கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு எந்த வித புதிய திட்டங்கள் அரசாணை வெளியிடக் கூடாது என அனைத்துத் துறை செயலர்களுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்...

 Tamilnadu Legislative Assembly Election 2021 - Model Code of Conduct...



தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுவரை பள்ளிகளில் பெரிதளவில் கொரோனா பரவல் கண்டறியப்படாத நிலையிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை முடிவெடுக்காமல் உள்ளது. இதற்கிடையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.


நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 110வது விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மேலும் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டுக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் செலுத்தி உள்ள பொதுத்தேவு கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1598 சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்...


Special Teachers ( Craft Instructor(sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher) உள்ளிட்ட 1598 சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான  தேர்வு அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)...

>>> ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இன்றைய செய்திகள் தொகுப்பு... 26.02.2021 (வெள்ளி)...

 


🌹வாய் தவறி விழும் பேச்சுக்கள்.கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.

யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவோம்.!

🌹🌹மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள்.

தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.!!

🌹🌹🌹தன்னுடைய செயலும்,தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே நமது ஆயுதமாக வைத்துக் கொள்ளுவோம்.அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.சிந்தித்து செயல்படுவோம். இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாறுதல் இன்றி பதவி உயர்வு மட்டும் அளித்து 

வெளியிட்ட கலந்தாய்விற்கான செயல்முறையை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 

ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் மன்றம்.நா.சண்முகநாதன் அவர்களால் 2 

வழக்குகள் தொடரப்பட்டதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கலந்தாய்விற்கு  தடையாணை 

வழங்கியுள்ளது.

🌈🌈ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தி  வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம்.நா.சண்முகநாதன் தமிழக அரசுக்கு கோரிக்கை 

🌈🌈இடைக்கால பட்ஜெட்டை ஆவலுடன் எதிர் நோக்கும் 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்                                                                           

 🌈🌈தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும்- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு.

🌈🌈9, 10,  11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக சட்ட பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

🌈🌈9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள்  தேர்ச்சி என்றாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

🌈🌈26.2.2021 முதல் 28.2.2021வரை நடைபெற இருந்த தொடக்க, நடுநிலை,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு /BEO பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்றம் உத்தரவுப்படி ஒத்தி வைக்கப்படுகிறது. -தொடக்கக் கல்வி இயக்குநர் -PROCEEDINGS வெளியீடு.

🌈🌈பள்ளிக் கல்வி- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் நாள் – பெண் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் குழந்தைகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற் கல்வி) உத்தரவு

🌈🌈10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈1-1-2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈பள்ளிக் கல்வி – இந்திய நீர்வளத்துறை என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டம் - இணையவழி பயிற்சியில் கலந்து கொள்ளலாம் - DSE Proceedings வெளியீடு

🌈🌈DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு

🌈🌈UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🌈🌈EMIS – இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் – தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🌈🌈பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்தால் இடஒதுக்கீடு வழங்க முடியாது எனக் கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, இட ஒதுக்கீடுக்கான சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

🌈🌈12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் பாடங்களை விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் 

🌈🌈மார்ச் முதல்வாரத்தில் Zonal officers, AROக்களுக்கு  தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்புகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

🌈🌈முதுகலைப் படிப்புகளுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கேட் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் 

🌈🌈மார்ச் 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி - உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவு.

🌈🌈தவறான நபர்கள் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க அயராது உழைக்க சூளுரை.

- அ.ம.மு.க, பொதுக்குழு & செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

🌈🌈புதுச்சேரி வந்த பிரதமர், சமத்துவ சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கருப்புக்கொடி, கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது

🌈🌈அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார் முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு. கடந்தாண்டு 58-லிருந்து ஓராண்டு உயர்த்தப்பட்டபோது அரசு ஊழியர்கள் விமர்சனம் செய்தனர். ஓய்வுக்கால பலன்களை தர கஜானாவில் நிதி இல்லாததே காரணம் என கண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🌈🌈திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட லியோனி அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

🌈🌈பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

🌈🌈9, 10 & 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற முதலமைச்சர் அறிவிப்பு, CBSE மாணவர்களுக்கு பொருந்தாது.

CBSE பள்ளிகளில் பயிலும் 9,10 & 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும் என்று CBSE அதிகாரிகள் அறிவுறுத்தல்.

🌈🌈ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு 40 வயது கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு.

