கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW - LINK...




 New Version -0.0.36

Updated date -March 2 - 2021



>>> Click here to update EMIS App

மகளிர் தின வாழ்த்துகள்....

மார்ச்_8_அனைத்துலக_பெண்கள்_தினம்...


#மகளிர்_தின_வாழ்த்துகள்....💐💐💐💐💐


1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர் ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


இனிய மகளிர் தின வாழ்த்துகள்...💐💐💐💐💐

இன்றைய செய்திகள் தொகுப்பு... 08.03.2021 (திங்கள்)...

 


🌹வாழ்வில் கஷ்டங்கள்

அதிகமாக வரவில்லை என்றால்,

பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல் போய்விடும்.!

🌹🌹காரணமே இல்லாமல் ஒதுக்கப்படுகிறோம் என்றால் அவர்கள் தேவை நம்மிடம் முடிந்தது என்று தானே அர்த்தம்.!!

🌹🌹🌹அன்புக்காக ஏங்கும் கணவனுக்கு அன்பான மனைவி கிடைப்பதில்லை.

அன்பான மனைவி கிடைத்தவனுக்கு அன்பை புரிஞ்சுக்க தெரியவில்லை.

சூப்பராக இருக்குது அல்ல விதியின் விளையாட்டு.!!!

அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை

👉கொரோனா ஊரடங்கு காலத்தில்  மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் - குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 76% அதிகரிப்பு

🎀🎀காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் தேதி அறிவிப்பு – மார்ச் 22 முதல் தொடக்கம்

🎀🎀பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு

🎀🎀தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து 12ம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. 

🎀🎀தேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🎀🎀தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அமைய உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள கணினி, இணைய வசதிகள் குறித்துத் தேர்தல் ஆணையம், பள்ளிக்கல்வித் துறையிடம் தகவல் கோரியுள்ளது. 

🎀🎀வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. அதன்படி, ஆதார், பான், ஓட்டுநர் உரிமை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓய்வூதியம் கணக்கு, மருத்துவ காப்பீடு கணக்கு, 100 நாள் வேலை அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மூலம் வரும் தேர்தலில் வாக்களிக்கலாம். 

🎀🎀ஒரே இடத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு 

🎀🎀அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- பாக்ஸ் நிறுவனம் போன்றவற்றின் வழியே நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

🎀🎀ப்ளஸ்-டூ தேர்வுக்குத் தயாராகும் நேரத்தில் தேர்தலுக்கு தயராகும் பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளதால் தேர்தல் பணிகளில் இருந்து ப்ளஸ்-1, ப்ளஸ்-2 ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி 

🎀🎀பணி நிரந்தரம் கேட்டு, ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி

🎀🎀கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்.

🎀🎀முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 104.

🎀🎀சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சேவியர் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

🎀🎀தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.

அதிமுக - தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக தகவல்.

🎀🎀தி.மு.கவின் உறுதிமொழி: ‘குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000’

🎀🎀மியான்மரில் தொடரும் பதற்றநிலை: இந்தியாவுக்கு தப்பித்து சென்ற காவலர்கள் - திருப்பி அனுப்ப கோரும் மியான்மர்

🎀🎀ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திட வேண்டும் - இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது.

 - மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

🎀🎀உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி M.Tech., BioTech & M.Tech., Computational Tech பிரிவில் மாணவர் சேர்க்கை.

அதன் அடிப்படையில் EWS பிரிவினருக்கும் 10% இடங்கள் ஒதுக்கீடு.

- அண்ணா பல்கலைக்கழகம்.

பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான EWS

10% இட ஒதுக்கீடு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலானது.

எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பில்

தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், 10 % இட ஒதுக்கீடு அமல்.

🎀🎀கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 48 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது

👉காங். 25,  

👉மதிமுக 6,

👉விசிக 6,

👉இந்திய கம்யூ. 6,

 👉இ.மு.லீக் 3,

👉மமக 2 தொகுதிகள் ஒதுக்கீடு

🎀🎀234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று மாலை  அறிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

🎀🎀அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

- கன்னியாகுமரியில் உள்துறை அமைச்சர் 

அமித்ஷா பேட்டி

🎀🎀திமுக கூட்டணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆதரவு. திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்,

பாஜக போட்டியிடும் இடங்களில், அக்கட்சியை தோற்கடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவும் முடிவு.

கோவையில் தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் பேட்டி.

🎀🎀புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது. 

இதில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். 

- நாராயணசாமி

🎀🎀ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் ஐ.பி.எல். தொடக்கம்.

இறுதிப்போட்டி மே 30ஆம் தேதி அகமதாபத்தில் நடக்கிறது.மும்பைக்கும் பெங்களூருவுக்கும் இடையே முதல் போட்டி.

