கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kendriya Vidyalaya பள்ளி - மாணவர் சேர்க்கை கால அட்டவணை வெளியீடு...

 


Kendriya Vidyalaya பள்ளி - மாணவர் சேர்க்கை கால அட்டவணை வெளியீடு...


கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து கே.வி., சங்கதன் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுதும் உள்ள கே.வி., பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விதிகளின்படி, தகுதி பெற்றவர்களின் முதல் பட்டியல் வரும், 23ம் தேதி வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் ஜூன் 30; மூன்றாவது பட்டியல் ஜூலை 5ல் வெளியிடப்படும். 


முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்களுக்கான பட்டியல் ஜூலை 2ல் வெளியாகும். இவற்றில் மாணவர்கள் சேராமல் காலியாகும் இடங்களுக்கு, ஜூலை 8 முதல், 12 வரை விண்ணப்ப பதிவுகள் நடக்கும். ஜூலை 13 முதல், 16க்குள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


இரண்டாம் வகுப்புக்கு, ஜூன் 24ல் பட்டியல் வெளியாகும். ஜூன் 25 முதல், 30க்குள் மாணவர் சேர்க்கை நடக்கும்.பிளஸ் 1 தவிர, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலியான இடங்களில் ஆக., 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும்.பிளஸ் 1க்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் பதிவுகள் துவங்கி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொறியியல், கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி விளக்கம்...



அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் மொழி இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தொழில்நுட்ப இயக்கக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடக்கும். 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கவுள்ளது. பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு ஒரு பேப்பருக்கு 65ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் பெரியார், காமராஜர் , அண்ணா பல்கலைகழக முறைகேடு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.


12 வகுப்பு தேர்வு ரத்து ஆகியுள்ளதால், மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறித்த முடிவுகள் எடுத்த பின்னரே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும். முதலமைச்சருடன் ஆலோசித்த பின்னர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவெடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும்" எனக் கூறினார்.

ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலம் நிரப்பப்பட உள்ளது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-06-2021...



 ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) ஊரக வங்கிகளில்  கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள்: 10729


1.பணி: Office Assistant (Multipurpose)


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


2.பணி: Officer Scale I


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


3.பணி: Officer Scale II


கல்வித்தகுதி:


(Assistant Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


Officer Scale-II General Banking Officer(Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Officer Scale-IISpecialist Officers(Manager): 


Information Technology Officer: Electronics / Communication / Computer Science / Information Technology பிரிவில் பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Chartered Accountant: CA


Law Officer: சட்டப்பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Treasury Manager: CA/MBA பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Marketing Officer: MBA பட்டப்படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Agricultural Officer: Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agricultural Engineering/ Pisciculture பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 21- 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.


4.பணி: OfficerScale-III (Senior Manager)


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 21 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர்/ இதர பிற்படுத்தப்பட்டோர்  பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்ந்தெடுக்கும் முறை:


இணையவழி தேர்வு


விண்ணப்பக்கட்டணம்:


Officer (Scale I, II & III):


பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர் : ₹175. 


பொது/இதர பிற்படுத்தப்பட்டோர்: ₹850


Office Assistant (Multipurpose):


பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படை வீரர் : ₹175. 


பொது/இதர பிற்படுத்தப்பட்டோர்: ₹850


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் https://www.ibps.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில்  விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.06.2021


மேலும் விவரங்களுக்கு : https://www.ibps.in/wp-content/uploads/Advt-_CRP-RRB-X_final_final.pdf


ஜூன் 14ஆம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி...

 


வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.


ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள்   ஆன்லைனில்  தொடரும்.


14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு.


கொரோனா 3வது அலை எப்படியிருக்கும், யாரை பாதிக்கும், செய்ய வேண்டியது என்ன?



 கொரோனா 3வது அலை எப்படியிருக்கும், யாரை பாதிக்கும், செய்ய வேண்டியது என்ன?


நன்றி: பிபிசி தமிழ்


நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது. உண்மை என்ன?


மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும், உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும், முன்பை விட மிக வேகமாகப் பரவும் என்றெல்லாம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.


ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்கள் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியிருக்கின்றன.


தமிழ்நாட்டில் கடந்த 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக, நாடு முழுவதும் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.


தவிர்க்க முடியாததா மூன்றாவது அலை?


"தனி நபர் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படா விட்டாலும், தடுப்பூசியை போதிய அளவில் வழங்க முடியாவிட்டாலும் மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது" என்கிறார் தமிழக அரசின் மருத்துவ ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகானந்தம்.


"மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு அலையிலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கு புதிதாக உருவாகும் வைரஸ் திரிபுகளே முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றன. இரண்டாவது அலையின்போதும் புதிய திரிபுகள்தான் அதிகம் பேரைப் பாதித்தன. அந்த வகையில் பிரேசில் நாட்டில் இருந்து B.1.1.28.2 என்ற புதிய திரிபு கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற திரிபுகள் அடுத்த அலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன " என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக நோயியல் பேராசிரியர் சித்ரா.


