கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 30, 2021



 

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளும், அதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மே 30, 2021



 

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனை மற்றும் வீடு தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : காரிய வெற்றி உண்டாகும்.


ரோகிணி : ஆரோக்கியம் மேம்படும்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

மே 30, 2021



 

எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பாராத வாக்குவாதங்கள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் நிம்மதி ஏற்படும். இளைய சகோதரர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படும்.


திருவாதிரை : வாக்குவாதங்கள் உண்டாகும்.


புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




கடகம்

மே 30, 2021



 

மாணவர்கள் கல்வி தொடர்பான பாடங்களில் திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு சாதகமாக அமையும். எந்தவொரு செயலிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : திட்டமிட்டு செயல்படவும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

மே 30, 2021



 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற மனவருத்தங்களை தவிர்க்க இயலும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களிடம் நிதானமான பேச்சுக்களின் மூலம் லாபம் மேம்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : சிந்தனைகள் தோன்றும்.


பூரம் : லாபம் மேம்படும்.


உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

மே 30, 2021



 

உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து அதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


அஸ்தம் : சுபமான நாள்.


சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

மே 30, 2021



 

குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்துகொள்வீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


சுவாதி : தனவரவுகள் ஏற்படும்.


விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மே 30, 2021



 

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொண்டு சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். தொழில் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


அனுஷம் : இழுபறிகள் அகலும்.


கேட்டை : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------




தனுசு

மே 30, 2021



 

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். திறமைக்கேற்ப செல்வாக்கும், பாராட்டுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

மே 30, 2021



 

நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பங்காளி வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதன் மூலம் லாபம் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : தெளிவான நாள்.


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




கும்பம்

மே 30, 2021



 

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

மே 30, 2021



 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றங்களும், ஆதரவுகளும் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


ரேவதி : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------



இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்...

 


இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்..


மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.


விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன.


ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை.


புதிய விதிகளின்படி குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு: அரசாணைகள் வெளியீடு...

 பள்ளிக் கல்வித்துறையில் 6156 தற்காலிக பணியிடங்களுக்கும், ஆசிரியர் பணியில்லா பணியிடங்களில் பணியாற்றும் 5000 பேருக்கும் மே மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கவித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு, நகராட்சி, உதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள 6156  தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களுக்கு இறுதியாக 2018 முதல் 2020 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



மேற்காணும் இந்த பணியிடங்களில் 1.1.2021 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி  இயக்குநர் அரசுக்கு கருத்துரு  அனுப்பியுள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்துக்கான ஊதிய கொடுப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார். தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், 6156 பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கான ஊதியம் பெற்று வழங்க வசதியாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது.  



மேலும்,   பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு 31.12.2020ல் முடிவடைந்த நிலையில் அந்த பணியிடங்களில் பணியாற்றி வரும் 778 துப்புரவாளர்கள், 494 இரவுக்காவலர்கள் என மொத்தம் 1272 பணியாளர்களின் பணியிடங்களுக்கு மட்டும் 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு  ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை ஏற்று  அரசாணை 47ன் தொற்றுவிக்கப்பட்ட 2999 துப்புரவாளர் பணியிடம் மற்றும் 2001 காவலர் பணியிடம் என மொத்தம் 5000 பணியிடங்களில் 1270 பணியாளர்கள் 2021 மே மாதம் ஊதியம் பெறத் தக்க வகையில்  ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> 5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியிடங்களுக்கு (778 துப்புரவாளர் மற்றும்  494 இரவு காவலர்) மே -2021 மாதத்திற்கான  ஊதிய நீட்டிப்பு ஆணை...


>>> 6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தற்காலிகப் பணியிடங்களுக்கான மே-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...



தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM...



 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM...


கொரானா சிகிச்சை காப்பீடு தொகை திரும்ப பெற கடித மாதிரிகள்...


1 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காப்பீடு தொகை பெறாதவர்களுக்கு முதல் கடிதம்


2  காப்பீட்டு திட்டத்தில் அங்கீகாரம்  இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் காப்பீடு தொகை பெற இரண்டாவது கடிதம்


3) காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று குறைவான தொகை பெற்றவர்கள் கூடுதல் தொகை பெற 3 வது கடிதம்...


இணைக்க வேண்டியவை:

  • NHIS card xerox
  • Estimation xerox copy
  • Bill summary xerox copy
  • Discharge summary xerox copy
  • All Other Bill xerox copy 

இணைத்து அனுப்பி மருத்துவ காப்பீடு தொகை பெறலாம்.


>>> Click here to Download NHIS Reimbursement Model Letter...



>>> G.O.No:391, Dated: 10.12.2018 - NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற்கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்...


+2 & ITI முடித்தவர்களுக்கு CIPET நிறுவனத்தில் பட்டயம் பயில விண்ணப்பிக்கலாம்...




மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் CIPET பிளாஸ்டிக் அச்சு (டிபிஎம்டி), பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் டிப்ளமோ   பயில அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.06.2021


கல்வித் தகுதி: 10 / +2 / ITI


தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில்


கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள PDF LINK👇


https://www.cipet.gov.in/centres/cipet-haldia/downloads/07-05-2021-001/Advertisement.pdf


தமிழகத்தில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு – 3378 காலிப்பணியிடங்கள்- அறிவிப்பு...

 


தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3378 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.


>>> முழு விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...

 



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.BREAKING: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...