கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வரும் 30 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய தடுப்பூசி - பள்ளிக் கல்வித்துறை...



 பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 30ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம்போட்டுக் கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'இ - மெயில்' வழியே அனுப்பியுள்ளது. இதற்கிடையில், அனைத்து துறை செயலர்களுக்கும், கலெக்டர்களுக்கும் தலைமை செயலர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'அரசு ஊழியர்களில் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் விபரங்களை வரும், 30க்குள் அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

>>> தகுதிவாய்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யவும், இதற்கான முன்னேற்ற அறிக்கையினை 30.04.2021க்குள் அனுப்பவும் தலைமைச் செயலாளர் கடிதம்...



தமிழகத்தில் அஞ்சலகங்கள் செயல்படும் நேரம் குறைப்பு...



 தமிழகத்தில் அஞ்சலகங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தபால் துறை அறிவிப்பு...


In continuation of this office letter cited above , the following additional guidelines are hereby issued :


All Post office counters in the Circle will function up to 2pm and a notice board may be kept at Post Offices about the revised timings and this may be given wide publicity among public...


>>> Click here to Download the Assistant Director Letter...



தகுதிவாய்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யவும், இதற்கான முன்னேற்ற அறிக்கையினை 30.04.2021க்குள் அனுப்பவும் தலைமைச் செயலாளர் கடிதம்...



 மாநிலத்திலுள்ள தகுதிவாய்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - இதற்கான முன்னேற்ற அறிக்கையினை 30.04.2021க்குள் அனுப்ப வேண்டும் - மாநிலத்திலுள்ள அலுவலகங்களில் SOP யை கடுமையாக பின்பற்றுவது குறித்து அனைத்து துறை செயலாளர்கள் / தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளரின் கடிதம் - With the Endorsement of Director of School Education...


>>> Click here to Download Revenue and Disaster Management Department - Chief Secretary Letter No.13655/ D.M-IV/ 2021-1, Dated: 26-04-2021...


கற்போம் எழுதுவோம் இயக்கம் - பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் - உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இயக்குனர் அறிவுறுத்தல்...

 


பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-21 - கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் - அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சார் பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் - திட்டம் சார் கற்போர்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு - பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 743/ ஆ2/2020, நாள்: 26.04.2021...




CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்...

 


CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்...


புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.



நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 

இதன் ஒரு பகுதியாக 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு மற்றும் பொதுத்தோ்வு வினாத்தாள்களில் புதிய மாற்றங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.


 

ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வு, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள்களில் 30 சதவீதம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகளில் 20 சதவீதம் வரையிலும் திறன் மதிப்பீடு வினாக்கள் இடம்பெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


 

மேலும் அன்றாட வாழ்க்கை தொடா்பாக புதிய வகை திறன் மதிப்பீடு கேள்விகள் இருக்கும். அதே வேளையில் கொள்குறி வகை வினாக்களும் இடம் பெறும். இந்த புதிய மாற்றங்கள் வரும் கல்வியாண்டு ( 2021-2022 ) முதல் அமலுக்கு வரும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.


ஜனவரி 2010 முதல் ஜனவரி 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக (வணிகவியல்) பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் விபரம் கோரி பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் (RTI)உத்தரவு...



 ஜனவரி 2010 முதல் ஜனவரி 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக (வணிகவியல்) பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் விபரம் கோரி பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் (RTI) / துணை இயக்குநர் (மின் ஆளுமை) செயல்முறைகள் ந.க.எண்: 11285/ டபிள்யு3/ இ2/ 2021, நாள்: 20-04-2021...


>>> பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் (RTI) / துணை இயக்குநர் (மின் ஆளுமை) செயல்முறைகள் ந.க.எண்: 11285/ டபிள்யு3/ இ2/ 2021, நாள்: 20-04-2021...



மே 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை...

💥 மே 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை...

💥 முழு ஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் - சென்னை உயர்நீதிமன்றம்...








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...