கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' பயிற்சி அளிக்க திட்டம்...

 பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'நீட்' பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் துவங்கியுள்ளன.


அனைத்து மாணவர்களும் தேர்வுக்கு தயாராகும் வகையில், முக்கிய பாடப் பகுதிகளை முதலில் நடத்தவும், மீதமுள்ள பாடங்களை மார்ச்சில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களை, நீட் தேர்வின் தேர்ச்சிக்கும் தயார் செய்ய வேண்டியுள்ளது.


பத்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 'ஆன்லைன்' வழியே, 'இ- - பாக்ஸ்' நிறுவனத்தின் சார்பில், நீட் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிகளை, அடுத்த மாதம் முதல், பள்ளிகளில் நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. 


ஏற்கனவே, சில ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுள்ள நிலையில், புதிதாக பயிற்சி பெற விரும்புவோருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின், அவர்கள் வழியே, நீட் பயிற்சி வகுப்புகள் நேரடியாக பள்ளிகளில் நடத்தப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

மற்ற வகுப்புகளை துவங்க பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை...

 


தமிழகம் முழுதும், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில்,  ஆலோசனை நடக்க உள்ளது.


தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தொற்று பாதிப்பு மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானோருக்கு, அரசின் விதிமுறைப்படி, மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க, பள்ளி கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளை துவங்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பிப்., 1 முதல் நேரடி வகுப்புகளை துவங்கலாம் என, அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.


இது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில்,  தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார், கமிஷனர் வெங்கடேஷ், பள்ளி கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன், கருப்பசாமி, பழனிசாமி, தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர்.


இந்த கூட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கிய பின் ஏற்பட்ட விளைவுகள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றையும், கொரோனா தாக்கம் இல்லாத நிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.


இதை பின்பற்றி ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்ரவரியில் பள்ளிகளை திறப்பது குறித்து, கருத்துரு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.அந்த அறிக்கை, தலைமைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை செயலர் வழியே முதல்வருக்கு அனுப்பி, ஒப்புதல் பெறப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உஷார்...! சானிடைசர் உபயோகிப்பதால் குழந்தைகளின் கண் பார்வைக்கு ஆபத்து...

 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் ஹேண்ட் சானிடைசர் குழந்தைகளின் கண்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல கோடி பேரின் உயிர்களை பறித்துவிட்டது. இன்னும் பல கோடி மக்கள் கொரோனா பிடியில் இருந்து மீண்டுவரவில்லை. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சானிடைசர்.


இதனை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் அழிந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, சானிடைசருக்கு உலகம் முழுவதும் மவுசு கூடியது. இன்று சானிடைசர் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், சானிடைசர் குழந்தைகள் கண்களை மிகவும் பாதிப்பதாக இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக, பிரான்சில் ஜமா கண் மருத்துவ இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குழந்தைகளுக்கு உருவாகியுள்ள இந்த புதிய ஆபத்து குறித்து விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 232 வழக்குகள் இது தொடர்பாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் போது சானிடைசர் பயன்படுத்தும் குழந்தைகள் அதனை தெரியாமல், தங்களது கண்களில் தொட்டுவிட்டுவதால், கண்களில் விஷத்தன்மை பாய்ந்து விடுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


எனவே, சானிட்டைசர்களை பயன்படுத்தும்போது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் கூட எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிக முக்கியமானது என்கின்றனர் மருத்த ஆய்வாளர்கள்.

ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்... குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவை...

 உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான தடையும் இல்லாமல் அளிக்க வேண்டும் என்பது எலான் மஸ்க்-ன் மிகப்பெரிய கனவுத் திட்டம். இந்த மாபெரும் கனவு திட்டத்தின் வெற்றி தான் ஸ்டார்லிங்க். யாருடைய உதவியும் இல்லாமல், எந்த நிறுவனத்துடனும் கூட்டணி வைக்காமல், தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணையுடன் உருவாக்கிய திட்டம் தான் இந்த ஸ்டார்லிங்க்.


 எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் வேளையில், தற்போது இந்தச் சேவையை இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க். இந்தியாவில் டெலிகாம் சேவை மூலம் பெரும் அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் முகேஷ் அம்பானிக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும். எலான் மஸ்க்-ன் இந்தக் கனவு திட்டத்தில் இண்டர்நெட் இணைப்பை செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக நம் வீட்டிற்கே நேரடியாகப் பெற முடியும். இதனால் எந்த டெலிகாம் நிறுவனத்தையும் நம்பியிருக்கத் தேவையில்லை, இதுமட்டும் அல்லாமல் இந்தச் சேவையைப் பெறுவதும் மிகவும் எளிது. ஒரே ஒரு Antenna வாங்கினால் போது, 24X7 மணிநேரமும் எவ்விதமான தடையும் இல்லாமல் செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக இண்டர்நெட் சேவையைப் பெறலாம். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ பெரும்பாலான தனது முக்கிய டிஜிட்டல் சேவைகளைப் பிராண்ட்பேன்ட் சேவையை நம்பிதான் வர்த்தகத்தைக் கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் ஸ்டார்லிங்க்-ன் வருகை ஜியோவிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பத்தாம் வகுப்பு கணக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள்...

X standard Maths One Mark Questions 2020 - 21

>>> பத்தாம் வகுப்பு கணக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


26-01-2021 அன்று கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி ரத்து - தமிழ்நாடு அரசு...

 


(Government Directed not to Conduct Grama Sabha on 26-01-2021)

>>> Click here to Download - Letter of Commissioner of Rural Development and Panchayat Raj...


உடற்கல்வி ஆசிரியர் மற்றும் நூலகர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு...

 


தமிழ்நாட்டில்  9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மாணவர் வருகை 98 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய கூடுதலாக 650 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள நூலகர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...