கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்புப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை (G.O.Ms.No.14, Dated: 01-02-2022) வெளியீடு - இணைப்பு: 33 வரையறுக்கப்பட்ட விடுப்புகளின் பட்டியல் (Thaipoosam declared as public holiday and has been removed from the List of Restricted Leave - Enclosure: List of 33 Restricted Holidays - G.O. Released)...



>>> தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்புப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை (G.O.Ms.No.14, Dated: 01-02-2022) வெளியீடு - இணைப்பு: 33 வரையறுக்கப்பட்ட விடுப்புகளின் பட்டியல் (Thaipoosam declared as public holiday and has been removed from the List of Restricted Leave - Enclosure: List of 33 Restricted Holidays - G.O. Released)...

நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு (Ration shops working hours change - Government of Tamil Nadu order)...



தமிழகம் முழுதும் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 2.30 மணி நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தழிகம் முழுதும் நியாய விலை கடைகள் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிறத்துள்ளது. அதன்படி அரசு பிறப்பித்த உத்தரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதற்கு முன்பு சென்னை மற்றும் புறநகரில் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை செயல்பட்டு வந்த நியாய விலை இனி மேற்கண்ட நேரங்களில் செயல்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, பெரும்பாலான நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கடை செயல்படும் நேரம் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை என்றும், கடை ஊழியர்கள் கடை திறக்கும் நேரம், கடைகளை திறந்து செயல்படுத்த வேண்டிய நெறிமுறைகளை குறித்த பயிற்சி அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடைகள் வேலை நேரம் குறித்த தகவல்களை குடும்ப அட்டைதாரர்கள் பார்க்கும் வண்ணம் நியாய விலைக் கடை முன்பு காட்சி படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சியில் மார்ச் மாதம் ஒளிபரப்பாகும் வகுப்பு மற்றும் பாடவாரியான கால அட்டவணை (Kalvi TV - March 2022 Month Telecast Schedule Details - Cue Sheet)...



>>> கல்வி தொலைக்காட்சியில் மார்ச் மாதம் ஒளிபரப்பாகும் வகுப்பு மற்றும் பாடவாரியான கால அட்டவணை (Kalvi TV - March 2022 Month Telecast Schedule Details - Cue Sheet)...

இன்றைய (02-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 02, 2022



தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




அஸ்வினி : இழுபறிகள் மறையும்.


பரணி : முயற்சிகள் கைகூடும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 02, 2022



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். மறைமுகமான திறமைகளின் மூலம் ஆதாயமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். சுபவிரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : ஆதாயமான நாள்.


மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 02, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், மந்தத்தன்மையும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். வியாபார பணியில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : மந்தமான நாள்.


திருவாதிரை : நெருக்கடிகள் ஏற்படும்.


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 02, 2022



சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்களும், காலதாமதமும் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சபை சார்ந்த துறைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வரவுகளில் கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.


பூசம் : நிதானம் வேண்டும்.


ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 02, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்




மகம் : அறிமுகம் கிடைக்கும்.


பூரம் : திருப்தியான நாள்.


உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 02, 2022



வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திரம் : உயர்வு உண்டாகும்.


அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சித்திரை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

மார்ச் 02, 2022



குழப்பமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.


சுவாதி : நம்பிக்கை பிறக்கும்.


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------






விருச்சிகம்

மார்ச் 02, 2022



குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார ரீதியான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தவறிப்போன சில பொருட்களை பற்றிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மறதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : முடிவு கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

மார்ச் 02, 2022



எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : முயற்சிகள் கைகூடும்.


பூராடம் : பொறுப்புகள் கிடைக்கும்.


உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------





மகரம்

மார்ச் 02, 2022



விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

மார்ச் 02, 2022



உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சில மாற்றங்களை செய்வீர்கள். மனம் விட்டு பேசுவதன் மூலம் குழப்பம் குறையும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.


சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூரட்டாதி : குழப்பம் குறையும்.

