கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தலில் கடைபிடிக்கப்படுபவை...

 பள்ளியில் பணிபுரியும் ஒரு பட்டதாரி ஆசிரியர் எந்த பாடத்தில் பணிபுரிந்தாலும் இவர் முதுகலை ஆசிரியராக செல்ல விரும்பும் பாடத்தில் முதலில் இளங்கலையும் பிறகு முதுகலையும் முடித்திருந்தால் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல தகுதியுடையவராகிறார். எனவே பணிபுரியும் பாடத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எந்த பாடத்திற்கு PGயாக செல்ல விரும்புகிறாரோ அந்த பாடத்தில் முதலில் UG முடித்துவிட்டு பிறகு PG முடித்திருக்க வேண்டும். மேலும் UG முதலில் முடிக்காமல் PG முடித்து, பிறகு UG முடித்திருந்தால் Same Majorக்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.மேலும் 10ம்  வகுப்பு, 11ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பிறகு இளங்கலை, பி.எட் அல்லது முதுகலை பிறகு பி.எட் முடித்திருந்தாலும் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில்  செல்லலாம். தற்போது Cross Major எந்த பாடத்திற்கும் கிடையாது என்று  பள்ளிக் கல்வித்துறை இறுதியாகவும், உறுதியாகவும் முடிவு செய்து உள்ளது.


முதுகலை வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம்...

 அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.


வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

20% ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...

 20% ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 018438/ சி5/ இ5/ 2020, நாள்: 30-01-2021...

>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 018438/ சி5/ இ5/ 2020, நாள்: 30-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு (முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு ( முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




இன்றைய (31-01-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


 மேஷம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களிடம் புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


ரோகிணி : புரிதல் உண்டாகும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வாரிசுகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.


திருவாதிரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் தனவரவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : அனுகூலமான நாள்.


பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

சுயதொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : முயற்சிகள் ஈடேறும்.


பூரம் : தாமதங்கள் அகலும்.


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சுபகாரியங்களில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.


அஸ்தம் : அனுகூலமான நாள்.


சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

ஆன்மிகம் தொடர்பான அஞ்ஞான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உட்பொருளை கவனித்து முடிவுகளை எடுப்பது நன்மையளிக்கும். உறவினர்களிடம் பொறுமையை கையாளுவது நல்லது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாற்றமான சிந்தனைகளும், வாய்ப்புகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சுவாதி : பொறுமை வேண்டும்.


விசாகம் : மாற்றமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

சிறு தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.


அனுஷம் : பயணங்கள் சாதகமாகும்.


கேட்டை : ஆதரவான நாள்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் சேமிப்புகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், பொருளாதாரமும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

பணியில் இருப்பவர்கள் மற்றவர்களின் பணியை கூடுதலாக பார்க்க நேரிடும். எடுத்த செயல்களை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அமைதி வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


சதயம் : நம்பிக்கை பிறக்கும்.


பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

செய்யும் முயற்சிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும். 


உத்திரட்டாதி : காலதாமதங்கள் குறையும்.


ரேவதி : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------

அரசு ஊழியர்களை மோசடி செய்யும் தமிழக அரசு (நன்றி : நக்கீரன்)...

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை மிகப்பெரிய அதிகாரம் கொண்டவர்களாக காட்டிக்கொள்ள என்ன செய்வார்கள் தெரியுமா?

 

தங்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை சவட்டி எடுப்பார்கள். தங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காக தண்ணியில்லாத காடு, வேலையில்லாத இலாகா என்பவற்றை உருவாக்கி வைத்து ஊழியர்களை பழிதீர்ப்பார்கள்.

 

இப்போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தையும் பல கட்ட முயற்சிகள் தோற்றதால்தான் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களுடைய போராட்டத்தை சம்பள உயர்வு போராட்டமாக திசைதிருப்ப ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

 

உண்மை அதுவல்ல என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியது அவசியம்.

 

தமிழக அரசாங்கத்தை இனிமேல் தனியார் நிறுவனங்களைப் போல காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுத்து நடத்த ஒரு மாபெரும் சதித்திட்டத்தை அரசாணை 56 மூலமாக  அரசு நிறைவேற்றி இருக்கிறது.

 

இந்த அரசாணை 56 என்ன சொல்கிறது தெரியுமா? தற்போது மூன்றரை லட்சம் அரசு ஊழியர் காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களையும்,  இனிமேல் காலியாகிற பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் தினக்கூலி அடிப்படையில் ஆட்களை சேர்த்து நிரப்ப வழி அமைக்கிறது.

 

இது, அடுத்த தலைமுறையினரை படுபாதாளத்தில் தள்ளிவிடும். வேலை வாய்ப்புகளை அழித்துவிடும் என்பதால் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள்.

 

அதுபோல, அரசாணை 100 மற்றும் 101 ஆகியவைகளும் ஆபத்தான அரசாணைகள்தான்.  ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்க இந்த அரசாணைகள் வழி செய்கின்றன. இப்படி இணைப்பதன் மூலம், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது என்பதாலும், பள்ளிகளில் ஆட்குறைப்பு செய்ய நேரும் என்பதாலும் இந்த ஆணைகளையும் ரத்து செய்யும்படி போராடுகிறார்கள்.

 

புதிதாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்ற முடிவு நல்லதுதான். ஆனால், அந்த வகுப்புகளை எடுப்பதற்காக மாண்டிசோரி பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுத்து, இடைநிலை ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கும் அரசு முடிவையும் எதிர்த்து போராடுகிறார்கள்.

