கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: 07.11.2012 - 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/- மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி (Award of cash incentive to the Government employees who have rendered 25 years of unblemished service - Application Format)...

 


Award of cash incentive to the Government employees who have rendered 25 years  of unblemished service - Orders Issued...


>>> Click here to Download G.O.Ms.No.:390 , Dated: 07.11.2012...



>>> ஊக்கத்தொகை ரூ.2000/- மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி...




கோவிட் -19 தடுப்பூசி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் மாவட்ட வாரியான பட்டியல்...

 List of Private Hospitals empaneled under the CMCHS/PMJAY- Private Covid-19 Vaccination Centers...

>>> Click here to Download - List of Private Hospitals empaneled under the CMCHS/PMJAY- Private Covid-19 Vaccination Centers...



தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அனைத்துவகை பதவி உயர்வு கலந்தாய்வுகளை ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...





+2 பொதுத் தேர்வு- தனித் தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...


 +2 பொதுத் தேர்வு-  தனித் தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000006/ எச்1/ 2021, நாள்: 01-03-2021...

>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000006/ எச்1/ 2021, நாள்: 01-03-2021...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 02.03.2021 (செவ்வாய்)...

 


🌹இன்று கை கொடுக்க 

யாரும் இல்லை என்று வருந்தக்கூடாது.

ஏனெனில் 

நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும் நீங்கள் முயற்சி செய்தால் என்பதை மறந்து விடக்கூடாது.!

🌹🌹உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் 

உதடு சொல்லத் துடிக்கும் 

உள்ளம் சொல்லாமல் துடிக்கும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா சண்முகநாதன் அவர்கள் நேற்று மாநில மாவட்ட நிர்வாகிகளோடு சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களையும் தொடக்கக்கல்வி இயக்குனர் திரு. முத்து பழனிச்சாமி அவர்களையும் இணை இயக்குனர்கள் திருமதி சசிகலா திருமதி ஆனந்தி திருமிகு பொன்னையா அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு. நிகழ்வில் ஆசிரியர்களின் 25 அம்ச கோரிக்கைகள் பற்றியும் கோரிக்கை மனு அளித்து  விவாதித்த நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பாவலர் நினைவு நாட்காட்டியை இயக்குனர்கள், மற்றும் இணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டது.

🌈🌈கெளரவ விரிவுரையாளர்கள்‌ பெற்று வரும்‌ மதிப்பூதியம்‌ 01.01.2020 முதல்‌ ரூ.15,000/-லிருந்து, ரூ.20,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

🌈🌈மாநில அரசால் வழங்கப்படும் முன்பணம் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம் (2020-21ஆம் ஆண்டு) குறித்த அரசாணை வெளியீடு

🌈🌈3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

🌈🌈தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் 2021- நடத்தை விதிமுறை குறித்த கையேடு தொகுப்பு - தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் – ஆணை மற்றும் வழிமுறைகள் வெளியீடு

🌈🌈வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

🌈🌈ஆசிரியர்களுக்கு 8 கிலோமீட்டர் தூரத்திற்குள் தேர்தல் பணியை வழங்க வேண்டும்- ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

🌈🌈மார்ச் 8-ம் தேதி நடைபெற இருந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் ஒத்திவைப்பு

🌈🌈TNPSC/UPSC தேர்வுகளுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி - மார்ச் 10 கடைசி தேதி

🌈🌈தேர்வு எழுதுதல் சார்ந்து பரிக்சா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) போட்டி :  தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பாரதப் பிரதமருடன் கலந்துரையாடலாம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு. 

🌈🌈அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை :  அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

🌈🌈உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் : கூடுதல் தகவலுக்கு  www.ntanet.nic.in

🌈🌈M.Phil., Ph.D. உயர் கல்வி பயில முன் அனுமதி கோரிய,  அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க அனைத்து CEOக்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🌈🌈பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் 

மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில், மையத்திற்கு நேரில் சென்று 'தட்கல்' முறையில், ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம், என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

🌈🌈10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு 

🌈🌈ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, தேர்வுகள் இன்றி, 'ஆல் பாஸ்' செய்யப்பட்டதை குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்க வேண்டும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

🌈🌈234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி!

👉117 பெண் வேட்பாளர்கள்!

👉117 ஆண் வேட்பாளர்கள்!

மார்ச் 07, ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம்.

- நாம் தமிழர் கட்சி

🌈🌈பக்க விளைவுகள் மிகக் குறைவு: எம்.பி., எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினரும் கொரோனா தடுப்பூசி போட்டுகங்க: 

-மத்திய சுகாதார அமைச்சர்

🌈🌈திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம் - சூழ்நிலையை கருதி 3 தொகுதிகளுக்கு சம்மதித்தோம்

ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் 

-காதர் மொய்தீன்

🌈🌈மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

🌈🌈சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐக்கு மற்ற வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்

🌈🌈மாணவியின் சவாலை ஏற்ற ராகுல் கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு புனித ஜோசப் பள்ளி மாணவி ஒருவர் உடற்பயிற்சி குறித்து கேட்டு சவால் விட உடனடியாக மாணவியுடன் போட்டி வைத்து தண்டால் எடுத்தார் ராகுல்.

ஒரு கையாலும் தண்டால் எடுத்தார் ராகுல் காந்தி.

🌈🌈80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 

வாக்கு எண்ணிக்கைக்கு ஒருமாதம் இருப்பது சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும்; 

தவறு நடக்க வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

🌈🌈கொரோனா பாதித்தவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். 

அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய ஆலோசனைக்கு பின் பொள்ளாச்சி ஜெயராமன் இதனை தெரிவித்துள்ளார்

🌈🌈ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல் தரப்போறாரு' என்ற திமுக விளம்பரத்துக்கு தமிழகம் முழுவதும் 9,500 இடங்களில் விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி

🌈🌈ராஷ்டிரியா ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்,  மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு.

மம்தாவுக்கு எங்களது முழு ஆதரவு வழங்க லல்லு பிரசாத் முடிவு. வங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே எங்களது முதல் கடமை -தேஜஸ்வி யாதவ்

🌈🌈தமிழ் மொழியை அழிக்க துடிக்கும் RSS-க்கு எக்காரணம் கொண்டும் நாம் வழிவிட்டு விடக்கூடாது” 

இந்தியனாக தமிழ் மொழியையும் அதன் கலாசாரத்தை காப்பது எனது கடமை  

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் மக்களின் முன்னிலையில் பேச்சு

🌈🌈திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி.வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு படி குழு அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

🌈🌈சிங்காரச் சென்னையாக மாற்றுவோம்.. 

ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை நிச்சயம் அமைப்போம்

-ஸ்டாலின்

🌈🌈எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன்;   ஒன்றாக இணைந்து கொரோனா இல்லா இந்தியாவை உருவாக்குவோம். 

- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

🌈🌈திருச்சியில் நேரு அவர்களின் ஏற்பாட்டில் திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில்

தமிழகத்திற்கான அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடுவதாக அறிவிப்பு.

நேரிலும், ஊடகங்கள், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்திருக்கக் கூடியவர்களுக்கு நன்றி

திருச்சியில் 7ஆம் தேதி இலட்சிய பிரகடனத்தையும், தமிழ்நாட்டிற்கான அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையையும் வெளியிட இருக்கிறேன்

- மு.க. ஸ்டாலின்

🌈🌈சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு

🌈🌈சென்னையில் உள்ள மாற்று திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியல் தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். 

-மாவட்ட தேர்தல் அலுவலர்

🌈🌈இதுவரை இல்லாத அளவு மூன்றே மாதங்களில் ரூ.225 உயர்ந்துள்ளது சமையல் எரிவாயு விலை.

கடந்த நவம்பர் 30ல் ரூ.610 ஆக இருந்த காஸ் விலை இன்று ரூ.835.

நவ.30 : ரூ.610 

டிச.1 : ரூ. 660 

ஜன.1 : ரூ.710 

பிப்.4 : ரூ.735 

பிப்.15 : ரூ.785 

பிப்.25: ரூ.810 

மார்ச்1: ரூ. 835

🌈🌈தேமுதிக சார்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கிய நபர்களிடம் 6 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு.

🌈🌈பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தேர் சிங்கின் முதன்மை ஆலோசகரானார் பிரசாந்த் கிஷோர் 

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது

தற்போதும் திமுகவின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருந்துவருவது குறிப்பிடதக்கது.

🌈🌈இந்திய குடியரசு துணைத் தலைவர்

வெங்கையா நாயுடு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

🌈🌈ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

உரிய ஆவணங்களுடன் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்து செல்ல அனுமதி, இல்லாவிடில் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🌈🌈பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்.

ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் தர இவ்வளவு சிரமம் என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன என உயர்நீதிமன்றம் கேள்வி?

🌈🌈அதிமுகவில் விருப்ப மனு அளிக்க மார்ச் 5 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 3ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு.

🌈🌈தமிழக சட்டமன்ற தேர்தல் 2021

திமுக கூட்டணி :

முஸ்லீம் லீக் : 03

மனிதனேய மக்கள் கட்சி : 02

🌈🌈இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட  ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு செலுத்தலாம்- தேர்தல் ஆணையம்

🌈🌈முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு.

மார்ச் 15 முதல் 26 வரை ஆன்லைனில் ஒரு மணி நேரத் தேர்வாக நடைபெறும்.

-அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

 🌹🌹எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மோடிக்கு தடுப்பூசியை செலுத்திய புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். புதுச்சேரி செவிலியர் நிவேதா கூறியதாவது,   புதுச்சேரி  தான் எனது பூர்வீகம். நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். நான் தற்போது தடுப்பூசி பிரிவில் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார் நீங்கள் தான்  பிரதமருக்கு தடுப்பூசி போட வேண்டும்’ என்று சொன்னார்கள். 

பிரதமர் என்னுடன் நன்றாக பேசினார். அவருக்கு பாரத் பயோடெக்கின் தடுப்பூசி போடப்பட்டது. 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும்போது அவர் ‘‘ஊசியை செலுத்துங்கள்’’ என்றார். அப்போது ‘‘தடுப்பூசி போட்டப்பட்டு விட்டது’’ என்றேன். அதற்கு அவர் ‘‘அப்படியா, தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லையே’’ என்றார். பின்னர் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று பிரதமர் என்னிடம் கேட்டார் என நிவேதா கூறினார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

Government Aided College - 20 Assistant Professor Posts - Last Date to Apply: 07-03-2021...

 


>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால் நிரப்பி கொடுக்க வேண்டிய படிவம்...

 


80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் (Senior Citizen) தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால்  படிவம் 12D நிரப்பி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் அறிக்கை நாளான 12-03-2021லிருந்து 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 அதன் பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு ( Postal Ballot ) அனுப்பி வைக்கப்பட உள்ளது.

>>> படிவம் 12D_ தமிழ்...

>>> Form 12D_ English...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...