🌈🌈பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விரைந்து நலம் பெற விழைகிறேன் - ஸ்டாலின்

🌈🌈குரூப்-4 முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி ஆவணங்களை பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

🌈🌈கோவை வந்த பிரதமர் மோடிக்கு வெங்கடாசலபதி வெள்ளி சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசளித்தார்.

🌈🌈ஓடிடி, சமூக ஊடகங்களுக்கு பிரத்யேக கொள்கை: கடிவாளம் போட்ட இந்திய அரசு - முக்கிய தகவல்

🌈🌈சின்னம்மா உடல் நலம் பெற்று தங்களுடைய பங்களிப்பை அரசியலில் காட்ட வேண்டும். 

- உ.தனியரசு எம்.எல்.ஏ

🌈🌈பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

🌈🌈அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

🌈🌈பாஜக-வுடன் அதிமுக கொண்டுள்ள உறவு அதிமுக-வின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் 

- சென்னையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேட்டி

🌈🌈டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி

🌈🌈பத்மஸ்ரீ விருதுபெற்ற கோவையை சேர்ந்த 105 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டியை சந்தித்து ஆசி வாங்கினார் பிரதமர் நரேந்திரமோடி

🌈🌈கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கின்றவர்கள் இதுபோன்று கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி, இந்த குழப்பத்திற்கு அதிமுகவினர் ஆட்படமாட்டார்கள் என அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைந்து செயல்பட சசிகலா அழைப்பிற்கு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பதில்.

🌈🌈கொரோனா பாதிப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது தமிழக அரசு.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தல்

🌈🌈வன விலங்குகளை வதம் செய்யாமல், கோவில்களில் வழிபாடு நடத்துபவர்கள் வைச முறையில் வழிபாடு நடத்த வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

🌈🌈சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைந்துள்ள கால்நடை பூங்காவை அனைத்து கட்சியினரும் பார்க்க வேண்டும்.

இது முதல்வரின் வரலாற்று சாதனை - உடுமலை ராதாகிருஷ்ணன்

🌈🌈திமுகவுடன் நல்ல முறையில், மகிழ்ச்சிகரமாக பேசினோம்

இரண்டு தரப்பும் அவரவர் கருத்துகளை தெரிவித்தோம்

இரண்டு தரப்பும் அவரவர் கட்சியுடன் பேசியபிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

- கே.எஸ். அழகிரி

🌈🌈தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரப்படுத்தபடும் 

தொழிற்சங்கங்களை அழைத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை 

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் - சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

பள்ளி மான்யம் 31-03-2021க்குள் செலவினம் மேற்கொள்ளுமாறு மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு...

பள்ளி மான்யம் 31-03-2021க்குள் செலவினம் மேற்கொள்ளுமாறும், SMC/ SMDCயிடமிருந்து Utilisation Certificate பெறுமாறும் மாநில திட்ட இயக்குனர் ( SPD ) அவர்களின் செயல்முறைகள் Rc.No.139/ F1/ SSA/ 2020, Dated: 25-02-2021 வெளியீடு...



Toy Fair 2021: 27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது?


Step by Step - Register Procedure...

>>> Toy Fair 2021: 27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க பதிவு செய்யும் வழிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய (26-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

வாரிசுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மற்றும் அவர்களின் உரையாடல்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.


ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

நீண்ட நாட்களாக நினைத்திருந்த வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


திருவாதிரை : இழுபறிகள் அகலும்.


புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் சிலருக்கு உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



புனர்பூசம் : நன்மை உண்டாகும்.


பூசம் : ஆசைகள் நிறைவேறும்.


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின்போது கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் விவாதங்களில் ஈடுபடும் பொழுது சற்று நிதானம் வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திரம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கத்தில் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : சாதகமான நாள்.


அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.


சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

வெளியூரிலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் மற்றும் விவசாயப் பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



சித்திரை : முன்னேற்றமான நாள்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : மேன்மையான நாள்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புதிய தெளிவுடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான உயர் பதவிகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : அனுபவம் கிடைக்கும்

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தேவையற்ற அலைச்சல்களும், வாக்குவாதங்களும் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில ஆதரவின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : காலதாமதம் உண்டாகும்.


உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதில் கவனம் வேண்டும். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் பொறுமையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


திருவோணம் : குழப்பமான நாள்.


அவிட்டம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். மனம் மற்றும் உடல் ரீதியாக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சதயம் : நன்மை உண்டாகும்.


பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 26, 2021


மாசி 14 - வெள்ளி

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை பெறுவீர்கள். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரபட்ட தொடர்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும்.


ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...