கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு 04-02-2022 அன்றும், 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 07-02-2022 அன்றும் முன்னறி அடைவுத்தேர்வு - திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Pre Achievement Test for 6,7,8 Standard Students on 04-02-2022 and 1st to 5th Standard Students on 07-02-2022 - Proceedings of Tirupur District Chief Educational Officer)...
ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் தாய் ஒன்றியத்தில் பராமரிக்கப்படும் முன்னுரிமை விவரங்கள் கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Asking Priority details maintained in the Mother Block of Secondary Grade Teachers who have left the Block in Surplusand are scheduled to work in Other Block - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/ இ1/ 2021, நாள்: 02-02-2022...
கடந்த ஆண்டுகளில் பணிநிரவலில் போது வேறு ஒன்றியங்களுக்கு செனறு தாய் ஒன்றியத்தில் முன்னுரிமை பேணும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை இன்று 02.02.2022 மாலைக்குள் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம் - தமிழ்நாடு - தொழில்நுட்பப் பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் - பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 52600/ ஐ-இ2/ 2021, நாள்: 01-02-2022 & விண்ணப்பப் படிவம் ( National Foundation for Teachers' Welfare Fund - Tamil Nadu - Issuance of Scholarships to the Children of Teachers in Technical Studies Diploma / Degree for the academic year 2021-22 - Proceedings & Application Forms by the Commissioner of School Education)...
இன்றைய (02-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 02, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ரகசியங்களை வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் உண்டாகும்.
பரணி : உற்சாகமான நாள்.
கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 02, 2022
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். முதலீடு தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 02, 2022
மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வாழ்க்கைத்துணைவர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : தெளிவு பிறக்கும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 02, 2022
அரசு சார்ந்த செயல்பாடுகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். வியாபார விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உதவிகளில் கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 02, 2022
வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மந்தமான நாள்.
பூரம் : ஆசைகள் பிறக்கும்.
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 02, 2022
தம்பதியருக்குள் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்களின் மீதான ஆர்வம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : முடிவு கிடைக்கும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 02, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் உயர் கல்வி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் எண்ணியவை நிறைவேறும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 02, 2022
மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 02, 2022
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வியாபார பணிகளில் புதிய வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 02, 2022
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நேர்மறையான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆசை அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
திருவோணம் : புத்துணர்ச்சியான நாள்.
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 02, 2022
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் தோன்றும் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். இன்னல்கள் நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 02, 2022
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : புதுமையான நாள்.
உத்திரட்டாதி : இழுபறிகள் மறையும்.
ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
உயர் தொடக்கவகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி 03-02-2022 முதல் ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 001731/ பிடி1/ இ2/ 2022, நாள்: 01-02-2022 (Learning Outcomes Strengthening Training for Upper Primary Teachers Postponement from 03-02-2022 - Date to be announced later - Proceedings of the Commissioner of School Education)...
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் முறையில் திறன்மேம்பாட்டுப் பயிற்சி நடத்தத் திட்டமிட்டுள்ளதால் 3.2.22 முதல் நடைபெற இருந்த கற்றல் விளைவுகள் பயிற்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஆணையரின் செயல்முறைகள்...
02.02.2022 Primary EVS training வழக்கம்போல் நடைபெறும். 03.02.2022 முதல் நடைபெற இருந்த Upper Primary Learning Outcomes Training தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய (01-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 01, 2022
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : முடிவு கிடைக்கும்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : இழுபறியான நாள்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 01, 2022
செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : தனவரவு மேம்படும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 01, 2022
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் தோன்றும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 01, 2022
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : வெற்றி உண்டாகும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 01, 2022
வேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் மனதில் புதிய மாற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 01, 2022
சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : தடைகள் குறையும்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 01, 2022
சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். கலை சார்ந்த அறிவு மேம்படும். எந்தவொரு செயலிலும் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். தன்னம்பிக்கையான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.
சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.
விசாகம் : நிம்மதியான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 01, 2022
பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். காதில் அணியும் ஆபரணங்களின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அனுஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 01, 2022
விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : நெருக்கடியான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 01, 2022
வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆசை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : முயற்சிகள் மேம்படும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 01, 2022
வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 01, 2022
பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
பூரட்டாதி : தடைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
ரேவதி : புதுமையான நாள்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - தமிழ்...