கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்தரவு - Orders - Issued...

 Housing and Urban Development Department - Appointment of Grievance Redressal Officer under Section 23(1) of the Rights of Persons with Disabilities Act, 2016 - Thiru.S.Veeramani, Additional Secretary to Government - Appointed as Grievance Redressal Officer-Orders - Issued. 

====== 

HOUSING AND URBAN DEVELOPMENT  DEPARTMENT 


G.O.(Rt).No.25 Dated: 19.02.2021 

Read: G.O.(Ms) No.16, Welfare of Differently Abled Persons Department, dated 02.12.2020.. 

===== 

ORDER: 


In the Government Order first read above, orders were issued, instructing all the departments to appoint Grievance Redressal Officer in their offices at Secretariat, as per Section 23(1) of the Rights of Persons with Disabilities Act, 2016 for the purpose of the Section 19 and 20 of the said Act and Rule 10 of the Rights of Persons with Disabilities Rules, 2017 issued by the Government of India which envisages that:- 


10. Manner of maintenance of register of complaints by the Government establishments. 

(1) Every Government establishment shall appoint an officer not below the rank of Gazetted Officer as Grievance Redressal Officer. 

Provided that where it is not possible to appoint any Gazetted Officer, the Government establishment may appoint the senior most Officer as a Grievance Redressal Officer. 


2. The Government accordingly, appoint Thiru.S.Veeramani, Additional Secretary to Government as Grievance Redressal Officer under Section 23(1) of the Rights of Persons with Disabilities Act, 2016 in respect of Housing and Urban Development Department.




இன்றைய (28-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மதிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவான பணிகளை செய்து கொடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.


பரணி : லாபம் மேம்படும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். தொழில் தொடர்பான முயற்சிகளில் பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் லாபமும், மேன்மையும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : காலதாமதங்கள் குறையும்.


ரோகிணி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

மற்றவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அளிப்பீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் மாற்றமும், அனுபவமும் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்களில் குடும்பத்திலுள்ள பெரியோர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தாயாரின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


திருவாதிரை : தன்னம்பிக்கை உண்டாகும்.


புனர்பூசம் : திருப்தியான நாள்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மேம்படும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த வாக்குவாதங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.


பூசம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.


ஆயில்யம் : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவின் மூலம் லாபம் மேம்படும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூரம் : அறிமுகம் உண்டாகும்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். உடன் பணிபுரிபவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் தெளிவு பிறக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை



உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


அஸ்தம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


சித்திரை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விலகி சென்ற உறவினர்கள் மீண்டும் விரும்பி வருவார்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சில வேலைகளை சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் காரியங்களில் வெற்றி உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



சித்திரை : கவலைகள் நீங்கும்.


சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.


விசாகம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சில நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். தோற்றப்பொலிவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


அனுஷம் : திருப்திகரமான நாள்.


கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் நிர்வாகத்திறன் மேம்படும். சுவையான உணவுகளை உட்கொள்வதில் ஆர்வம் ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : மரியாதைகள் அதிகரிக்கும்.


பூராடம் : ஆர்வம் ஏற்படும்.


உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

தடைபட்டு வந்த பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மாறுபடும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : துரிதம் ஏற்படும்.


திருவோணம் : தெளிவு பிறக்கும்.


அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் மனம் வருந்தும்படி பேசுவதை தவிர்க்க வேண்டும். படபடப்பு இன்றி செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.


சதயம் : காலதாமதம் ஏற்படும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 28, 2021


மாசி 16 - ஞாயிறு

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திடீரென்று சில விஷயங்களுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


உத்திரட்டாதி: அன்யோன்யம் அதிகரிக்கும்


ரேவதி: புதுவிதமான நாள்

இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.02.2021(ஞாயிறு)...

 


🌹மனிதர்கள் எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும் காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான குணத்தை காட்டி கொடுத்து விடும்.!

🌹🌹மருந்தால் சரியாகாத

சில காயங்கள் கூட 

மறந்தால் சரியாகும்.!!

🌹🌹🌹இன்று உண்மையான அன்பை அலட்சியம் செய்பவர்கள்                                 நிச்சயம் ஒரு நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்த‌ காரணத்தால் இன்று 28-02-2021(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு  ஒத்திவைக்கப்படுகிறது.  சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் எதிர்வரும் மே மாதத்தில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை ஏற்பு மற்றும் உரிமைகள் மீட்கபட்ட வெற்றி மாநாடு மிக பிரமாண்டமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

 மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.   

