கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்ப்பு...

தலைமை செயலகத்தில் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பது குறித்தும் , கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் , பள்ளி ,கல்லூரிகள் திறப்பு மற்றும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.


கேரளாவிலிருந்து தமிழகத்திலுள்ள எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனால் அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா?


 அல்லது ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


 அதேசமயம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்பது சற்று தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








ஹார்ட் ஃபுல்னெஸ் கட்டுரை எழுதும்(Heart Fullness Essay Writing) நிகழ்ச்சி 2021 - 14 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முழு விவரங்கள்...



 ஹார்ட் ஃபுல்னெஸ் கட்டுரை எழுதும்(Heart Fullness Essay Writing) நிகழ்ச்சி 2021 - 14 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முழு விவரங்கள்...


>>> போட்டி பற்றிய விவரங்கள்...


>>> கட்டுரை சமர்ப்பிக்கும் வழிமுறை...


பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 7898/இ3/2020, நாள்: 28.08.2021(School Reopening - Do's & Dont's - Karur CEO Proceedings) பள்ளி திறக்கும் நாள் : 01.09.2021...



 >>> பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 7898/இ3/2020, நாள்: 28.08.2021...


பள்ளி திறக்கும் நாள் : 01.09.2021...


வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு(Overseas Manpower Corporation) அறிவிப்பு...


வெளிநாடுகளில் நர்ஸ், ஓட்டுநர், சமையல்காரர், வீட்டுவேலை, மெஷின் ஆப்பரேட்டர் போன்ற வேலைகளில் சேர வேண்டுமா? 


044-22505886 / 044-22502267 என்ற எண்களுக்கு அழைக்கலாம் - முனைவர் சி. ந.மகேஸ்வரன் இ.ஆ.ப. தகவல்...


வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...





எந்தெந்த நாட்களில் வகுப்புகள்? கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued...



 கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued) வெளியீடு...


>>> Click here to Download G.O.(Ms).No:164, Dated: 27-08-2021...


கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியான நிலையில் , அதில் சுழற்சி முறையில் வகுப்புகள் , சில மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் என்று கூறப்பட்டிருக்கிறது.


அந்தவகையில் , எந்தெந்த நாட்களில் , யாருக்கெல்லாம் வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறித்த விவரம் வருமாறு :



இன்றைய (30-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஆகஸ்ட் 30, 2021



வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : ஆதாயம் உண்டாகும். 


பரணி : இழுபறிகள் அகலும்.


கிருத்திகை : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 30, 2021



மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


ரோகிணி : முயற்சிகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 30, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் மூலம்  எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.


திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.


புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 30, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 30, 2021



நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : தீர்வு கிடைக்கும்.


பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 30, 2021



வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் அகலும். தனவரவுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் : மந்தநிலை அகலும்.


அஸ்தம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.


சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 30, 2021



வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தை வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : நிதானம் வேண்டும்.


சுவாதி : இழுபறியான நாள்.


விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 30, 2021



உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 30, 2021



எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : தனவரவுகள் உண்டாகும்.


பூராடம் : திருப்திகரமான நாள்.


உத்திராடம் : சுபிட்சம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 30, 2021



வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 30, 2021



உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



அவிட்டம் : மந்தமான நாள்.


சதயம் : பிரச்சனைகள் குறையும்.


பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 30, 2021



திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.


உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து(IRTT) பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படுகிறது. பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை G.O. (Ms) No.165, Dated : 27.08.2021 வெளியீடு - Erode, Institute of Road Transport and Technology Engineering College is being converted into a Government Engineering College. 35% reservation for children of employees - G.O. (Ms) No.165, Dated: 27.08.2021 Released...



 ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து(IRTT) பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படுகிறது. பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை G.O. (Ms) No.165, Dated : 27.08.2021 வெளியீடு...


>>> Click here to Download G.O. (Ms) No.165, Dated : 27.08.2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...