கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...



 தமிழகத்தில் தட்டச்சு (Type Writing), சுருக்கெழுத்து (Short Hand) தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும் தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பக் கட்டணம் ரூ.20.  தேர்வுக் கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான் மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் 26-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் 

தலைவர்,
தேர்வு வாரியம், 
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், 
கிண்டி, சென்னை

என்ற முகவரியில்  சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 30 வரை அபராதக் கட்டணம் ரூ.5 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 044-22351018, 22351014 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்- இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



ஒரு நபர் குழுவின் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படவில்லை - கண்டன அறிக்கை...






ஏப்ரல் 30-க்குள் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு - உயர் நீதிமன்றம் உத்தரவு...

 ஏப்ரல் 30-க்குள் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உயர் நீதிமன்ற கிளை உத்தரவு...



சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்...

 


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு - டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு...

 


தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான  அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு  வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாத நிலையில், தற்போது புதிதாக வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது.


இது இயற்கை விதிகளுக்கு எதிரானது. இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர் சமுதாயமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு  தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி  அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை (PPE) - ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்...


 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பி.பி.இ., உடை (முழு கவச உடை), வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

சட்டசபை தேர்தல் நடத்துவதால், 'கொரோனா' தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் அனைவருக்கும் சானிடைசர் வழங்கவும், வலது கையுறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணி நேற்று கூறியதாவது: நம் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 4,427 ஓட்டுச்சாவடிகளில், 22,150 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். இவர்கள், 'கொரோனா' தடுப்புக்கான பி.பி.இ., உடை அணிந்து, பணியில் ஈடுபடுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இருப்பர். இவர்கள், தற்போது வீடு வீடாக, தபால் ஓட்டுச்சீட்டுக்கான படிவங்களை வினியோகிக்கின்றனர்.

தேர்தல் நாளன்று, அதே ஓட்டுச்சாவடியில் பணியில் இருப்பர். மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச் செல்ல, தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர்.ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், 'தெர்மல் ஸ்கேனிங்' செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும், கையுறை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையுறை அணிந்த பிறகே, ஓட்டு இயந்திர பொத்தானை அழுத்த, வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முக கவசம், பி.பி.இ., உடை, கையுறை ஆகியவற்றை ஓட்டுச்சாவடி வாரியாக வாகனங்களில் சென்று சேகரித்து, உரிய முறையில் அழிக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், கொரோனா பாதிக்கப்பட்டோர், தபால் ஓட்டளிக்க வசதியாக, வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கப்படுகின்றன. அதை பெற்றுக்கொள்வோர், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும் ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

சிக்கியது ரூ.5.56 லட்சம்: கோவை வடக்கு தொகுதியில், ஜி.சி.டி., கல்லுாரி அருகே, தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியில், இரு சக்கர வாகனத்தில் வந்த கார்த்திகேயன், 5.56 லட்சம் ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தொகைக்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட தொகை, வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊடகங்களும் கண்காணிப்பு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு மற்றும் அனுமதி வழங்கும் குழு செயல்பட துவக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன.

அதேபோல், அச்சு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், விளம்பரங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும், விளம்பரங்கள் வெளியிட இக்குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.போலீசாருக்கு விடுமுறை 'கட்' தேர்தல் பணியில், மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அமைதியான முறையில், தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் தலைமைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'சட்டசபை தேர்தல் வருவதால் போலீசாருக்கு விடுமுறை இல்லை. இதுதொடர்பாக, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும். மிகவும் அத்யாவசிய தேவைக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்து விழிப்புணர்வு: தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 6ல் நடக்கிறது. வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ரங்கோலி கோலமிடுதல், கையெழுத்திடுதல், வாகன ஊர்வலம் போன்றவை நடத்தப்படுகின்றன. கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பு அருகே, பிளக்ஸ் பேனரில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தொகுதி தேர்தல் அலுவலர் சாந்தாமணி, மதுக்கரை தாலுகா தாசில்தார் நாகராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது.

வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பாலதுரைசாமி, உதவியாளர் மணி மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கையெழுத்திட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...