கல்வியை விட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியமானதாகும்.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் பள்ளிகளைத் திறப்பது தான் சரியானதாக இருக்கும்  என்று ஒரு மருத்துவராக நான் கருதுகிறேன். எனவே, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

24-01-2021அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான(TRUST) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 18-01-2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...

 24-01-2021அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான(TRUST) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 18-01-2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...

>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிகள் திறக்கப்படும் நாளில்(19-01-2021) மாணவ மாணவியரின் பெற்றோர் கையொப்பமிட்டு கொடுக்க வேண்டிய இரண்டு படிவங்கள்...

பள்ளி திறக்கும் நாள் அன்று (19-01-2021) மாணவ மாணவியர்கள் அனைவரும்  கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களையும் எழுதி கட்டாயம் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

>>> படிவங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

 இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...



19.01.2021 அன்று, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக 21.01.2021 அன்று நடைபெறும்...

 19.01.2021அன்று, அந்தந்த மாவட்ட NIC centre-ல் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான National Informatics Centre (NIC) மூலம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் 21.01.2021 அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும்.



தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6

ந.க.எண்.010390/ஜெ2/2020, நாள்.12 .01.2021


பொருள்

கல்வி - தொடக்கக் கல்வி அனைத்து வட்டாரக் அலுவலர்களுடன் 19.01.2021 அன்று காணொலி காட்சி வாயிலாக (Video Conference) நடைபெற இருந்த கூட்டம் 21.01.2021அன்று நடத்துவது - சார்ந்து.

பார்வை

        1 1முதல் 13 முடிய கூட்டப்பொருள் விவரங்கள்.

        2.  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6,ந.க.எண்.010390 /ஜெ2/2020, நாள்.05.012021

பார்வை 2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின்படி, 19.012021அன்று, அந்தந்த மாவட்ட NIC centre-ல் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான National Informatics Centre (NIC) மூலம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் 21.01.2021 அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஆய்வுக் கூட்டம் தொடர்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி உரிய விவரங்களுடன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் வருகை புரிய வேண்டும் எனவும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் போதுமான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

மேலும், கூட்டப்பொருள் சார்ந்த தொகுப்பு அறிக்கையினை முன்னதாக 18.012021 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வியக்கக deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இணைப்பு கூட்டப்பொருள் 1 முதல் 13 முடியவிவரங்கள்.

தொடக்கக்கல்வி இயக்குநர் காக..


பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக


நகல்

1 அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...