🌹நமக்கு ஒருவரிடம் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாமே தீர்மானித்து விட்டால் பிறகு அவமானங்களும் இழப்புகளும் தான் மிஞ்சும்.!
🌹🌹அடிச்சா தான் வலிக்கும்னு இல்ல நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட நடிச்சாக் கூட வலிக்கத் தான் செய்கிறது.!!
🌹🌹🌹யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது.ஏனெனில் இன்று நாம் பலம் மிக்கவராக இருக்கலாம் .
ஆனால் காலம் நம்மை விட பலம் வாய்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌈🌈ஆல் பாஸ் அறிவிப்பால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை.
🌈🌈இரட்டை பட்டங்களை வழங்கும் இந்திய, சா்வதேச உயா் கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி கருத்துக் கேட்பு.
🌈🌈தேர்தல் முடிவு வெளியாவதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
🌈🌈ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான சில சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்.
🌈🌈ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த CBSE தேர்வு தேதியில் மாற்றம் : MP சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி CBSE அறிவிப்பு.
🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை ; அவர்கள் விருப்பப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - தருமபுரி CEO உத்தரவு.
🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை
🌈🌈உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது
🌈🌈ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
🌈🌈ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கு வருகிற ஜூன் 27ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு வருகிற 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
🌈🌈ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, 'ஆல்பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது - நாளிதழ் செய்தி
🌈🌈ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
🌈🌈வாக்குப்பதிவு அலுவலர் களுக்கு அடுத்த வாரம் தேர்தல் பணி ஆணை- தேர்தல் ஆணையம் உத்தரவு.
🌈🌈தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
🌈🌈கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா
🌈🌈ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 வரை உயர்வு.
கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்.
🌈🌈தமிழக அரசு கல்வி, வேலை வாய்ப்பு 10.5% இட ஒதுக்கீடு பெற்றதற்கு ராமதாஸ்தான் காரணம் என்று உண்மைக்கு மாறாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்
🌈🌈4 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை.
🌈🌈எடப்பாடி பழனிசாமி வன்னியர் சமூகத்தையும், கவுண்டர் சமூகத்தையும் கையில் வைத்துக் கொண்டு முக்குலத்தோர் சமூகத்தினை புறந்தள்ளுகிறார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை.
-கருணாஸ்
🌈🌈மூன்றாவது அணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே இருக்கும்.
தேர்தலுக்கு பிறகு நீடித்து இருப்பதில்லை
- திருமாவளவன்
🌈🌈கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி: பாஜக தலைமை அறிவிப்பு
🌈🌈பாஜக பெற்ற 20 தொகுதிகளில் இருந்து தனது வெற்றி கணக்கை துவங்கி விட்டது திமுக
- திருமாவளவன்
🌈🌈ஜாதி ரீதியாக சமுதாயங்களை பிரித்து ஜாதி கலவரம் மூண்ட முயற்சிக்கிறது இந்த எடப்பாடி அரசும் அமைச்சர்களும்.
வடமாவட்டத்தில் அதிமுக தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும்
- கருணாஸ் பேட்டி
🌈🌈பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதலை எதிர்த்து, மார்ச் 15,16 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் போராட்டத்தினை அறிவித்துள்ளது.
- AINBOF
🌈🌈இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
🌈🌈மகிழ்ச்சியும் இல்லை, சோகமும் இல்லை: அதிமுக 20 இடங்களை ஒதுக்கியது குறித்து பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
🌈🌈ரூர்கேலா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் மருத்துவர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டு மூன்று வார காலம் ஆகும் நிலையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
🌈🌈மார்ச் 8ம் தேதி முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மார்ச் 8ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
🌈🌈திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10ம் தேதி வெளியிடப்படும்; திருச்சி பொதுக்கூட்டத்தில் லட்சியப் பிரகடனம் வெளியிடப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
🌈🌈 "மழலையர் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்" ; பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு.
🌈🌈மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி -ஆந்திர அரசு.
🌈🌈கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 93.1கோடி டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக உணவுக்கழிவு குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌈🌈கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
🌈🌈ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைத்தது.
🌈🌈ஜப்பானின் டோக்கியோ பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா நெருக்கடி நிலையை அந்த நாட்டு அரசு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.
🌈🌈பாஜக தமிழர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கிறது.
மாநிலம் என்கிற அமைப்பையே சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், மாநில உரிமையை காக்கும் விதமாக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு
கொளத்தூர் மணி
🌈🌈மதிமுக 6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி
கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி
அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை பார்க்கிறேன்
வைகோ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926