கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Age லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Age லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 வெளியீடு (Raising the age limit for direct appointment of Teachers - School Education Department (V. Se.1) Ordinance G.O.(Ms) No: 185, Dated: 21-10-2023)...


ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 வெளியீடு (Raising the age limit for direct appointment of Teachers - School Education Department (V. Se.1) Ordinance G.O.(Ms) No: 185, Dated: 21-10-2023)...


>>> பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர் பணி - வயது வரம்பு உயர்வு 


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.


 பொதுப்பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயதாகவும், இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்வு.


ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாணை வெளியீடு.


முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59-லிருந்து, 60-ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56-ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு(The Retirement age for Government servants has been raised from 59 to 60 - Amendment to Basic Rule 56 - G.O.Ms.No:92, Dated:13-09-2021)...


 அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59-லிருந்து, 60-ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56-ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு(The Retirement age for Government servants has been raised from 59 to 60 - Amendment to Basic Rule 56 - G.O.Ms.No:92, Dated:13-09-2021)...


>>> Click here to Download G.O.Ms.No:92, Dated:13-09-2021...

The Superannuation (Retirement Age) Period of Different States in India...



 இந்திய மாநிலங்களில் அரசுப் பணியாளர்கள் & ஆசிரியர்களின்  ஓய்வு வயது...

The Superannuation (Retirement Age) Period of Different States in India...


1.Andhrapradesh. ......60

2.Arunachal Pradesh..58

3.Assam.....................60

4.Bihar........................60

5.Delhi .......................62

(Municipal corporation of delhi60)

6.Goa.........................58

7.Gujarat....................60

8.Hariyana.................60

9.Himachal pradesh..60

10.Jammu.................60

11.Jharkhand............56

12.Karnataka.............60

13.Kasmir...................58

14.Kerala...................56

15.Madhyapradesh.....62

16.Maharastra............58

17.Manipur..................58

18.Meghalaya.............60

19.Mizoram................58

20.Nagaland...............60

21Odissa....................58

22.Punjab...................60

23.Rajasthan..............60

24.Sikkim....................60

25.Tamilnadu..........60

26.Telangana...............58

(CM promised to extend 61)

27.Utterpradesh...........62

28.Uttarakhand............60

29.Chatisgarh..............60

30.West Bengal........... 60

31.Tripura.................60

32.Puducherry...........60

33. Union Government Employees.....60


(இது ஏழாவது ஊதிய குழு அடிப்படையிலான தகவல். தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் ஏழாவது ஊதிய குழுவிற்கு பின் ஓய்வு பெறும் வயதை மாற்றியுள்ளன. அவற்றுள் உறுதிப்படுத்தப்பட்ட  மாற்றங்களை மட்டும் திருத்தியுள்ளோம்.)


அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்? விளக்கம் வேண்டும் - தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு...



 அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு


பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து 


செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், 'ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் எதுவும் விளக்கவில்லை. கொரோனா காரணமாக   


  அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


அதாவது தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள நிலையில் 2020-21-ம் ஆண்டுகளில் ஓய்வுபெற இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாமல் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு  நீதிமன்றத்தில் உரிய பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு - டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு...

 


தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான  அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு  வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாத நிலையில், தற்போது புதிதாக வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது.


இது இயற்கை விதிகளுக்கு எதிரானது. இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர் சமுதாயமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு  தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி  அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அரசுப் பணி நியமனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாண்டுகள் வயது தளர்வு அரசாணை...

 Recruitment - Age Concession to Physically Handicapped (Differently Abled) Persons...

G.O.Ms.No.704 Public (Services – A) Department dated 15.04.1964...

>>> Click here to Download G.O.Ms.No.704 Public (Services – A) Department dated 15.04.1964...


தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு...

 Age of Superannuation of Tamilnadu Government Servants, Teachers, etc., G.O.Ms.No.29, Dated: 25-02-2021...

>>> Click here to Download - G.O.Ms.No.29, Dated: 25-02-2021...


அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...

 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் வயது தளர்வாணை பெற்று தேர்வு எழுதலாம் - CEO Proceedings...

 


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2020-21ஆம்  கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ , மாணவியர்களில் 14 வயதினை நிறைவு செய்யாத மாணாக்கர்க்கு வயது தளர்வாணை கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வயது தளர்வாணை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம்...

>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...