கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்...

 


பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள்  கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 46150/ அ4/ இ1/ 2020, நாள்: 15-03-2021...

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் 

சென்னை-06 


ந.க. எண். 46150/அ4/இ1/2020, நாள். 15.03.2021. 


பொருள்: 


தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் சார்பு. 


பார்வை: 


1. அரசாணை (நிலை) எண். 37, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (அ.வி. IV) துறை, நாள். 10.03.2020. 


2. அரசாணை (நிலை) எண். 116, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள். 15.10.2020. 


3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் எண். 46150/அ4/இ1/2020, நாள். 23.10.2020. 

 


பார்வை (3)ல் காணும் இவ்வலுவலக செயல்முறைக் கடிதத்தின் மீது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது. 


10.03.2020க்கு முன்னர் கணக்குத் தேர்வு பாகம்-1ல் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத, தகுதிகாண் பருவம் முடிக்கப்படாத இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பணியாளர்களின் விவரங்களை சில @முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பாமல் இருப்பது அறிய வருகிறது. அவ்வாறு ஏதும் விடுபட்டிருப்பின் இவ்வலுவலக 23.10.2020நாளிட்ட கடிதத்துடன் அனுப்பப்பட்ட படிவத்தில் (Excel Format) பூர்த்தி செய்து 17.03..2021க்குள் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


இணைப்பு: படிவம் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி). 

பெறுநர் - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 46150/ அ4/ இ1/ 2020, நாள்: 15-03-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும்? தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கம்...

 


பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும். இச்செலவினத்தை புதிய தொழில் முனையங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும் கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(வாட்ஸ் அப் தகவல்)

ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்...

 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது; ஏப்.1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்...




புதிய பென்ஷன் திட்டம் - தனியார் துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அமல் மத்திய அரசு முடிவு...

 தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடரப்பட்ட ‘சரல் பென்ஷன் யோஜனா’ (Saral Pension Yojana) திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சரல் பென்ஷன் திட்டம்: 

அரசு அலுவலங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது போல தனியார் நிறுவனங்களிலும், சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாடு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மூலமாக ‘சரல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தை அரசு அறிவித்தது. இந்த திட்டம் மூலமாக குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதல் பிரீமியம் செலுத்தப்பட வேண்டும்.


இந்த தொகைகளை மாதம்தோறும், மூன்று மாதம், ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தலாம். இது தவிர ஒரு ஆண்டுக்கு மட்டும் செலுத்தும் வசதியும் உள்ளது. அதிகபட்சமாக செலுத்தப்படும் தொகையின் அடிப்படையில் ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர வயது வரம்பு 40 முதல் 80 வரை ஆகும். 

இந்த திட்டம் 2 வகைகளாக உள்ளது. 

முதல் திட்டம்: இந்த திட்டம் மூலமாக செலுத்தப்பட்ட தொகையின்படி ஒருவரது ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும். அவர் இறந்த பின்னர் மொத்த தொகையும் நாமினிக்கு வழங்கப்படும். 

இரண்டாவது திட்டம்: இந்த திட்டத்தின் படி ஓய்வு காலத்திற்கு பிறகு காப்பீட்டுதாரருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம், காப்பீட்டுதாரர் மற்றும் நாமினி இருவரும் இறந்த பின்னர் அவரது சட்டப்பூர்வ வாரிசு ஒருவருக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பின்னர் சரண்டர் செய்து ஓய்வூதியம் பெற முடியும். மேலும் இந்த்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படும். ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் அவர்களுக்கு முழு தொகையும் ஓய்வூதியமாக வழங்கப்படும். தற்போது இந்த திட்டம் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்சென்ட் ஆன ஆசிரியருக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர் - ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்...

 


இன்றைய (16-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பணப்புழக்கத்தில் கவனம் வேண்டும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.


பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

மூத்த சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : மனக்கசப்புகள் குறையும்.


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




மிதுனம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களினால் சுபவிரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தூரத்து உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


திருவாதிரை : இன்னல்கள் குறையும்.


புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் தனித்திறமைகள் புலப்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : துரிதம் அதிகரிக்கும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : தனித்திறமைகள் புலப்படும். 

---------------------------------------




சிம்மம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

புண்ணிய தலங்களுக்கான யாத்திரை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : லாபம் உண்டாகும்.


பூரம் : ஆசிகள் கிடைக்கும்.


உத்திரம் : மாற்றமான நாள். 

---------------------------------------




கன்னி

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

இளைய சகோதரர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செய்யும் பணிகளுக்கான உயர்வுகள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் விரயங்கள் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அஸ்தம் : சோர்வான நாள்.


சித்திரை : விரயங்கள் ஏற்படும். 

---------------------------------------




துலாம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : பொருட்சேர்க்கை ஏற்படும்.


சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.


விசாகம் : சாதகமான நாள். 

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பங்காளி வகை உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். விதண்டாவாத சிந்தனைகளை விடுத்து பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


அனுஷம் : ஆதரவான நாள்.


கேட்டை : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------




தனுசு

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். அறச்செயலுக்காக நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : நன்மையான நாள்.


பூராடம் : புரிதல் உண்டாகும்.


உத்திராடம் : மாற்றமான நாள்.

---------------------------------------




மகரம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவோணம் : உறவு மேம்படும்.


அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும். 

---------------------------------------




கும்பம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

பணியில் மேன்மைக்கான செயல்களை மேற்கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : மேன்மையான நாள்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 16, 2021


பங்குனி 03 - செவ்வாய்

குடும்ப உறுப்பினர்களால் ஆதரவு கிடைக்கும். உபரி வருமானம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் தோன்றும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : சுபவிரயங்கள் உண்டாகும்.


ரேவதி : இழுபறிகள் அகலும்.

---------------------------------------


பள்ளி வயது சிறார்கள் வாகனம் ஓட்டி பள்ளிக்கு வருதல் (Under Age Driving Dangers Minor Ride to School) - ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு...

Proceedings of the Director of School Education Rc.No.01238/ M/ S1/ 2018, Dated: 09-03-2021...

 பள்ளிக் கல்வி - பள்ளி வயது சிறார்கள் வாகனம் ஓட்டி பள்ளிக்கு வருதல் (Under Age Driving Dangers Minor Ride to School) - ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

>>> Click here to Download Proceedings of the Director of School Education Rc.No.01238/ M/ S1/ 2018, Dated: 09-03-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...