"உலகின் பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது அலை தாக்கியிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலையைப் பார்த்திருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய ஸ்பேனிஷ் ஃப்ளூ பெருந்தொற்றுக் காலத்திலும் பெரிய அளவில் மூன்று அலைகள் உலக நாடுகளைத் தாக்கியிருக்கிறது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்றிலும் மூன்றாவது அலையை எதிர்பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது" என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் டி.வி.வெங்கடேஸ்வரன்.


பிரேசில் மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய திரிபை வெள்ளெலிகளில் பரிசோதனை செய்ததில் அவை உடல் எடையைக் குறைப்பதுடன், மூச்சுக் குழாயில் பல்கிப் பெருகும் என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டார்.


"இந்தியாவில் அதிகமாகப் பரவி வரும் டெல்டா வகையைத் தவிர பிற திரிபுகள் வருவதன் காரணமாக மூன்றாவது அலை வருவது நிச்சயம். இந்த ஆண்டுக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆயினும் உறுதியாகக் கணிக்க முடியாது" என்கிறார் தொற்றுநோய் நிபுணர் ராம்கோபால்


மூன்றாவது அலையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?


"குறைந்தபட்சம் 50 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டால் மட்டுமே கொரோனாவின் மூன்றாவது அலையைத் தடுக்க முடியும்" என்று கூறுகிறார் குகானந்தம். அரசிடம் இது வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் கடந்த 7-ஆம் தேதி வரை சுமார் ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் மட்டுமே. இது மொத்த மக்கள் தொகையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவு.


ஒட்டுமொத்தமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் 23 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் 4.66 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்திருக்கிறது. நாட்டின் எந்தப் பெரிய மாநிலத்திலும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்தைத் தாண்டவில்லை.


"மருத்துவ கட்டமைப்பில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு, தடுப்பூசி போடுவதில் பின்தங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. மூன்றாவது அலை வராமல் தடுப்பதில் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்கிறார் மருத்துவர் ராம்கோபால்


கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா 63 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறது. அங்கு பாதிப்பு குறைவதற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கும் இதுவே முக்கியமான காரணம்.


ஆனால் இந்தியாவில் பொதுமுடக்கங்கள் மூலமாகவே பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தளர்வுகள் அளிக்கும்போது தன்னிச்சையாகவே தொற்றும் அதிகரிக்கத் தொடங்கிவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏற்கெனவே பிரேசில் போன்ற நாடுகளில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.


மூன்றாவது அலை எப்படியிருக்கும்?


அண்மையில் கேரள சட்டப்பேரவையில் பேசிய அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "மூன்றாவது அலையில் மிக வேகமாகப் பரவும் புதிய கொரோனா திரிபு அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது" என்று பேசினார். யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அதிகப் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்றும் வீணா ஜார்ஜ் கூறினார்.


"மூன்றாவது அலையில் தடுப்பூசி போடாதவர்கள் இணைநோய் இருப்பவர்கள், வயதானவர்கள் ஆகியோரே அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது" என்கிறார் பேராசிரியர் சித்ரா.


மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டில் இருந்து பெரும்பாலான குழந்தைகள் இதுவரை வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டார்கள். அவர்களிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு ஆற்றல் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பரவியிருக்கிறது.


முதல் அலையில் வயதானவர்களும் இரண்டாவது அலையில் இளம் வயதினரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் மக்கள் பரவலாக அஞ்சுகிறார்கள்.


ஆனால் இது முற்றிலுமாக உண்மையில்லை என்று மறுக்கிறார் வெங்கடேஸ்வரன்.


"கொரானாவின் இரு அலைகளிலும் வயது வாரியாகப் பாதிக்கப்பட்டோரின் புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது. இவற்றைக் கொண்டு பார்க்கும்போது வயது ரீதியாகப் பாதிக்கப்பட்டோரின் விகிதங்களில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை" என்கிறார் அவர்.


முதல் அலை, இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டோரின் சராசரி வயதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் தெரியவில்லை என்றும் வெங்கடெஸ்வரன் தெரிவித்தார்.


"முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதில் அனைத்து வயதுடையோரும் அடங்குவர். இளைஞர்களின் உயிரிழப்பு அதிகமாகத் தெரியவந்ததால், அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் மருத்துவர் ராம்கோபால்


இனி எத்தனை அலை வந்தாலும் அது முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின் மாதிரியாகவே இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.


அதே நேரத்தில் முதல் இரண்டு அலைகளைவிட பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் மத்திய அரசின் ஆய்வுப் பிரிவில் இருக்கும் ஒரு அதிகாரி கூறுகிறார்.