🍒🍒பள்ளிக் கல்வி - முறைசாரா கல்வி (Non Formal Education) திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களே இணைத்தன்மை வழங்கலாம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் அனைவரும்  பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு.

🍒🍒சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் COVID_19 தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் -படிவம் பூர்த்தி செய்யக் கோருதல் சார்ந்து நாகை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒அரசு பாலிடக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது சரி தான்: மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

🍒🍒அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு வெளியீடு.

🍒🍒பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு.

🍒🍒1,598 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 31-ந்தேதி விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

🍒🍒தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

இன்று முதல் எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கப்படும்

எம்.எல்.ஏ.க்களின் சொந்த பொருட்கள் மற்றும் கோப்புகள் இருந்தால் அவற்றை காலி செய்து அறையை ஒப்படைக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

🍒🍒திமுக ஆட்சி அமைந்ததும் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயர்ததப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதன் முதலில் துவக்கி வைத்தவர்தான் கலைஞர் என்று சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.                                           

🍒🍒தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மத்திய அரசு அவமதித்து வருகிறது 

நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும் மதிப்பட வேண்டும். மத்திய அரசின் அடிமையாக அதிமுக அரசு உள்ளது

தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி

🍒🍒சட்டப்பேரவையில் அதிக கேள்விகள் எழுப்பியவர், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு 

சபாநாயகர் தனபால்

🍒🍒மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக அரசை அகற்றப்பட வேண்டும் – ராகுல் காந்தி எம்.பி

🍒🍒தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வந்து மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார்

- சபாநாயகர் தனபால் புகழாரம்

🍒🍒தேர்தல் நடத்தை வழிமுறைகளை அரசியல் கட்சிகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்

தமிழக தேர்தல் ஆணையம்

🍒🍒சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்குக்கான நேர்காணல் மார்ச் 2ம் தேதி தொடங்கும்.

மார்ச் 2ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடைக்கும்

கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

🍒🍒சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு

🍒🍒மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்.மோடியின் ஆலோசனையா? மம்தா கேள்வி

🍒🍒தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்தரவு.

🍒🍒ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹256 குறைந்து, சவரன்₹34,648 க்கு விற்பனை.

🍒🍒நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்ற அடிப்படையில் கமலை சந்தித்தேன்; ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் - கமலை சந்தித்த பின் சரத்குமார் பேட்டி

சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது 

- கமல்ஹாசன்

🍒🍒சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பெயரன் வெற்றியழகன் விருப்ப மனு தாக்கல்.

🍒🍒வெரி குட் மிஸ்டர் மோடி உங்கள தான் மத்த நாடுகள் பின்பற்றனும் பாராட்டி தள்ளும் உலக சுகாதார அமைப்பு

🍒🍒சபாநாயகர் தனபால் பேச்சு:

2016 முதல் இன்று வரை சட்டப்பேரவை 167 நாட்கள் கூடியுள்ளது. 

மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைப்பெற்றுள்ளது.

அவையில் உரையாற்ற ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சிக்கு 16 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

🍒🍒இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா  சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். - பிசிசிஐ

🍒🍒தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

🍒🍒தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அர்ஜுனமூர்த்தி புதிய கட்சி தொடக்கம்; ரஜினிகாந்த் வாழ்த்து - தமிழக அரசியல்

🍒🍒சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 

23 சட்டமன்ற தொகுதிகள் பா.ம.கவிற்கு ஒதுக்கப்படுகிறது.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றியதால் தொகுதிகளை குறைத்து பெற்றுள்ளோம்.

🍒🍒தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி.

🍒🍒உணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அதிரடி சட்டத்துக்கு  மத்திய பிரதேச அரசு ஒப்புதல்

🍒🍒அதிமுக - பாமக கூட்டணி உறுதி; பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

🍒🍒தமிழ்நாட்டில் உள்ள 50 லட்சம் இஸ்லாமிய மக்களின் விருப்பம்  மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் ஆக்குவதே

-காதர் மொய்தீன்

🍒🍒இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை எதிர்காலத்தில் தமிழ்நாடுதான் நிர்ணயிக்கப் போகிறது

இது என்னுடைய உணர்வு

ராகுல் காந்தி  நாங்குநேரியில் பேச்சு

🍒🍒தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலை நிர்ணயம் 

ஒரு டோஸ் விலை ரூ. 250 ஆக நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவு

🍒🍒தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

🍒🍒இன்று நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு.

👉திமுகவுடன் கடந்த 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில் தொடரும் பேச்சுவார்த்தை.