 

சம்பள உயர்வுக்காக போராடுகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள்? அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக போராடவில்லை. தங்களுக்கு சேரவேண்டிய 21 மாத சம்பள நிலுவைத் தொகையைத்தான் கேட்கிறார்கள். அது என்ன நிலுவைத் தொகை?

 

7 ஆவது சம்பளக் கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க பரிந்துரை செய்தது. அதன்படி, 1.1.2016 முதல் புதிய சம்பள விகிதம் ஏற்கப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த சம்பள விகிதத்தை 1.10.2017 வரை, 21 மாதங்களாக கொடுக்காமல் பிடித்தம் செய்து வைத்திருக்கிறது. எங்களுக்குச் சேர வேண்டிய சம்பளத்தைத்தான் கேட்கிறோம்.

 

இப்போதும் 21 மாதங்களாக எந்த முடிவும் சொல்லாமல் எங்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையை இழுத்தடிக்கிறது அரசு என்கிறார்கள்.  இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட சொல்ல மறுக்கிறது அரசு.

 

இதேபோல்தான் 1.7.2003-லிருந்து 5 லட்சத்து 4 ஆயிரம் ஊழியர்களிடம் பென்சனுக்காக பிடித்தம் செய்த 10 சதவீத சம்பளம் 28 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு பென்சன் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் ஜெயலலிதா. பழைய பென்சன் திட்டத்துக்கு பதிலாக புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்தார்.

 

அதாவது புதிய பென்சன் திட்டம் என்பது ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 28 ஆயிரம் கோடி ரூபாயுடன் அரசு தனது பங்கிற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து இபிஎஃப்பில் செலுத்த வேண்டும். இப்படிப்போடப்படும் தொகையில் ஒரு பகுதி பணிக்கொடையாகவும், மீதமுள்ள தொகை பென்சனாகவும் கிடைக்கும்.

 

ஆனால், அந்தத் தொகையை கட்ட அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். இபிஎஃபில் கட்ட வேண்டும் என்றால் 28 பிளஸ் 28 – 56 ஆயிரம் கோடி ரூபாயும், அதற்கு வட்டியாக 14 ஆயிரம் கோடி ரூபாயும் வேண்டும். அதாவது 70 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அரசுக்கு அந்த சிரமம் வேண்டாம் என்றுதான் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும்படி கேட்கிறோம். பழைய பென்சன் திட்டத்திற்கு அரசு சார்பில் பணம் போட வேண்டியதில்லை. வட்டியும் 7 ஆயிரம் கோடி இருந்தால் போதும். அதாவது, மொத்தத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் போதும். இதன்மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம்தான்.


ஆனால், இதைக்கூட செய்ய முடியாது என்று அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு சொல்லப்படும் விளக்கம்.

 

இனியாவது இத்தகைய போராட்டங்களில் உள்ள நியாயங்களை உணரவேண்டும். வெறுமனே போராட்ட உணர்வுகளை எதிர்த்தால், நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். நிரந்தர வேலைவாய்ப்புகளை ஒழித்துவிட்டு, கார்பரேட் கம்பெனிகளைப் போல அரசுகள் மாறவும், கார்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களைப் போல பணிப்பாதுகாப்பு இல்லாத அடிமைகளாக எதிர்கால சந்ததிகள் மாறவும் வழி அமைத்துவிடும் என்பதை உணர்ந்தால் சரி.


>>> இச்செய்தியை முழுமையாக நக்கீரன் வலைதளத்தில் வாசிக்க...


இனி சார்ஜ் போட கூட போனை கீழே வைக்க வேண்டாம் - வருகிறது புதிய தொழில்நுட்பம்...

 வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய ஒரு புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாக mi xiaomi நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீங்கள் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது சார்ஜ் தீர்ந்துவிட்டால், நீங்கள் வயர்டு அல்லது வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய போனை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்காக, சியோமி அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்பத்தின் பெயர் என்ன? இது எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க.


எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்ய ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பமான ‘Mi ஏர் சார்ஜ்’ எனும் தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்துள்ளது.


இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் தொலைபேசியை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டுமென்பது அவசியம், இதனால் உங்கள் தொலைபேசியை வயர் ஏதும் இல்லாமல் சார்ஜ் செய்யலாம். ரிமோட் சார்ஜிங் நுட்பத்தைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசியுள்ளன, ஆனால் அதை முதலில் நிஜமாகியுள்ளது சியோமி நிறுவனம் தான்.


80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W வயர்டு சார்ஜிங் போன்ற பல முதன்மையான தொழில்துறை நுட்பங்களை முதன் முதலில் அறிமுகம் செய்யும் OEM ஆக சியோமி தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் சீன உற்பத்தியாளரான சியோமி இப்போது இந்த புரட்சிகர புதிய வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் முதலில் அறிமுகம் செய்துள்ளது.


தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து விரிவான விவரங்கள் பகிரப்படவில்லை என்றாலும், சிலவற்றை வெய்போவில் சியோமி நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்து கொண்டார், இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5W மின்சக்தியை வழங்கும் அம்சம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.


5-phase இன்டர்ஃபெரன்ஸ் ஆண்டெனா மூலம் உங்கள் சாதனத்தின் நிலையை தீர்மானித்த பிறகு, ஒரு phase control வரிசையை உருவாக்கும் 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் பீம்ஃபார்மிங் மூலம் ஆற்றலை அனுப்புகின்றன.


சியோமி எப்போது இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை, ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் உலகின் முதல் நிறுவனமாக Xiaomi இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...