🎀🎀வெள்ளையர்களை விரட்டி அடித்தது காங்கிரஸ் 

வெள்ளையர்களுக்கு சாமரம் வீசியது பாஜக

-ப.சித‌ம்பர‌ம்

🎀🎀வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும்             இ- பாஸ் கட்டாயம் 

ஆந்திரா,  புதுவை,  கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ - பாஸ் கட்டாயம்

-தமிழக அரசு அறிவிப்பு

🎀🎀மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி

ஒப்பந்தம் கையெழுத்தாவதாக மநீம பொது செயலாளர் குமரவேல் தெரிவித்திருந்த நிலையில் சமக மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் அதிருப்தியுடன் கிளம்பி சென்றனர்.

🎀🎀குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ₹ 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் திருச்சி மாநாட்டில் அறிவிப்பு.

அனைவருக்கும் குடிநீர், அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட 7 உறுதிமொழிகள்.10 ஆண்டு திட்டமாக படிப்படியாக நிறைவேற்றப்படும்.

-திருச்சி திமுக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎀🎀46 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றிருக்கிறார் தல அஜித்.

🎀🎀கலைஞர் மறைந்துவிட்டார் என நினைத்துருந்தேன். ஸ்டாலின் உருவில் இருக்கிறார்.

- திமுக தலைவர் ஸ்டாலின் உரைக்கு பிறகு பொதுச் செயலாளர் துரைமுருகன் உருக்கம்.

🎀🎀மனித கழிவுகளை மனிதரே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

 - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

🎀🎀அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.

ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்   வேலையில்லா திண்டாட்டம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- திமுக தலைவர் ஸ்டாலின்.

🎀🎀அரசியலை லாபம் பெறும் தொழிலாக,கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர் .

மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை

ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை - சீமான்.

🎀🎀’இந்திய அணியின் எதிர்கால தொடக்க ஆட்டக்காரர் இவர்’ - அசத்தும் வாஷிங்டன் சுந்தர்

🎀🎀பேராசிரியர் க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று  சென்னை கீழ்ப்பாக்கத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

🎀🎀திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

🎀🎀வாக்களிக்க வாருங்கள் என வாக்களிக்க அழைப்பிதழ் பத்திரிகை வடிவில் தேர்தல் ஆணையம் வெளியீடு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய (08-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

 

புதிய நபர்களின் அறிமுகமும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். கூட்டுத்தொழிலில் சக கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : அறிமுகம் உண்டாகும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. முக்கியமான பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


ரோகிணி : பொறுமை வேண்டும்.


மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

வீட்டில் சுபகாரியங்கள் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



மிருகசீரிஷம் : சாதகமான நாள்.


திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.


புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். மனதை உறுத்திக்கொண்டிருந்த பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், மாற்றங்களும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.


பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


ஆயில்யம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். திட்டமிட்ட காரியங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் தொழில் தொடர்பான ஆதாயம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மகம் : சிந்தனைகள் தோன்றும்.


பூரம் : திருப்தியான நாள்.


உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சில நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உபரி வருமானம் மேம்படும். அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : வருமானம் மேம்படும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான முயற்சிகளும், கற்பனைத்திறனும் வெளிப்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


சுவாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

கால்நடைகளின் மூலம் வருமானமும், முதலீடுகளும் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய தெளிவும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.


கேட்டை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். மன்றம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வும், மேன்மையும் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : திறமைகள் வெளிப்படும்.


பூராடம் : குழப்பங்கள் நீங்கும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------




மகரம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் தனவரவுகள் மேம்படும். குழந்தைகளிடமும், பெரியோர்களிடமும் கனிவுடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : தனவரவுகள் மேம்படும்.


திருவோணம் : நம்பிக்கை உண்டாகும்.


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலை தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபார விருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 08, 2021


மாசி 24 - திங்கள்

தொழில் மற்றும் வியாபாரத்தில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : லாபம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : ஒற்றுமை ஏற்படும்.


ரேவதி : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும் - பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

 💥 பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் - ஸ்டாலின்


💥 பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் - ஸ்டாலின்


💥 நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - ஸ்டாலின்


💥 அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி - ஸ்டாலின்


💥 தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை - ஸ்டாலின்





💥 கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும் - ஸ்டாலின்


💥 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்


💥 துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி - ஸ்டாலின்


💥 நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமானவை - ஸ்டாலின்


💥 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்...

 ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்...




Tamilnadu Rural Students Talent Search Examination (TRUST) - January 2021 - Question Paper...


>>> Tamilnadu Rural Students Talent Search Examination (TRUST) - January 2021 - Question Paper...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...