கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamilnadu Rural Students Talent Search Examination (TRUST) - January 2021 - Key Answer - Final...


>>> Tamilnadu Rural Students Talent Search Examination (TRUST) - January 2021 - Key Answer - Final...


National Talent Search Examination (NTSE) - December 2020 - Key Answer - Final...

 


>>> National Talent Search Examination (NTSE) - December 2020 - Key Answer - Final...


>>> தேசிய திறனறித் தேர்வு (NTSE) 2020-2021ஆம் ஆண்டு கேள்வித்தாள்கள்...


சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆலோசனை - விரைவில் அறிவிப்பு...?

 

தேர்தல் பயிற்சியால் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை - தமிழக அரசு தீவிர ஆலோசனை...


தமிழகத்தில் கொரோனா நெருக்கடிக்கு பின்னர் உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட ஓராண்டு மாணவர்கள் வீட்டிலேயே இருந்து கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சோர்வுற்று கிடந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு புதிய உற்சாகத்தை அளித்தது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.


ஆண்டு இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதாவது, 9, 10, 11ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 12ஆம் வகுப்பிற்கு மட்டும் தான் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


இந்த சூழலில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியானது. அதன்படி, மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 


மேலும் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆலோசித்து வருகிறது.

வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? தேர்தல் ஆணையம் விளக்கம்...

What are the documents confirming the identity of the voter? - Election Commission...



ஓட்டு போடும்போது வாக்குச்சாவடியில் வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புகைப்பட அடையாள அட்டை இதுகுறித்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 நடைபெறவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு, வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும். 


மாற்று ஆவணங்கள் எவை? 

  1. கடவுச்சீட்டு,
  2. ஓட்டுனர் உரிமம், 
  3. மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், 
  4. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், 
  5. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, 
  6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, 
  7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, 
  8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, 
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 
  10. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, 
  11. ஆதார் கார்டு ஆகியவை ஆகும். 

 

தகவல் சீட்டு ஆவணம் அல்ல 

 வாக்காளர்களுக்கு புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டை அளிக்க தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு இந்த சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் தரப்படும். ஆனால் வாக்களிக்க வரும்போது, இதை தனித்த அடையாள ஆவணமாக காட்ட முடியாது. இந்தச் சீட்டை வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்க முடியாது. 


பட்டியலில் பெயர் 

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். 


 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 07.03.2021 (ஞாயிறு)...

 


🌹நமக்கு ஒருவரிடம் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.                                                           நாமே தீர்மானித்து விட்டால் பிறகு அவமானங்களும் இழப்புகளும் தான் மிஞ்சும்.!

🌹🌹அடிச்சா தான் வலிக்கும்னு இல்ல நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட நடிச்சாக் கூட வலிக்கத் தான் செய்கிறது.!!

🌹🌹🌹யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது.ஏனெனில் இன்று நாம் பலம் மிக்கவராக இருக்கலாம் .

ஆனால் காலம் நம்மை விட பலம் வாய்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈ஆல் பாஸ் அறிவிப்பால்  மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை.

🌈🌈இரட்டை பட்டங்களை வழங்கும் இந்திய, சா்வதேச உயா் கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி கருத்துக் கேட்பு.

🌈🌈தேர்தல் முடிவு வெளியாவதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

🌈🌈ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான சில சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்.

🌈🌈ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த CBSE தேர்வு தேதியில் மாற்றம் : MP சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி CBSE அறிவிப்பு.

🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை ; அவர்கள் விருப்பப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - தருமபுரி CEO உத்தரவு.

🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை 

🌈🌈உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

🌈🌈ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டு  உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கு வருகிற ஜூன் 27ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு வருகிற 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

🌈🌈ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, 'ஆல்பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது - நாளிதழ் செய்தி

🌈🌈ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

🌈🌈வாக்குப்பதிவு அலுவலர் களுக்கு அடுத்த வாரம் தேர்தல் பணி ஆணை- தேர்தல் ஆணையம் உத்தரவு.                                                   

🌈🌈தமிழகம் முழுவதும்  பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

🌈🌈கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா

🌈🌈ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 வரை உயர்வு.

கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்.

