கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் முறை - RTI மூலம் பெறப்பட்ட தகவல்...

 தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களின் செயல்முறைகள்

ஓ.மு.எண். 01470 / அ 2 / 2015, நாள் 27-04-2015


பொருள்

தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 கீழ் திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பார் சில தகவல்கள் கோரியது - தகவல்கள் வழங்குதல் - சார்பாக.


பார்வை

திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பாரது மனு நாள் 06-04-2015 


பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்படி தங்களது மனு பரிசீலிக்கப்பட்டதில் தங்களால் கோரப்பட்ட நான்கு வினாக்களுக்கு சார்பாக கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்படுகிறது. 

  • ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் அவர்கள் பெறுகின்ற சம்பள ஏற்ற முறையில் உள்ள தர ஊதியத்தின் அடிப்படையில், இறங்கு வரிசையில் எழுத வேண்டும். 
  • ஒரு குறிப்பிட்ட பணியில் / பதவியில் ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் (மு.ப. /பி.ப.) பணியில் சேர்ந்திருந்தால் அவர்களது பெயர்கள் பிறந்த தேதி மற்றும் அகர வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும். 
  • ஒரே நாளில் இருவர் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் முதலிலும், வயதில் இளைவர் அவர்களுக்கு அடுத்தும் எழுத வேண்டும். 
  • இருவருக்கும் பிறந்த தேதி ஒன்றாகவே இருக்குமேயானால் அவர்களது பெயர்கள் அகர வரிசை அடிப்படையில் எழுதப்படும். 
  • மேலும் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்படுவதற்கு பாடம் சம்மந்தமாக முன்னுரிமை ஏதும் வழங்கப்படுவதில்லை. 

மேற்கண்ட தகவல்கள் தங்களால் ஆட்சேபிக்கப்படுமேயானால் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட அலுவலருக்கு மேல் முறையீடு செய்துக்கொள்ளலாம்.



9, 11-ம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் - பள்ளிக் கல்வித்துறை முடிவு...

 


9, 11-ம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாகவும், கரோனா முன்னெச்சரிக்கை காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா ஊரடங்கை அடுத்து, 10 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களுக்குப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அவற்றைப் பள்ளியில் மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 25 பேர் மட்டுமே உட்கார வைக்கப்படுகின்றனர். வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்படும். அனைவரும் வீட்டில் இருந்து கட்டாயம் குடிநீர், சாப்பாடு எடுத்துவர வேண்டும். உணவுப் பொருள் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது. பிறரைத் தொட்டுப் பேசக் கூடாது. கைகுலுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் இட நெருக்கடியைத் தவிர்க்க காலை, பிற்பகல் என ஷிஃப்ட் முறையில் வகுப்புகளைப் பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சுழற்சி முறையில் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.8 கோடி மதிப்பில் சர்வதேச விருதுகள்: ஆசிரியர்கள், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...

 


சுமார் ரூ.8 கோடி மதிப்பில் சர்வதேச ஆசிரியர், மாணவர் விருதுகளுக்கான அறிவிப்பை வர்க்கி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-04-2021...

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி குரூப்' நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சன்னி வர்க்கி கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2010-ம் ஆண்டில் சன்னி வர்க்கி, லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களையும், கல்வித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய மாணவர்களையும் கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் மற்றும் சர்வதேச மாணவர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் மற்றும் சர்வதேச மாணவர் விருதுகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் விருதுக்கு 10 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.4 கோடி) பரிசுத் தொகையும், மாணவர் விருதுக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36.5 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. 16 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பகுதி நேரமாகப் படிப்பவர்களும், ஆன்லைன் வழியாகக் கற்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். சர்வதேச மாணவர் பரிசுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்களின் கல்விச் சாதனை, சக மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள், இலக்கை அடைய அவர்கள் முரண்பாடுகளை எவ்வாறு சமாளிக்கின்றனர், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஆசிரியர் விருது கற்பித்தல் நடைமுறைகள், உள்ளூரில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் விதம், கற்றல் விளைவுகளை அடைவது, வகுப்பறைக்கு அப்பால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது, குழந்தைகளை உலகளாவிய குடிமக்களாக மாற்றுவது, கற்பித்தல் முறைமைகளைப் படைப்பாற்றலுடன் மேம்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 2020-ம் ஆண்டில் இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலேவுக்கு (32), பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதற்காக ரூ.7.4 கோடி பரிசுத் தொகையுடன் சர்வதேச ஆசிரியர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

>>> Global Teacher Prize...

>>> Global Student Prize...


சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


 சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு

உயர்கல்வித்துறையிலிருந்து, சுகாதாரத்துறைக்கு கல்லூரி நிர்வாகம் மாற்றப்பட்ட நிலையில், கல்விக் கட்டணம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூ.13,610ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு

பல்மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூ.11,610ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு

மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த கல்வி கட்டணத்தில், கற்பித்தல் கட்டணம் மட்டும் ரூ.30,000ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு.

TNPSC – DEO FINAL RANK LIST...

RANKING LIST FOR THE POST OF DISTRICT EDUCATIONAL OFFICER IN THE SCHOOL EDUCATION DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE, (2014-2015) (2015-2016) AND (2016-2017)...

>>> CLICK HERE TO DOWNLOAD TNPSC – DEO FINAL RANK LIST...


ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் தற்காலிக பணியிடங்கள் - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு...

 தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு...

>>> பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்  சட்டப்பேரவை கூட்ட உரையின் போது தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இனி தடையை மீறி ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் சிறைத்தணடனை விதிக்கப்படும். பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார்.

அப்போது மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பேசுகையில், 2011ம் ஆண்டு முதல் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 273 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 644 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும், 127 தொடக்கப் பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நூலகம் விரைவில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் உரையின் போது கூறியுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...