---------------------------------------






மீனம்

மார்ச் 02, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோக பணியில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வெற்றிகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



 

பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : லாபகரமான நாள்.


ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------


TNPSC - குரூப் 2 (GROUP II) மற்றும் II A தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்...



>>> TNPSC - குரூப் 2 (GROUP II) மற்றும் II A தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்...

இல்லம் தேடி கல்வி - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழு அமைத்தல், பணிகளை வரையறை செய்தல், மாதாந்திர சந்திப்புகள் நடத்துதல் மற்றும் மையம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுக்காக தன்னார்வலர்கள் அணுக வேண்டியவர்கள் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Illam Thedi Kalvi - District and Block Level Committees, Defining Tasks, Conducting Monthly Meetings and Authorities to be approached by Volunteers to Access Center-Based Problems - Letter from the State Project Director) ந.க.எண்: 449/ C7 / இதேக/ ஒபக / 2021-2, நாள்: 28-02-2022...

 


>>> இல்லம் தேடி கல்வி - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழு அமைத்தல், பணிகளை வரையறை செய்தல், மாதாந்திர சந்திப்புகள் நடத்துதல் மற்றும் மையம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுக்காக தன்னார்வலர்கள் அணுக வேண்டியவர்கள் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Illam Thedi Kalvi - District and Block Level Committees, Defining Tasks, Conducting Monthly Meetings and Authorities to be approached by Volunteers to Access Center-Based Problems - Letter from the State Project Director) ந.க.எண்: 449/ C7 / இதேக/ ஒபக / 2021-2, நாள்: 28-02-2022...



இன்றைய (01-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 01, 2022




அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : முன்னேற்றமான நாள். 


பரணி : சிந்தனைகள் மேம்படும்.


கிருத்திகை : லாபகரமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 01, 2022




வியாபார பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். வாழ்க்கை துணைவர் வழியில் உதவி கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



கிருத்திகை : மாற்றமான நாள். 


ரோகிணி : உயர்வு உண்டாகும்.


மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 01, 2022




உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.  பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.


புனர்பூசம் : ஆதரவான நாள்.

---------------------------------------





கடகம்

மார்ச் 01, 2022




வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய முடிவு காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். 


பூசம் : விரயம் உண்டாகும்.


ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும். 

---------------------------------------





சிம்மம்

மார்ச் 01, 2022




சமூகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  பயணம் தொடர்பான எண்ணம் கைகூடும். தடைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூரம் : நெருக்கம் அதிகரிக்கும். 


உத்திரம் : எண்ணம் கைகூடும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 01, 2022




எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். கனிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : உதவி கிடைக்கும். 


அஸ்தம் : அனுகூலமான நாள். 


சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

மார்ச் 01, 2022




நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் நிர்வாகத்திறமை வெளிப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சலனம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



சித்திரை : திறமைகளை அறிவீர்கள். 


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். 


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 01, 2022




புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : வெற்றி கிடைக்கும். 


அனுஷம் :  மாற்றங்கள் ஏற்படும்.


கேட்டை : அனுகூலமான நாள்.

---------------------------------------





தனுசு

மார்ச் 01, 2022




மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் படிப்படியாக குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி கற்கும் நிலைகளில் மாற்றம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : தன்னம்பிக்கை மேம்படும்.


பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


உத்திராடம் : திருப்தியான நாள்.

---------------------------------------





மகரம்

மார்ச் 01, 2022




உயர்நிலை கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனை மற்றும் கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் அன்பை பெறுவீர்கள். தைரியம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


திருவோணம் : கலகலப்பான நாள். 


அவிட்டம் : அன்பு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

மார்ச் 01, 2022




மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம்  உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


சதயம் : அனுபவம் உண்டாகும்.


பூரட்டாதி : குழப்பம் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

மார்ச் 01, 2022




வாக்கு சாதுரியத்தின் மூலம் மேன்மை அடைவீர்கள். விவேகமான சிந்தனைகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : மேன்மையான நாள். 


உத்திரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...