🍒🍒பாஜக மற்றும் தேமுதிக உடன் தொகுதிப்பங்கீடு பற்றி அதிமுக இன்று ஆலோசனை நடத்த உள்ளது -இன்றே தொகுதிகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு

🍒🍒குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.

🍒🍒கொளத்தூரில் போட்டியிடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

இன்று காலை 10 மணியளவில் விருப்ப மனு தாக்கல்.

🍒🍒பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கப்படுகிறது; தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் குறித்து மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

🍒🍒வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவே மாநில அரசு கடன் வாங்குகிறது; திமுகவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம.                                            

 🍒🍒கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று பிரிட்டன் அரசி எலிசபெத் தெரிவித்துள்ளாா்.

🍒🍒அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் 5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

🍒🍒 2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை 4 அல்லது 5 மைதானங்களில் நடத்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

The India Toy Fair - 2021 குறித்த முழுமையான விளக்கம்...



நாள்: 27th February to 2nd March 2021..


Organized by:

Department of school Education and Literacy,

Ministry of education

Government of India...


Themes: 

1. Atmanirbhar Bharat ( Self- Reliant India)

 2. Vocal to Local


📌 Virtual Platform வழியாக நடத்தப்படும் இக்கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 


📌 NCERT, SCERT, CBSE சார்பாக பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் IIT, காந்திநகர், NID and Children University, Ahmadabad மற்றும் இந்திய பொம்மை நிறுவனங்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.


📌 Play Based Learning , Activity Based Learning, Indoor and Outdoor Play, Use of Puzzles and Games to promote Critical Thinking குறித்த அமர்வுகள் இடம் பெறுகின்றன.


📌 Craft Demonstrations, Competitions, Quizzes, Virtual Tours, Product Lunches சார்ந்த செயல்பாடுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.


📌 பிப்ரவரி 27, 28, மார்ச் 1, 2  தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கு பெற கீழ்கண்ட இணைய முகவரியில் பதிவு செய்யலாம். https://theindiatoyfair.in/


📌 இக்கண்காட்சியினை Swayam Prabhae Vidya Channel வழியாகவும் நேரலையாக கண்டுகளிக்கலாம்.


•📌 விருப்பப்பட்ட ஆசிரியர்கள் Toys/ games/ puzzles/puppets/ activities/board games/electronic games போன்றவை வழியாக தாங்கள் வகுப்பறையில் கற்பித்த நிகழ்வுகளை 1 (அ) 2 நிமிட காணொலி காட்சி (Video ) ஆக எடுத்து அதனை கீழ்கண்ட இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.


https://www.mygov.in/task/my-favorate-indian-toy-video-contest/?target=inapp&type=task&nid=300431


தேர்தல் 2021 – அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி வருகைப் பதிவேட்டுடன் ஆஜராக உத்தரவு - CEO Proceedings...

 


அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் வருகைப்பதிவேட்டுடனும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டுடனும் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்களின் தவறாமல் ஆஜராக தெரிவித்தல் சார்பாக.

>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு...

 


மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் அனைவரும்  பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை எண்: 48, நாள்: 25-02-2021 வெளியீடு...

>>> அரசாணை எண்: 48, நாள்: 25-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.02.2021 (சனி)...

 


🌹சிலருக்கு நாம் கொடுக்கும்போது நல்லவர்கள்

அதையே திரும்ப கேட்கும்போது கெட்டவர்கள்

அது பாசம் என்றாலும் சரி 

பணமென்றாலும் சரி.!

🌹🌹அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடமிருந்து பெறவும்கூடாது.

பிறருக்கு கொடுக்கவும் கூடாது.             ஏனெனில் இரண்டுமே வேதனையைத் தரும்.!!

🌹🌹🌹காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை.

ஆனால் காயப்படுத்தி விட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்- சுனில் அரோரா அறிவிப்பு.

👉வேட்புமனு தாக்கல் தொடக்கம் -  10.03.21

👉வேட்புமனு தாக்கல் நிறைவு - 19.03.21

👉வேட்புமனு  பரிசீலனை - 20.03.21

👉வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - 22.03. 21 

👉தேர்தல் நாள் : 06.04.21

👉வாக்கு எண்ணிக்கை : 02.05.21

🎀🎀தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.       

🎀🎀தேர்தல் அறிவிப்புக்கு பிறகு எந்த வித புதிய திட்டங்கள் அரசாணை வெளியிடக் கூடாது என அனைத்துத் துறை செயலர்களுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

🎀🎀சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்

🎀🎀அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🎀🎀GOVT LETTER-7000/2020-11 DATE-25.1.2021-மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வெளியீடு

🎀🎀தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு நாளை 28-02-2021(ஞாயிற்றுக்கிழமை)அன்று திட்டமிட்டப்படி நடைபெறும்.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

🎀🎀கருணை அடிப்படையில் பணி நியமனம் 02.02.2016 முதல் 31.12.2019 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப் படுத்துதல் - ஆணை வெளியீடு.

