கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறப்பு ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - சிறப்புப் பயிற்றுநர்களுக்கான மதிப்பூதியம் ரூ.20,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 234, நாள்: 07-12-2023 வெளியீடு...


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - சிறப்புப் பயிற்றுநர்களுக்கான மதிப்பூதியம் ரூ.20,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 234, நாள்: 07-12-2023 வெளியீடு (Samagra Shiksha (Integrated School Education) - Remuneration of Special Teachers increased from Rs.20,000 to Rs.25,000 by Ordinance G.O.Ms.No: 234, Dated: 07-12-2023 Issued)...



>>> அரசாணை (நிலை) எண்: 234, நாள்: 07-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TRB - சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான - ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைப்பு - தேர்வர்கள் ஏமாற்றம்...

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,கணினி பயிற்றுநர் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்.11-ம் தேதி வெளியிட்டது. இதற்கான இணையவழித் தேர்வுஜுன் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன்பதிவு மார்ச் 1 முதல் 25-ம் தேதிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழில்நுட்பக் காரணங்களால் ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்படுவதாக திடீரென அறிவித்தது. 



இதற்கிடையே, சிறப்பு ஆசிரியர்பதவியில் (ஓவியம், தையல், இசை, உடற்கல்வி) 1,598 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்.26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான இணையவழி தேர்வு ஆக.27-ம் தேதி நடத்தப்படும் என்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 31 முதல் ஏப்.25 வரை நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.


ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 31-ல் (இன்று) தொடங்கப்படுமா என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்தது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவும் மார்ச் 1-ல் தொடங்கப்படாது. இதுதொடர்பாக அறிவிக்கை வெளியிடப்படும்’’ என்றார். 


ஏற்கெனவே கடந்த 2017-ல்நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர்தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீட்டுஇடங்களுக்கான தேர்வுப்பட்டியலும் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...