கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 06-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  06-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:



💥  தமிழ் - இயல் 1 - இலக்கணம் - வினைமுற்று - https://youtu.be/XBtygylF6hM



 💥 ஆங்கிலம் - Unit 1 – Supplementary Jim Corbett. A Hunter Turned Naturalist - https://youtu.be/UxFNATMQJ8M



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - இரு எண்களுக்கு இடையே விகிதமுறு எண்களைக் காணுதல் -  https://youtu.be/cHSvppsohNE



💥 அறிவியல் - அலகு 17 - தாவரவியல் - தாவர உலகம் - பூஞ்சைகள் - https://youtu.be/GqQICnqLbNw?t=3608



💥 சமூக அறிவியல் - அலகு 1 - குடிமையியல் - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? - பாகம் 3 -  https://youtu.be/hWaQlb-WTY0


செப்டம்பர் 1 (01-09-2021) முதல் நேரடி வகுப்பாக பள்ளிகள் திறப்பு ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்...

 


01-09-2021 முதல் நேரடி வகுப்பாக பள்ளிகள் திறப்பு ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்...


மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.


 பள்ளிகள் செல்லாமல் மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். 


மேலும் , இணையம் மூலமாக நடத்தப்படும் Online வகுப்புகள் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1 ம் தேதி முதல் 9 , 10 , 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ( Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது..


மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


>>> "செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


இன்றைய (07-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 07, 2021



அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் படிப்படியாக குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.


பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 07, 2021



உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. கல்வி கற்கும் நிலைகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : திருப்தியான நாள்.


ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 07, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்களின் மூலம் லாபம் மேம்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவின் மூலம் மேன்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


திருவாதிரை : லாபம் மேம்படும்.


புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 07, 2021



மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடனிருப்பவர்களை சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. கால்நடைகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூசம் : இன்னல்கள் குறையும்.


ஆயில்யம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 07, 2021



உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதை உறுத்தி கொண்டிருந்த விஷயங்களிலிருந்து தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களில் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மகம் : புத்துணர்ச்சியான நாள்.


பூரம் : தாமதங்கள் குறையும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 07, 2021



கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செய்தொழிலில் அபிவிருத்திக்கான கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 07, 2021



வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தொழிலில் மாற்றங்களை செய்வீர்கள். மனதில் சுதந்திர உணர்வு மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளை செயல்வடிவம் மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். பேச்சுத்திறமைகளின் மூலம் லாபம் உண்டாகும். பெண்களுக்கு உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 07, 2021



பயணங்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். பெண்களுக்கு அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். பலவிதமான குழப்பங்களிலிருந்து நிலையான முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வீடு மற்றும் மனை சார்ந்த வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : அறிமுகம் உண்டாகும்.


அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 07, 2021



எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். சிறுதொழில் புரிபவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : காலதாமதம் ஏற்படும்.


பூராடம் : இடமாற்றம் உண்டாகும்.


உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 07, 2021



வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெண்களுக்கு உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : லாபம் மேம்படும்.


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 07, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். பெண்கள் எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : புதுவிதமான நாள்.


சதயம் : தனவரவுகள் கிடைக்கும்.


பூரட்டாதி : புரிதல் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 07, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். பொருள் சேர்ப்பதில் திறமைகள் வெளிப்படும். தெய்வீகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எண்ணிய இலக்கை அடைவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நுட்பமான அறிவு திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.


ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------


பத்தாம் வகுப்பு(SSLC) / மேல்நிலை முதலாமாண்டு(+1), September 2021 துணைத் தேர்வு(Supplementary Exam) அறிவிக்கை, Time Table வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 011220/ எப்1/2021, நாள். 06.08.2021...

 


பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு, September 2021 துணைத் தேர்வு அறிவிக்கை, Time Table வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 011220/ எப்1/2021, நாள். 06.08.2021...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 011220/ எப்1/2021, நாள். 06.08.2021...


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (Diploma In Elementary Education Examination), September 2021 அறிவிக்கை, Time Table வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 005519/சி1/2021, நாள். 06.08.2021...

 


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (Diploma In Elementary Education Examination), September 2021 அறிவிக்கை, Time Table வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 005519/சி1/2021, நாள். 06.08.2021...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 005519/சி1/2021, நாள். 06.08.2021...


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) - 04-08-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்(Revised Instructions to Candidates)...



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

விண்ணப்பதார்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள், அரசாணைகள், தேர்வாணைய  நடைமுறை விதிகள்...


விண்ணப்பதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரைகள் தொகுப்பு...


04.08.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன...

செயலாளர்


Introduction

From time to time, the Tamil Nadu Public Service Commission issues instructions to  applicants appearing for the various competitive examinations conducted by the Commission. 

Keeping  in mind the welfare of the applicants, the Commission’s instructions to  applicants are issued incorporating the latest Acts, Rules, Government Orders, Commission’s  Rules of Procedure, etc.

The Commission’s Instructions to Applicants have now been revised and re-issued with  effect from 04.08.2021. 

 Secretary



>>> Click here to Download TNPSC instructions to Candidates, the latest Acts, Rules, Government Orders, Commission’s  Rules of Procedure, etc...



முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 09.08.2021 முதல் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்(Reopening of Higher Education Institutions) - உயர் கல்வித் துறைச் செயலாளர் அறிவிப்பு (Higher Education Department Principal Secretary Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021)...



 முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 09.08.2021 முதல் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம் - உயர் கல்வித் துறைச் செயலாளர் அறிவிப்பு...


அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் 09.08.2021 முதல் கல்லூரிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் நேரில் வருகை புரிய வேண்டும் - உயர்கல்வித் துறை செயலாளர் உத்தரவு...


>>> Click here to Download Higher Education Department Principal Secretary Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021...



Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021...

From

Dr.D.Karthikeyan, l.A.S.,

Principal Secretary to Government.


To

The Director of Technical Education, Chennai - 25.

The Director of Collegiate Education, Chennai - 6.

The Registrars of all Universities under the aegis of

Higher Education Department.


Sir/Madam,

Sub: Higher Education Department - Reopening of Higher Education Institutions - Reg.

•••••

The Government has announoed that all courses, except first year, conducted ln Arts and Science Colleges, Engineering Colleges and Polytechnic Colleges shall commence through online mode from 09.08.2021 for the academic year 2021-22.

2. You are hereby instructed to ensure that all Government / Government Aided / Self Financing Arts and Science Colleges, Engineering Colleges and Polytechnic  Colleges under your control follow the above instructions scrupulously.

The Covid Protocol and SOP prescribed by Government from time to time should be followed in the campus and it is also instructed that the faculties of the above institutions shall attend the college on all working days without fail.

Yours faithfully,

*****

For Principal Secretary to Government.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...