🎀🎀ஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு

🎀🎀பள்ளி மான்யம் 31-03-2021க்குள் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறையில் படி செலவினம் மேற்கொள்ள உத்தரவு.

🎀🎀நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

🎀🎀தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற, சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது

🎀🎀கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

🎀🎀தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

🎀🎀ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

🎀🎀பிளஸ் 2 தேர்வுக்கு இன்று முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்

🎀🎀SHAALA SIDDHI முடிக்காதவர்கள் விரைவாக முடித்துக்கொள்ளவும் - Last Date: Feb.28

🎀🎀மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in இணையதளத்தில் வெளியானது.

கடந்த ஜனவரி 31ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

முதல் தாளில் 4,41,798, இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

🎀🎀3 days training for BT teachers - Proceedings - 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

🎀🎀10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

🎀🎀 The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு

🎀🎀மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்

🎀🎀ஆஸ்கர் விருது பொது பிரிவில் 366 படங்களில் சூரரைப் போற்று நீடிக்கிறது. 

சிறந்த நடிகர், நடிகை, படம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி. 

இதற்கான வாக்கு பதிவு மார்ச் 5 - 10 வரை நடைபெறுகிறது. மார்ச் 15 இறுதி பட்டியல் வெளியிடப்படும். 

1000 படங்கள் போட்டியிட்டன.

🎀🎀திமுகவை பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

🎀🎀மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை நிறுவனங்களை முடிந்தவரை தனியார்மயம் ஆக்குவதே எங்கள் நோக்கம்

- பிரதமர் நரேந்திர மோடி

🎀🎀வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானதே;  6 மாதங்களுக்குப் பின் மாற்றி அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.

🎀🎀வாக்குப்பதிவு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு. 

🎀🎀80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குமுறையை பயன்படுத்தலாம். 

- சுனில் அரோரா

🎀🎀தமிழகத்தில் அதிக தேர்தல் செலவுகள் நடைபெறும் என்பதால் முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகிறது

- சுனில் அரோரா

🎀🎀குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அது பற்றிய விவரங்களை 

ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

🎀🎀ஒரு சட்டமன்ற தொகுதிக்கு அதிகபட்சமாக ரூ.30.8 லட்சம் மட்டுமே தேர்தல் செலவுக்கு அனுமதி

 - சுனில் அரோரா

🎀🎀தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்

🎀🎀மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும்  எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

- சுனில் அரோரா.

🎀🎀பழ.கருப்பையாவுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

🎀🎀மறைந்த மூத்த கம்யூனிஸ்ட்  தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.

🎀🎀வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டமசோதா நிறைவேற்றியமைக்காக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார் மருத்துவர் ராமதாசு

🎀🎀"நான் நாட்டின் ஒரே பெண் முதல்வர், பாஜகவின் செயல்களுக்கு நான் ஒருபோதும் பயப்பட மாட்டேன்".

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

🎀🎀சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது  தனித்து போட்டியா என்று விரைவில் அறிவிக்கப்படும் 

-சென்னையில் கமல்ஹாசன் பேட்டி

🎀🎀அதிமுக- பா.ம.க இடையே இன்றே தொகுதி பங்கீடு இறுதி ஆக வாய்ப்பு.

🎀🎀தமிழகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம். 

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு கூடுதல் இயக்குனராக சாந்திமலர் நியமனம்.

🎀🎀அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

🎀🎀சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி - சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதி ஆகியுள்ளது.

விஜயகாந்த், கமலும் கூட்டணிக்கு வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு.

🎀🎀வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு அகில இந்திய பார்வார்டு பிளாக் எதிர்ப்பு. 

மசோதாவை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவிப்பு.

🎀🎀திருச்சியில் நடைபெற இருந்த திமுக மாநில மாநாடும், மற்றும் வரும் 7 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக் குழு கூட்டமும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு

🎀🎀கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் தொகுதி பங்கீடு குழு அறிவிப்பு                                                      

🎀🎀1598 சிறப்பாசிரியர்கள் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியீடு-ஆசிரியர் தேர்வு வாரியம்

👉1) Physical Education Teacher - 801

👉2) Art Master - 365

👉3) Music Teacher - 91

👉4) Craft  (Sewing) -341

Total Post - 1598

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...