கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...

 "உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் கொண்டும், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள் - துறைகளின் பெயர் மாற்றம்"


- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.


✍️👉தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


1.         தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.


2.         வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின்  நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.


3.         சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.


4.         மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.


5.         மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.


6.         தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.


7.         செய்தி - மக்கள் தொடர்புத் துறை ‘செய்தித் துறை’யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கட்தொடர்பும் அடங்கியிருக்கிறது.


8.         சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’  என்று வழங்கப்படவுள்ளது.


9.         பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனித வள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது.


10. வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுச் சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.


உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.




தமிழ்நாடு அமைச்சர்களும், துறைகளும் (அமைச்சரவையில் 19 முன்னாள் அமைச்சர்கள்; 15 புதுமுகங்கள்; 2 பெண்கள் - முழு விவரம் வெளியீடு)...

1. முதல்வர் ஸ்டாலின் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, மாற்றுத் திறனாளிகள் நலன்.

2. துரை முருகன் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

3. கே.என். நேரு - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் 

4. இ. பெரியசாமி - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.

5. பொன்முடி - உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்

6. எ.வ. வேலு - பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

7. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை, கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை

8.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை

9.தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்

10. எஸ். இரகுபதி - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

11. சு. முத்துசாமி - வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.

12. கே.ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்.

13. தா.மோ. அன்பரசன் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.

14. மு.பெ. சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.

15. பி. கீதா ஜீவன் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

16. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம், கால்நடை பராமரிப்பு

17. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கஊர்தி சட்டம்

18. கா. ராமச்சந்திரன் - வனத்துறை

19. அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு

20. வி. செந்தில் பாலாஜி - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை

21. ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல்

22. மா. சுப்பிரமணியம் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

23. பி. மூர்த்தி - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்,

24. எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

25. பி.கே. சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை

26. பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை

27. சா.மு.நாசர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

28. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை

30. சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை

31. சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன்,திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி.

32. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை

33. மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை




தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவையின் பட்டியலில் புதிய முகங்கள் 15 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.

இதில் 19 பேர் முன்னாள் அமைச்சர்களாவர்.

ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தாமோ அன்பரசன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதா ஜீவன் ஆகியோர் ஏற்கெனவே 2006 இல் அமைச்சர்களாக இருந்தவர்கள். 

அது போல் திமுக ஆட்சியில் வேறு காலங்களிலும் அதிமுக ஆட்சியிலும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் என்றால் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி ஆகியோராவர்.

 ஆர் காந்தி, மா சுப்பிரமணியன், பி மூர்த்தி, சிவசங்கர், பி.கே சேகர் பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ், மெய்யநாதன், சிவி கணேசன், மனோ தங்கராஜ், மதிவேந்தன், கயல்விழி, நாசர், பழனிவேல் தியாகராஜன், சக்கரபாணி ஆகியோர் அந்த புதுமுகங்களாவர்.

அமைச்சரவையில்  கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இரண்டு பெண் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் கீதா ஜீவன் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். கயல்விழி செல்வராஜ் புதியவர் ஆவார். இவர், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை, தாராபுரம் தொகுதியில் தோற்கடித்தவர். 

அதனாலேயே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கயல்விழி செல்வராஜூக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள க.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராகியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கா.ராமசந்திரன் கூடலூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்று, கதர் வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இரண்டாம் முறையாக 2011-ம் ஆண்டு குன்னூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், 2016-ம் ஆண்டு இவருக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.

தற்போது 2021-ம் தேர்தலில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்ற கா.ராமசந்திரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத்தை 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2006 இல் கதர் வாரியத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருக்கு தற்போது வனத்துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. 

2000 முதல் 2014-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்டச் செயலாளராக இருந்தவர். தற்போது தேர்தல் பணிக்குழுச் செயலாளராக உள்ளார்.

பியுசி பிடித்த க.ராமசந்திரன், மனைவி பேபி, மகன் ஆர்.மதுசூதன் ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் வசித்து வருகிறார்.

முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த  இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கீதா ஜீவனுக்கு சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரித்துறை ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம்...



 மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம்


சென்னை 3

கடலூர் 2

திண்டுக்கல் 2

திருச்சி 2

திருப்பூர் 2

தூத்துக்குடி 2

மதுரை 2

விருதுநகர் 2

விழுப்புரம் 2

புதுக்கோட்டை 2

ஈரோடு 1

கரூர் 1

கன்னியாகுமரி 1

காஞ்சிபுரம் 1

சிவகங்கை 1

திருவண்ணாமலை 1

திருவள்ளூர் 1

நாமக்கல் 1

நீலகிரி 1

ராமநாதபுரம் 1

பெரம்பலூர்1

ராணிப்பேட்டை1

வேலூர் 1


பிரதிநிதித்துவம் பெறாத மாவட்டங்கள் 


திருநெல்வேலி, 

தென்காசி,  

செங்கல்பட்டு,

திருப்பத்தூர்,

கிருஷ்ணகிரி, 

தருமபுரி, 

கள்ளக்குறிச்சி, 

சேலம், 

கோவை, 

அரியலூர், 

மயிலாடுதுறை 

நாகப்பட்டினம்

திருவாரூர்

தஞ்சாவூர்

தேனி

சிறுவர்களுக்கான அறிவியல் உரையாடல்கள்...

அறிவியல் உரைகள் பெரும்பாலும் 18+ வயதினருக்கு தான் அமைகின்றன. அல்லது சிறுவர்களுக்கான அறிவியல் என்பது செயல்பாடுகளில் நின்றுவிடுகின்றன. ஆனால் அறிவியல் உரைகள் என்பது சிறுவர்களுக்கு கிடைப்பதே இல்லை.  அது கண்டிப்பாக ஒரு பிரம்மாண்ட வெளியையும் அறிவியல் பற்றிய ஆழ்ந்த பார்வையையும் உருவாக்கும். வரும்காலத்தில் தான் பயணிக்கும் திசையினை காட்டும். கனவுகளுக்கான விதைகளை ஊற்றுவிக்கும். வெறும் உரைகளாக இல்லாமல் உரையாடல்களாகவும் அமைந்தால் இன்னும் அடுத்த நிலைக்குச் செல்லும். 


இவை தகவல்களை பகிரும் உரைகள் அல்ல. அறிவியலை எப்படி அணுகுவது, எப்படி சிந்திப்பது, எப்படி சிந்தித்தார்கள், அறிவியல் பார்வை என்பது என்ன, அறிவியல் மனப்பான்மை என்பது என்ன? அதனை தக்கவைத்துக்கொள்வது எவ்வாறு போன்றவைகளை உள்ளடக்கியது.


இதன் பின்னணியில் 'அறிவியல் பலகை'யுடன் இணைந்து “சிறுவர்களுக்கான அறிவியல் உரையாடல்கள்” என்ற தலைப்பில் தொடர் நிகழ்வுகள் நடத்த திட்டம். 30-40 நிமிடங்கள் உரை. பின்னர் 15-20 நிமிடங்கள் உரையாடல். பேச இருக்கும் விஞ்ஞானியை / அறிஞரைப் பற்றி நிகழ்விற்கு முன்னரே குறிப்பும் அனுப்பப்படும். 


*இது ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் குழந்தைகளுக்காக அமைந்திடும்


உரைகளும் கலந்துரையாடலும் தமிழில் இருக்கும்.

Register செய்ய தேவையில்லை.


வாருங்கள் புதிய திறப்புகளை திறந்துவிடுவோம்.


முதல் நிகழ்வு : “எவ்வாறு கண்டுபிடிக்கின்றார்கள்?” - த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார், புது தில்லி

மே 9, ஞாயிறு , காலை 11-12


*ஒருங்கிணைப்பு : விழியன்


நிகழ்வு ஏற்பாடு : அறிவியல் பலகை


தொடர்புக்கு : ஸ்ரீகுமார் (9677297733)




மே 6 ம் தேதி முதல் எந்த எந்த கடைகளுக்கு அனுமதி உண்டு, அனுமதி இல்லை - தெளிவான விளக்கம்...

 


வானியல் தொழில்நுட்பம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி சான்றிதழ் பயிற்சி...

 



IIRS has announced a new online course on Online Certificate Course on Space Technology and Applications for School Teachers. This course will be conducted during 31-05-2021 to 04-06-2021. The number of seats for this course are limited and registrations are opened on first-come-first-serve basis - https://www.iirs.gov.in/EDUSAT-News


>>> Click here to Download Announcement Brochure...



அறிவியல் ஆய்வக கருவிகளை (6,7 மற்றும் 8ஆம் வகுப்பு) பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் குறித்த ஆசிரியர் கையேடு - வெளியீடு: DIET தருமபுரி மாவட்டம்...



>>> அறிவியல் ஆய்வக கருவிகளை (6,7 மற்றும் 8ஆம் வகுப்பு) பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் குறித்த ஆசிரியர் கையேடு - வெளியீடு: DIET தருமபுரி மாவட்டம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...