மூன்றாவது அலையைத் தடுப்பதில் சவால்கள் என்னென்ன?


தடுப்பூசி பற்றாக்குறை, புதிய வைரஸ் திரிபுகளின் பெருக்கம், கிராமப்புறங்களில் வலுவற்ற சுகாதாரக் கட்டமைப்பு, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க வேண்டிய கட்டாயம் போன்றவை அடுத்த கொரோனா அலையைக் கையாள்வதில் சவால்களாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.


புதியவகைத் திரிபுகள் உருவாவதை உடனடியாகக் கண்டறிந்து கூறும் வகையிலான மரபீனி வரிசையைக் கண்டறியும் ஆய்வகங்கள் இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளன என மத்திய அரசின் ஆய்வுப் பிரிவில் பணியாற்றும் ஒரு அதிகாரி கூறுகிறார்.


இந்தியாவில் இதற்காக மொத்தம் 10 "Genome sequencing" ஆய்வகங்கள் இருக்கின்றன. இவையும் டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே அமைந்திருக்கின்றன. புதிய வகைக் கொரோனா திரிபுகளை விரிவாகக் கண்டறிந்து அவற்றைப் பரவ விடாமல் கட்டுப்படுத்துவதற்கு கூடுதலாக ஆய்வகங்கள் அவசியம் என்ற கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது.


தமிழகத்தில் இவ்வகை ஆய்வகத்தை அமைக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்திருக்கிறார்.


பிபிசி தமிழிடம் பேசிய ரவிக்குமார், "வைரஸ் திரிபுகளை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பு உத்திகள் தமிழ்நாட்டில் இதுவரை வகுக்கப்படவில்லை. இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இப்போது நாம் வைரஸ் திரிபுகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கு பெங்களூரு போன்ற வெளிமாநில நகரங்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. போர்க்கால அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்று ஒருபோதும் மகிழ்ந்துவிடக்கூடாது என்ற பாடத்தை கொரோனாவின் இரண்டாவது அலை கற்றுத் தந்திருக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் ஆக்சிஜன் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் அடுத்த அலையை எதிர்கொள்ள உதவும் என்கிறார் சித்ரா.


சிகிச்சைகளை முறைப்படுத்தும் வகையில் முக்கியமான பல அம்சங்களை கொரோனா இரண்டாவது அலை உணர்த்தியிருப்பதாகக் கூறும் மருத்துவர் ராம்கோபால், "தேவையற்ற மருந்துகள்" பயன்படுத்தப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இன்றைய (13-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 13, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 13, 2021



எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.


ரோகிணி : கவலைகள் குறையும்.


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 13, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். தந்தை வழி தொழில் சார்ந்த முயற்சிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்களின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


திருவாதிரை : பேச்சுவார்த்தைகள் நிறைவேறும்.


புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 13, 2021



மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் உள்ள நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் தோன்றும். கடன் தொடர்பான பிரச்சனைகள் எதிர்பாராத உதவிகளின் மூலம் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 13, 2021



உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : புரிதல் அதிகரிக்கும்.


பூரம் : தடைகள் அகலும்.


உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




கன்னி

ஜூன் 13, 2021



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வருவாய்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




துலாம்

ஜூன் 13, 2021



தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்



சித்திரை : கவலைகள் நீங்கும்.


சுவாதி : ஆதரவு கிடைக்கும்.


விசாகம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




விருச்சகம்

ஜூன் 13, 2021



வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். புத்தகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : கீர்த்தி உண்டாகும்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 13, 2021



கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் பொறுமை வேண்டும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றமும், லாபமும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : பொறுமை வேண்டும்.


பூராடம் : உபாதைகள் ஏற்படும்.


உத்திராடம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 13, 2021



பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : நம்பிக்கை மேம்படும்.


அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 13, 2021



உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகளும், சேமிப்புகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.


சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 13, 2021



குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அது சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவின் மூலம் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : இழுபறிகள் அகலும்.


ரேவதி : அமைதியின்மை உண்டாகும்.

---------------------------------------



அரசு /அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ( 14.6.2021) முதல் பள்ளிக்கு வருகை புரிந்து என்ன என்ன பணிகள் செய்ய வேண்டும் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 


அரசு /அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ( 14.6.2021) முதல் பள்ளிக்கு வருகை புரிந்து என்ன என்ன பணிகள் செய்ய வேண்டும் - மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6733/ ஈ5/ 2020, நாள்: 11-06-2021...


>>> மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6733/ ஈ5/ 2020, நாள்: 11-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group IV - Question Paper - 12-07-2025

  TNPSC குரூப் 4 - வினாத்தாள் - 12-07-2025 TNPSC Group IV - Question Paper - 12-07-2025 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...