🌈🌈தமிழக அரசு கல்வி, வேலை வாய்ப்பு 10.5% இட ஒதுக்கீடு பெற்றதற்கு ராமதாஸ்தான் காரணம் என்று உண்மைக்கு மாறாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

🌈🌈4 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை.

🌈🌈எடப்பாடி பழனிசாமி வன்னியர் சமூகத்தையும், கவுண்டர் சமூகத்தையும் கையில் வைத்துக் கொண்டு முக்குலத்தோர் சமூகத்தினை புறந்தள்ளுகிறார். 

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை. 

-கருணாஸ்

🌈🌈மூன்றாவது அணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே  இருக்கும்.

தேர்தலுக்கு பிறகு நீடித்து இருப்பதில்லை 

- திருமாவளவன்

🌈🌈கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி: பாஜக தலைமை அறிவிப்பு

🌈🌈பாஜக பெற்ற 20 தொகுதிகளில் இருந்து தனது வெற்றி கணக்கை துவங்கி விட்டது திமுக

- திருமாவளவன்

🌈🌈ஜாதி ரீதியாக சமுதாயங்களை பிரித்து ஜாதி கலவரம் மூண்ட முயற்சிக்கிறது இந்த எடப்பாடி அரசும் அமைச்சர்களும்.

வடமாவட்டத்தில் அதிமுக தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும்

- கருணாஸ் பேட்டி

🌈🌈பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதலை எதிர்த்து, மார்ச் 15,16 ஆகிய தேதிகளில்  அகில இந்திய அளவில் போராட்டத்தினை அறிவித்துள்ளது. 

- AINBOF

🌈🌈இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

🌈🌈மகிழ்ச்சியும் இல்லை, சோகமும் இல்லை: அதிமுக 20 இடங்களை ஒதுக்கியது குறித்து பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

🌈🌈ரூர்கேலா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் மருத்துவர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டு மூன்று வார காலம் ஆகும் நிலையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

🌈🌈மார்ச் 8ம் தேதி முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மார்ச் 8ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

🌈🌈திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10ம் தேதி வெளியிடப்படும்; திருச்சி பொதுக்கூட்டத்தில் லட்சியப் பிரகடனம் வெளியிடப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

🌈🌈 "மழலையர் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்" ; பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு.

🌈🌈மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி -ஆந்திர அரசு.

🌈🌈கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 93.1கோடி டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக உணவுக்கழிவு குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌈🌈கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

🌈🌈ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைத்தது.

🌈🌈ஜப்பானின் டோக்கியோ பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா நெருக்கடி நிலையை அந்த நாட்டு அரசு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

🌈🌈பாஜக தமிழர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கிறது.

மாநிலம் என்கிற அமைப்பையே சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், மாநில உரிமையை காக்கும் விதமாக  சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு

கொளத்தூர் மணி

🌈🌈மதிமுக 6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி

கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி

அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை பார்க்கிறேன்

வைகோ

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...

 


>>> 1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...


தேர்தல் 2021 - நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் - தேர்தல் கமிஷன் உத்தரவு...

 


தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும், நான்கு கட்ட பயிற்சி அளிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்க வேண்டும்தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளது. அதற்கு முன், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, நான்கு கட்டமாக, பயிற்சி அளிக்க வேண்டும்.


மார்ச், 18க்குள், ஓட்டுச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, முதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின், மார்ச், 26க்குள் இரண்டு நாட்கள்; ஏப்ரல், 3க்குள் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும்; ஏப்., 5ல், நான்காம் கட்ட பயிற்சி அளிக்க வேண்டும்.


வகுப்பறையில், 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் எவ்வளவு தேர்தல் பணியாளர்கள் தேவையோ, அவர்களுடன் கூடுதலாக, 20 சதவீத பணியாளர்களுக்கு, பயிற்சி அளிக்க வேண்டும். ஓட்டுச்சாவடியில் பின்பற்ற வேண்டிய, கொரோனா விதிமுறைகளையும், தெரியப்படுத்த வேண்டும்.


ஓட்டுச்சாவடியில் ஒவ்வொரு அலுவலர்களும், என்ன செய்ய வேண்டும் என்பதை, தனித்தனியே விளக்க வேண்டும். செயல் விளக்கம் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...