கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க உத்தரவு: தமிழக அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி...
டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிப்புக்கு இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை தமிழக அரசு கடந்த 2003 ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. இதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின்படி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரித்து அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2016-ல் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் இயற்றி, அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் பலர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமேயன்றி, இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது'' என 2019-ல் தீர்ப்பளித்தனர்.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும், இல்லையெனில் தலைமைச் செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர், அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.
அறிவித்தபடி ஏப்ரல் 16ல் தொடங்குகிறது பிளஸ் 2 செய்முறை தேர்வு...
பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி திட்டமிட்டபடி செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும், 5ம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே, 31 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே, 3ல் நடக்கவிருந்த மொழிப் பாடத் தேர்வுகள், மே, 31க்கு மாற்றப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும், 16ம் தேதி செய்முறை தேர்வு நடத்தப் படுகிறது. இதற்காக, செய்முறை பயிற்சி வகுப்புகளை, நாளை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
பிளஸ் 2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி, மே, 5ல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. செய்முறை தேர்வு, வரும், 16ம் தேதி முதல், திட்டமிட்ட காலத்தில் நடத்தப்படும். கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், பள்ளி ஆய்வகங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, மாணவர்களின் செய்முறை தேர்வை, எந்த வித புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் CBSE - 10ம் வகுப்பு தேர்வு ரத்து, பிளஸ்2 தேர்வு தள்ளிவைப்பு - OFFICAL PRESS NOTE...
நாடு முழுவதும் சிபிஎஸ்இ - 10ம் வகுப்பு தேர்வு ரத்து, பிளஸ்2 தேர்வு தள்ளிவைப்பு - OFFICAL PRESS NOTE...
>>> Click here to Download CBSE Official Press Release...
காய்ச்சலுடன் தேர்தல் பணி - தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி...
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்த 54 வயதான தலைமை ஆசிரியை உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தலைமையில் நேற்று உயிரிழந்தார் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாக கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியை விடுப்பு அளிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அவரது தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் . தேர்தல் பணியில் இருந்த போதே அவர் உடல் நிலை மோசமானதால் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகி இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...