கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசின் நூறாவது நாள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை - செய்திக் குறிப்பு(Press Note) எண்:47, நாள்:14-08-2021...


சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை:


ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது; முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான் கேட்டது, அந்த சத்தம் நிம்மதியாக இருக்கவிடவில்லை, லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும், அரவணைப்பாக இருந்ததும்தான் பெரிய சாதனையாக கருதுகிறேன்.


100 நாள் ஆட்சியில் சிறந்த பெயரை பெற்றுள்ளோம்; அதனை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும்; திமுக ஆட்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்துள்ளது.


வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என ஏமாற்ற தயாரில்லை; வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவோம்.


வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்து வரும் நாட்களில் 2 மடங்காக உழைப்போம்- சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.


>>> அரசின் நூறாவது நாள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை - செய்திக் குறிப்பு எண்:47, நாள்:14-08-2021...


தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை(Agriculture Budget - 2021-2022) தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - முக்கிய அம்சங்கள்...

 


வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.


நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.


உணவு தானிய பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி, சூர்யகாந்தி பயிர்களில் தேசிய அளவில் முதல் 3 இடங்களில் தமிழகம் இடம்பெற வழிவகை.


வேளாண் தொகுப்பு திட்டம், மானாவாரி நில 

மேம்பாடு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட 16 திட்டங்கள் மூலம் இலக்கை அடைய வழிவகை.


சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.


தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.


நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.


தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.


கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.


இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை.


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்.


தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்.


நெல் ஆதார விலை அதிகரிப்பு:


நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை சன்ன ரகத்திற்கு ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.


கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறிய அளவில் 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.


மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் கொண்ட தளைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.


மூலிகை செடிகளை பெருக்கும் திட்டம் ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.


வேளாண்மையின் பெருமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள சென்னையில் மரபுசார் வேளாண் அருங்காட்சியகம்.


பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.


தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்.


76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.


 பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.


பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.


காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம். 


அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம்.


குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.


கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு; இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.


35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காவிரி டெல்டாவில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


சென்னை கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.


கிருஷ்ணகிரியில் 150 ஏக்கரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிடு.


சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70%  மானியத்தில் நிறுவப்படும். 


இத்திட்டம் ரூ.114 கோடியே 68 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.


நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்படுத்த எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை அமைக்கப்படும்.


ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடி செலவில் நவீன குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.


“பண்ருட்டியில் பலா சிறப்பு மையம்"- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.


விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு.


வட்டார அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் ரூ.23 கோடி செலவில் கொள்முதல்.


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.


20000 ஹெக்டேர் தென்னந்தோப்புகளில் சொட்டுநீர் பாசனமுறை நடப்பாண்டில் ஏற்படுத்த திட்டம்.


இந்த ஆண்டு 17 லட்சம் தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் தரப்படும்.


>>> 2021-2022 வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்...



பள்ளிக் கல்வித் துறை - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.08.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்டரங்கில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்:13-08-2021 மற்றும் கூட்டப்பொருள்...



 பள்ளிக் கல்வித் துறை -  அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.08.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்டரங்கில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்:13-08-2021 மற்றும் கூட்டப்பொருள்...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்:13-08-2021 மற்றும் கூட்டப்பொருள்...



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 13-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான சமூகஅறிவியல் பாடக் காணொளிகள்(Social Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 13-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமூகஅறிவியல் பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - பேசும் ஓவியம் – கதை - முயற்சி திருவினை ஆக்கும் - https://youtu.be/KW8kvaILcnk?t=2977



💥 இரண்டாம் வகுப்பு - பேசும் ஓவியம் – கதை - நேருஜி - https://youtu.be/_6VKaNf7WZY?t=5544



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 4 – பாதுகாப்பு - பகுதி 3 -  கூர்மையான ஆயுதம் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் பாதுகாப்பு - https://youtu.be/Pk9JuM9ubgM



💥 நான்காம் வகுப்பு - அலகு 1 – பல்லவ மன்னர்கள், குறுநில மன்னர்கள், சங்ககால அரசு நிர்வாகம், பெண்களின் மரியாதை, விருந்தோம்பல் - பகுதி 2 - https://youtu.be/r5eTidj6g_g



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 4 – வளிமண்டலம் - காலநிலை காரணிகள் - வெப்பநிலை, அழுத்தம், காற்று - https://youtu.be/3ReoPifLd2Q



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 13-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard) சமூக அறிவியல் பாடக் காணொளிகள்(Social Science Videos)...

 


கல்வித் தொலைக்காட்சியில் 13-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடக் காணொளிகள்...



💥 ஆறாம் வகுப்பு - அலகு 4 – தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் -  https://youtu.be/_6VKaNf7WZY?t=1943



💥 ஏழாம் வகுப்பு -  அலகு 2 – வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் - https://youtu.be/KW8kvaILcnk?t=8387



கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 13-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  13-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 3 - தமிழர் மருத்துவம் - https://youtu.be/A937Po9Xun0



 💥 ஆங்கிலம் - Unit 4 – Poem – A Thing of Beauty - https://youtu.be/KW8kvaILcnk?t=6577



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - விகிதமுறு எண்கள் பண்புகளை அறிதல் - பகுதி 4 -  https://youtu.be/L3GG9_XwTqs



💥 அறிவியல் - அலகு 17 - தாவரவியல் - தாவர உலகம் - வகைப்பாட்டியல் - https://youtu.be/OodyH7S697E



💥 சமூக அறிவியல் - அலகு 3 - குடிமையியல் - சமய சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் -  https://youtu.be/KeSMotXChqg



ஒன்பதாம் வகுப்பிற்கான(9th Standard), அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...


ஒன்பதாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...


>>> தமிழ் வழி - குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...


>>> English Medium - Reduced Syllabus...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? Teacher stabbed to death in government school near Thanjavur - what is t...