கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வட்டார வளமையங்களில் பணியாற்றுகின்ற வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) நிறுத்தி வைக்கப்பட்ட நிலையான பயணப்படியை வழங்குதல்(FTA) குறித்து மாநில திட்ட இயக்குனர்(SPD) அவர்களின் செயல்முறைகள்(Proceedings) ந.க.எண்:1728/அ1/ஒபக/2021, நாள்:09-08-2021...



 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் வட்டார வள மையங்களில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான பயணப்படியை (FTA) ஜூன் 2021 மாதத்தில் வழங்கப்பட இருக்கின்ற சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டி மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், ஆனால் தாங்கள் ஏப்ரல் 2021 மாதத்தில் முழுமையாகவும் ஜூன் 2021 மாதத்தில் , ( 7ஆம் தேதி முதல் 30 விழுக்காடு பணியாளர்களுடன் - பொது போக்குவரத்து இல்லாத பெருந்தொற்று காலத்திலும் தங்களது சொந்த வாகனத்தில் பயணம் செய்து) பணியாற்றியதாகவும் குறிப்பிட்டு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த நிலையான பயணப்படியை ( FTA ) தொடர்ந்து வழங்கிடவும் , மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையினை திரும்பப் பெறவும் பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளனர்.



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிரந்தர பணியாளர்கள் அவர்கள் பள்ளி பார்வை மற்றும் அலுவலகப் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் போது நிலையான பயணப்படி ( FTA ) விதிகளின்படி வழங்கப்படுகிறது . ( ஒரு நாள் பார்வைக்கு ரூ .60 / -ம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 15 பார்வை இருப்பின் 15 x 60 =ரூ.900/-ம் எத்தனை நாட்கள் பார்வை இருந்தாலும் அதிகபட்சமாக ரூ.900/- மாதப் பயணப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவர்கள் அளிக்கும் பார்வை அறிக்கையின் ( Visit report ) அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் அடுத்த மாதத்தில் நிலையான பயணப்படி வழங்கப்படுகிறது.



கடந்த 05.06.2021 அன்று மாநில திட்ட இயக்கக நிதி பிரிவிலிருந்து மின்னஞ்சல் மூலம் நிரந்தர மற்றும் தொகுப்பூதியம் பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கும் ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் , அவர்கள் பணியாற்றியிருப்பின் அதனை உறுதி செய்து வழங்கிடவும் , வரும் மாதங்களில் வழக்கம் போல ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றிய காலத்தில் பயணம் மேற்கொண்டு இருப்பின் அதனை உறுதி செய்து பயணப்படியை விதிகளின்படி வழங்கிட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


>>> மாநில திட்ட இயக்குனர்(SPD) அவர்களின் செயல்முறைகள் (Proceedings) ந.க.எண்:1728/அ1/ஒபக/2021, நாள்:09-08-2021...



பள்ளிகள் திறப்பு - ஓரிரு நாட்களில் முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...



 செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 50% மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும் தனியாரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என கூறியிருந்தார். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என தெரிவித்தார். கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என கூறினார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அதோடு பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது.


Bluetooth பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு எழுதியவர் கைது...


 உத்தரபிரதேசத்தில் ‘ப்ளூடூத்’ பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு எழுதி மாட்டிக் கொண்ட பெண் தேர்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் சார்பில்  ஆசிரியர் தேர்வு  நடைபெற்று வருகிறது. நேற்று  ஜான்பூர் மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களில் தேர்வுகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தேர்வின் போது மின்னணு கருவியைப் (ப்ளூடூத்) பயன்படுத்தி பெண் தேர்வர் ஒருவர் தேர்வு எழுதிய போது கையும் களவுமாக பிடிப்பட்டார். அவர், மின்னணு சாதனத்தை தனது காதில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்வு எழுதி கொண்டிருந்ததை தேர்வுத்துறை மேற்பார்வையாளர்கள் கண்டறிந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த பெண் தேர்வரை போலீசிடம் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.


இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காதில் பொருத்தப்பட்ட மின்னணு கருவியை பயன்படுத்தி தேர்வு எழுதிய பெண் தேர்வர் ஒருவர் சிக்கியுள்ளார். விசாரணையில், அவர் ஏற்கனவே பாலியில் நடந்த மற்றொரு தேர்வில் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த பெண் தேர்வரின் பெயர் சுனிதா மோர்யா. போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணிடமிருந்த மின்னணு கருவியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருப்பினும், தேர்வு எழுதிய போது அந்த பெண் மின்னணு கருவியை பயன்படுத்தி எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.


அந்த பெண் தேர்வரிடம் போலீசாருடன், எங்களது தேர்வுக்கு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர். நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில், திருட்டுத்தனமாக ‘ப்ளூடூத்’ காதில் மாட்டிக்கொண்டு கமல் ஆள்மாறாட்டம் செய்து காப்பி அடிப்பது போல்,  உத்தரபிரதேச பெண் தேர்வரும் ப்ளூடூத் மூலம் வெளியாளிடம் கேள்விக்கான விடையைக் கேட்டு எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்தி பிரச்சார சபா(Dhakshina Bharat Hindi Prachar Sabha) வழங்கும் சான்றிதழ்கள் தகுதியானவை: யுஜிசி செயலர் அறிவிப்பு...



 இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானவை என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.


இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்துஉயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பாடங்களை கற்றுத் தரவும்,தேர்வு நடத்தி பட்டங்கள் வழங்கவும் சென்னையில் உள்ள தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபாவுக்கு சட்ட விதிமுறைகளின்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


அதனால், இந்தி பிரச்சார சபாசார்பில் வழங்கப்படும் அனைத்துகல்விசார் சான்றிதழ்களையும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அங்கீகாரத் தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதுதொடர்பாக உரியவழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்களை சில கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுத்ததால், இந்த உத்தரவை யுஜிசி வெளியிட்டதாக கூறப்படுகிறது.


Airtel நிறுவனம் அதன் மிகவும் மலிவான Monthly Prepaid Recharge Plan ஆன ரூ.49 Planஐ நிறுத்தியது - இனி ரூ.79 பிளான் ரீசார்ஜ் மட்டுமே கிடைக்கும்...



 பார்தி ஏர்டெல் நிறுவனம்  ஜூலை 28, புதன்கிழமை முதல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவின் மலிவு விலை ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49-ஐ நிறுத்திக்கொண்டதோடு மட்டுமில்லாமல் அதற்கு பதிலாக ரூ.79-ஐயும் அறிவித்துள்ளது.


இந்த திருத்தம் ஜூலை 29, வியாழக்கிழமை முதல்  நடைமுறைக்கு வரும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.


 ரூ.49 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.38.52 டால்க் டைம், 100MB டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியை வழங்கியது.


ஆக ஏர்டெல் பயனர்கள் இனிமேல் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அணுக முடியாது. அதற்கு பதிலாக ரூ.79 திட்டம் பயர்களுக்கான மிகவும் மலிவு விருப்பமாக இருக்கும்.


ரூ.79 ரீசார்ஜ் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?

ரூ.79 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.64 டாக் டைம், வினாடிக்கு 1 பைசா உள்ளூர் / எஸ்.டி.டி அழைப்பு விகிதத்தில் கட்டணம், 106 நிமிடங்கள் வெளிச்செல்லும் அழைப்புகள் மற்றும் 200 எம்பி டேட்டா போன்ற நன்மைகளை அதே 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் வழங்கும்.


முதலில் இலவசமாக கிடைத்தது; தற்போது நிறுத்தப்பட்டுள்ளது!

55 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்பட்டு, கடந்த மே மாதத்தில் நாட்டில் அதிகரித்த COVID-19  இடையே வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக ரூ.49 இலவசமாகவும் மற்றும் ரூ.79 ஆனது டபுள் நன்மைகளையும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது ஏர்டெல் தனது மலிவான மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.49-ஐ நிறுத்தியுள்ளது.

இந்நிறுவனம் கடந்த வாரம்தான், சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தியது. ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் நிறுத்தியது.

ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தி சில்லறை வாடிக்கையாளர்களுக்கான மிகக் குறைந்த பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமாக ரூ.999-ஐ கொண்டு வந்தது. முன்னதாக இந்த இடத்தில் ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் இருந்தது.

இதற்கிடையில், Vi (முன்னர் வோடபோன் ஐடியா) ஏர்டெல்லின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதன் சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தியது.

ஆனால் ஏர்டெல் நிறுவனத்தை போலல்லாமல், வி அதன் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.38 டாக் டைம் மற்றும் 100 எம்பி டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஆயினும், வி நிறுவனம் விரைவில் மேலும் சில மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதாவது எதிர்வரும் நாட்களில் ஏர்டெல் போன்றே திருத்தத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


NTSE 2020-21 STAGE-1 தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல், அவர்கள் பெற்ற MAT, SAT, மொத்த மதிப்பெண்கள் வெளியீடு - இவர்கள் அனைவரும் NTSE STAGE -2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் (National Talent Search Examination -2020 - 2021 - Stage 1 - Selection List - Non Disability & Disability Candidates List)...



 NTSE 2020-21 STAGE-1 தேர்வில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல், அவர்கள் பெற்ற MAT, SAT, மொத்த மதிப்பெண்கள் வெளியீடு - இவர்கள் அனைவரும் NTSE STAGE -2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்...

Cut - off:

General 166 above

OBC 150 above

SC 137 above

ST 84 above


>>> Click here to Download National Talent Search Examination -2020 - 2021 - Stage 1 - Selection List - Non Disability & Disability Candidates List...


கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 09-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  09-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - அலகு 2 - திருக்குறள் - பகுதி 1 - https://youtu.be/6uCJzd2HK7A?t=1801



 💥 ஆங்கிலம் - Unit 3 -Sir Issac Newton - The Ingenious Scientist - Grammar –Prepositions - https://youtu.be/0TToUo3WINE



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - விகிதமுறு எண்களை அறிதல் - எண் கோட்டில் குறித்தல், தசம எண்ணாக மாற்றுதல் -  https://youtu.be/Ayc-J2KHPPk



💥 அறிவியல் - அலகு 17 - தாவரவியல் - தாவர உலகம் - பிரையோபைட்டா, டெரிடோபைட்டா - https://youtu.be/Fu-ihdpAM1g



💥 சமூக அறிவியல் - அலகு 1 - குடிமையியல் - குடிமக்களும், குடியுரிமைகளும் - பாகம் 1 -  https://youtu.be/TD4a_s9ewGM


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...