கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (BRTEs Transfer Counselling Application Format - School Education Department)...

 


BRTE பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு....


ஆசிரிய பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.


பொது மாறுதல்


 2021-2022 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில மற்றும் மாவட்டத்திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - சார்பாக.


பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்குதல் , அதனைத் தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வையில் கண்டுள்ளபடி நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது...


>>> ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (BRTEs Transfer Counselling Application Format -  School Education Department)...

இன்றைய (13-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 13, 2021



இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். சந்தேக உணர்வுகளினால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : சிந்தித்து செயல்படவும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

செப்டம்பர் 13, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், தொழில் சார்ந்த உதவிகளும் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : கலகலப்பான நாள்.


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 13, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.


திருவாதிரை : நெருக்கடிகள் மறையும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 13, 2021



பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் சாதகமாக நிறைவுபெறும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 13, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். தாயாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாள வேண்டும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 13, 2021



வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : வெற்றிகரமான நாள்.


அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 13, 2021



மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வாழ்க்கைத்துணைவருடன் குறுகிய தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : புரிதல் மேம்படும்.


சுவாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


விசாகம் : ஒற்றுமை ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 13, 2021



இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : இழுபறிகள் அகலும்.


அனுஷம் : மேன்மையான நாள்.


கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 13, 2021



மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 13, 2021



விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க இயலும். சுபகாரியங்களில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.


திருவோணம் : மேன்மையான நாள்.


அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 13, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மற்றும் ஆசைகள் பிறக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : ஆசைகள் பிறக்கும்.


பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 13, 2021



விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனம் விரும்பிய நெருக்கமானவர்களுடன் பொழுதுகளை கழிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.


உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------


இன்று(12-09-2021) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒரு மாத காலத்திற்குள் ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்(Teachers involved in vaccination camp work today can take one day Compensation Leave within a month - Pudukottai CEO)...

 


இன்று(12-09-2021) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒரு மாத காலத்திற்குள் ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்(Teachers involved in vaccination camp work today can take one day Compensation Leave within a month - Pudukottai CEO)...


>>> புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் குரல் ஒலிப்பதிவு தகவல்...

நீட் தேர்வு வினாத்தாள் ( NEET 2021 Exam Question Paper)...



>>> நீட் தேர்வு வினாத்தாள் ( NEET 2021 Exam Question Paper)...

NEET 2021 - Tentative- Key Answer...

 


>>> Click here to Download NEET 2021 - Tentative- Key Answer...

தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி...

 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி...



பாரதியார் நினைவு தினம் - தமிழ்நாடு அரசின் 14 முக்கிய அறிவிப்புகள்...



 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டு நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.



அது பற்றிய முழு விவரங்கள்:


1. மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ' பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.




2.பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.




3.மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த திரு. சீனி. விசுவநாதன் அவர்களுக்கும். பேராசிரியர் ய. மணிகண்டன் ஆய்வாளர் அவர்களுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.




4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.




5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும் பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிப்படும்.




6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.




7.உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்தப்படும். 8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி 'திரையில் பாரதி' என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.




 9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.




10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.




11. உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.




12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 




13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.




14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.


எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...